Monday, March 16, 2026

    தமிழ் மொழி தனித்துவமானது . இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டது. ஒரு சொல்லுக்கு பல  பொருண்மைகள் உண்டு. ஒரு பொருளுக்கு பல சொற்களும் உண்டு. இது எல்லா மொழிகளுக்கும் பொதுவானது என்றாலும் தமிழ் மொழியின் தனித்துவம் மேலானது . மெய்ஓட்டுக்களை அல்லது எச்சங்களைச் சேர்த்து ஒரே சொற்றொடர் இருவேறு பொருளுரைக்கும் தன்மையை நுட்பமாக தவிர்த்துக் கொள்கின்றார்கள்.எ.கா  "தங்க வீடு  வேண்டும்" என்று ஒருவர் சொன்னாலே அது தங்கத்தாலான வீட்டையும் குறிக்கும் , குடியிருப்பதற்கு தேடும் வீடாகவும் இருக்கும் . பொதுவாக ம் உடன் முடியும் பெயர்ச்சொற்கள் பெயரடையாக மாறும் போது இந்த ம் நீக்கமுறும் .  தங்கத்தாலான வீடு -> தங்கம் வீடு  -> தங்க வீடு

தங்குவதற்கான வீடு -> தங்க வீடு .

  தகரம்  -- > தகர  வீடு

பிளாட்டினம் --->பிளாட்டின வீடு 

 ஈயம்  --->  ஈய வீடு 

கற்பூரம்  ---> கற்பூர வீடு

செங்கல்---> செங்க  வீடு 

 ஆனால்  பெயர்ச் சொல் உயிர் மெய் எழுத்துக்களுடன் முடிந்திருந்தால் பெயர்ச் சொல்லே பெயரடைச் சொல்லாக மாற்றமின்றி பயன்படுத்தப் படுகின்றது  பித்தளை---> பித்தளை வீடு,  இரும்பு --->  இரும்பு வீடு , வெள்ளி --->  வெள்ளி  வீடு

தங்கத்தாலான வீடு என்பதே காலப்போக்கில் தங்க வீடு என்று குறுக்கமுற்று குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும் 

" வேலை கேட்டான்" செய்வதற்கு வேலை கேட்டான் என்றும் , வேலைக்(Arrow)  கேட்டான் என்றும் பொருள்படும்  முன்னதில் மெய்யொற்று தவிர்க்கப் படுவதாலும் பின்னதில் மெய்யொற்று இணைவதாலும் சொற்றொடரின் பொருள் நுட்ப்பமாய் வேறுபடுத்தப்படுகின்றன 

Monday, March 17, 2025

 


பழங்காலத்தில்  தமிழ்  தூய மொழியாக ,பிற மொழிகளின் தாக்கமின்றி அணைத்து மக்களின் பயன்பாட்டு வழக்கில் இருந்துவந்திருக்கிறது . கிராமப்புறத்து பெண்கள் கூட எதுகை மோனையுடன் கவிதை மூலம் செய்தி சொன்னார்கள் . எதிர்ப்பாட்டின் மூலம் கருத்தைத் தெரிவித்தார்கள் . தாலாட்டு ,ஒப்பாரி  எல்லாம் தனி இலக்கியம் . உலகில் எம்மொழியிலும் இல்லாத ஒன்று . 

சமஸ்கிருதம் மொழி  புகுந்தபோது அது தமிழ்மொழியைப் பார்த்து பொறாமைப்பட்டு  அதை சீரழிக்க நினைத்து செயல்பாட்டிருக்கவேண்டும் . வேதம் ,கீதை போன்றவற்றிலுள்ள நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்ள  தமிழர்கள் ஆர்வம் காட்டியபோது   சமஸ்கிருத எழுத்துக்கள் மொழியில் திணிக்கப்பட்டன .மொழியின் மரபு சிதைந்தது . அப்போது ஸ்டாலின் வந்தாரு , பஸ் ஸ்டாப் தோன்றியது ,ஜாதகம் கணித்தார்கள், சஷ்டி விரதம் இருந்தார்கள் . தூய தமிழ்ப்பற்றாளர்கள் மொழியின் தனித்துவத்தை ப்பாதுகாக்கப் போராடினார்கள் .எங்கும் தமிழ் எதிலும் தமிழ் கண் விழித்துப் பார்த்தது . ஸ்டாலின் தூய தமிழுக்குள் வர மறுக்கின்றது . பஸ் பேருந்தானது, சம்ஸ்கிருத எழுத்துக்களை நீக்கிவிட்டு புழக்கத்திலுள்ள சொற்களுக்கு மறுவடிவம் கொடுத்தார்கள் . ஆங்கிலம் ஆண்ட போது மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை நிலைப்படுத்திக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் தமிழோடு ஆங்கிலத்தையும் சேர்த்துப் பேசுவதை ப்பெருமையாகக் கருதினார்கள் . டயம் என்ன ஆச்சு ? ரெம்ப டயடாக இருக்கேன் , இந்த அட்ரஸ் தெரியுமா ? பேங்க் போகணும் , டிரைவர் சார் பஸ்ஸை நிறுத்துங்க . மொழியால் பெருமை கொள்ளும் நாம் இதை எப்படி அனுமதிக்கின்றோம் ? இ ப்ப கைபேசி வந்தவுடன் எழுத்துப் பிழைகளும் சேர்ந்துகொண்டன. திணிக்கப்படாமல் புகுந்த மொழிகளால் ஏற்பட்ட சேதாரத்தையே புதுப்பித்துக்கொள்ள முடியவில்லை . இன்னுமொரு மொழி படையெடுத்தல் நாம் என்ன செய்வோம் ? 


Tuesday, August 6, 2024

Dear all readers

 I request the readers to visit my you tube channel - Thavakkai Academy of Creative Thinking and Skill Development , which I hope will be useful to students of all age group. The posts are in different subjects like recreational mathematics, chemical elements, Problems with chess board, problems with Magic square, Research in Tamil language, moral guidance to have peaceful life etc., 

Thanking you

Dr.M.Meyyappan