Saturday, July 5, 2014

எங்கள் தமிழ் வெல்லும்

மண்ணில்லாமல் 
பயிர் செய்ய நினைத்தாய்  
மழையும் நின்று போனது
உண்ண ஒரு வாய் நீரில்லை தோழா! 

கலை இல்லாமல் 
தொழில் செய்ய நினைத்தாய் 
நேர்மை நிறம் மாறிப் போனது 
நேயமும் மறந்து நெடுநாள் ஆனது தோழா!

அடிவாரமில்லாமல் 
கட்டடம் கட்ட நினைத்தாய் 
அங்கே வாழ நினைத்தவன் 
அங்கேயே புதைந்து போனான் தோழா!

நூலில்லாமல் 
துணி நெய்ய நினைத்தாய் 
ஞ்செல்லாம் பறந்து போனது 
நிர்வாணமே எல்லோருக்கும் மிஞ்யது  தோழா! 

மொழியில்லாமல் 
வளம்பெற நினைக்கின்றாய் 
முன்னேற்றம் இல்லையென்றால் கவலையில்லை
வாழ்க்கையே இல்லாமற்போனால் என்செய்வது தோழா?  

தாய் மொழி என்பது அன்பு 
தமிழ் மொழி என்பது அறிவு 
தாய் மொழி என்பது உணர்வு 
தமிழ் மொழி என்பது உறவு

தாய் மொழி என்பது பற்றுமை
தமிழ் மொழி ஒற்றுமை
இவை இரண்டும் இணையாவிட்டால் 

இல்லை மூவறமும் தோழா