வளரும் அறிவியல் தமிழ்
வினைஞர் என்றால் வினை யாற்றுவதில் வல்லவர் என்று
பொருள் .சில பெயரடைகளைக் கொண்டு இதிலிருந்து
துணைச் சொற்களைப் பெறலாம் .
மயிர் வினைஞர் - நாவிதன்
கல் வினைஞர் - சிற்பி
தங்க வினைஞர் - பொர்க் கொல்லர் /தட்டர்
இரும்பு வினைஞர் - கொல்லர் /கம்மார்
பூச்சு வினைஞர் - வெள்ளை அடிப்பவர்
வினையர் என்ற சொல்லும் வழக்காற்றில் உள்ளது .
கொலை வினையர் என்ற சொல் கொலைத் தொழில்
செய்பவரைக் குறிப்பிட திருவள்ளுவரால் பயன்
படுத்தப்பட்டுள்ளது .கையர் என்பது கையை
உடையவர் ,அறியர் என்பது அறிவுடையவர்
என்பதைப் போல வினையர் என்பது வினையை
உடையவர் என்பதுதானே ஒழிய வினையில்
வல்லவர் இல்லை. வினையர், வினைஞர் போன்ற
சொற்களை பொருளில் நுட்ப வேறுபாட்டுடன்
பயன்படுத்தலாம்.
நர் விகுதிச் சேர்க்கை பொதுவாகப் பொதுப்பால்
விகுதியாகவே பயனில் உள்ளது. இது இகர ஈற்று ,
உகர ஈற்று பெயரடிகளுடன் சேருவதாக
எடுத்துக்காட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.
உளி நர் - எண்ணுபவர் செருநர் - படைவீரர்
பொருநர் - பறை வாசிப்போன்
ஒல்லுநர் - நண்பர்
வல்லுநர் - வல்லமை உடையவர்
எனினும் நர் விகுதியை இகர ,உகரஈற்று வினையடி
களுடனும் சேர்த்து புதிய சொற்களைப் படைக்கலாம்.
இந்த அணுகுமுறை ஏற்கனவே பின்பற்றப்படுகிறது
கூட்டு - கூட்டுநர்
ஓட்டு - ஓட்டுநர்
பெறு - பெறுநர்
அனுப்பு - அனுப்புநர்
விடு - விடுநர்
நடத்து - நடத்துநர்
பெருக்கு - பெருக்குநர்
Director என்ற சொல்லை இயக்குநர் எனத் தமிழ் படுத்தலாம்.
ஆனால் directorate என்ற சொல் இயக்குநரகம் என்று மாறுவதால் ,இயககுனர் என்றும் இயககுனரகம் என்றும் மொழிபெயர்ப்பு செய்யலாம் .இது மொழி
மரபுகளின் வரம்பிற்கு உட்பட்டதே . மேலும் அன், அள்,அர்
என்ற பாலுணர்த்தும் விகுதிகளைப் போல இதையும்
நன் ,நள்,நர் என்று பாலுணர்த்தும் விகுதிகளாக்கிக்
கொள்ளலாம் .
நர் விகுதியும் புதிய சொர்க்களைப் படைக்க காத்துக்
கொண்டிருக்கிறது
உழுநர் - உழவர்
கழுநர் -
கழிப்பிடங்களைக் கழுவுவோர்
அறுநர் - நெற்கதிர்களை அறுப்போர்
ஒடுநர் - ஓட்டப் பந்தைய வீரர்
உளவுநர் - துப்பறிபவர்
வெட்டுநர் - மரம் வெட்டி
நர் விகுதி தொழில் செய்வோரைக் குறிப்பிடும்
சிறப்புச் சொற்களில் மட்டும் வருகிறது. இதனால்
இவ் விகுதியின் பயன்பாட்டை நாம் பேரளவில்
அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது எனலாம்.
வெளுநர் - வண்ணான்
மல்லுநர் - மற்போர் புரிபவர்
கள்ளுநர் - மது அருந்துபவர்
வில்லுநர் - அம்பெய்துவதில் வல்லவர்
சூழுநர் - முற்றுகையிடுபவர்
சுடுநர் - துப்பாக்கியால் சுடுபவர்
மாளுநர் - மடிவோர் வெல்லுநர் - வெல்வோர்
வீழுநர் - தோற்பவர் தொல்லுநர் - தொல்பொருள் ஆய்வாளர்
ஞர்,நர் விகுதிச் சேர்க்கையால் தமிழுக்குத்
தனிச் சொற்கள் கிடைப்பதோடு ,பாலைக் குறிப்பிட்டுச்
சொல்லவும் எளிமையகின்றது