வெவ்வேறு விகுதிச் சேர்க்கையால் ஆண்பால் - பெண்பால் உணர்த்தும் வழிமுறைகள்
1 'அன் ' ஆண்பால் விகுதிக்கு 'இ ' பெண்பால் விகுதியாகக்
கொள்ளுதல்
அரக்கன் -அரக்கி செவிடன் - செவிடி தலைவன் - தலைவி
நாயகன் - நாயகி திருடன்- திருடி மாணவன் - மாணவி
பாடகன்- பாடகி குருடன் - குருடி மாதவன் - மாதவி
வஞ்சகன் -வஞ்சகி பாட்டன் - பாட்டி செல்வன்- செல்வி
வஞ்சகன் -வஞ்சகி பொன்னன் - பொன்னி புதல்வன் - புதல்வி
கள்ளன் - கள்ளி வில்லன்- வில்லி தேவன் தேவி
கிழவன் - கிழவி
காதலன் - காதலி கூனன் - கூனி
குமரன் - குமரி
மாமன்- மாமி
அரசன்- அரசி
௨.'அன்' ஆண்பால் விகுதிக்கு 'த்'உடன்பாடு மெய்யுடன்
இகரத்தைப் பெண்பால் விகுதியாகக் கொள்ளுதல்
முடவன்- முடத்தி மறவன் - மறத்தி
குறவன் - குறத்தி ஒருவன் - ஒருத்தி
உழவன் -உழத்தி குயவன் - குயத்தி
3 'அன் ' ஆண்பால் விகுத்திகு 'ச்' உடன்பாடு மெய்யுடன்
இகரத்தைப் பெண்பால் விகுதியாகக் கொள்ளுதல்
பறையன்- பறைச்சி ஊமையன் -ஊமைச்சி
புலையன் - புலைச்சி மருத்துவன் - மருத்துவச்சி
இடையன் - இடைச்சி தமிழன்- தமிழச்சி
4 'அன் ' ஆண்பால் விகுதி சேர்ந்த 'காரன்' என்ற
விகுதிக்கு சி விகுதி சேர்ந்த 'காரி'யைப் பெண்பால் விகுதியாகக் கொள்ளுதல்
பால்காரன் - பால்காரி கடைக்காரன் - கடைக்காரி
சமையல்காரன் - சமையல்காரி வீட்டுக்காரன் - வீட்டுக்காரி
தோட்டக்காரன் -தோட்டக்காரி சொந்தக்காரன் - சொந்தக்காரி
காவல்காரன் - காவல்காரி கடன்காரன் - கடன்காரி
5 . 'அன் ' என்ற ஆண்பால் விகுதிக்கு 'அள்' விகுதியைப்
பெண்பால் விகுதியாகக் கொள்ளுதல்
மகன்-மகள்
அவன்-அவள்
நல்லவன் - நல்லவள்
6 . 'அன் ' என்ற ஆண்பால் விகுதிக்கு 'யை' விகுதியைப்
பெண்பால் விகுதியாகக் கொள்ளுதல்
ஓவியன் - ஓவியை
ஆசிரியன் - ஆசிரியை
நடிகன்- நடிகை
7 'வ்' உடன்பாடு மெய்யுடன் கூடிய 'அன் ' என்ற ஆண்பால் விகுதிக்கு 'மி 'விகுதியைப் பெண்பால்
விகுதியாகக் கொள்ளுதல்
சிறுவன் - சிறுமி
8 .' ir' உடன்பாடு மெய்யுடன் கூடிய 'அன் ' என்ற
ஆண்பால் விகுதிக்கு இடையில் ஆ உடன் எழ 'ங்
'உடன்பாடு மெய்யுடன் 'கனை' என்ற விகுதியைப்
பெண்பால் விகுதியாகக் கொள்ளுதல்
வீரன்- வீராங்கனை
இப்படி பல வழிமுறைகள் பால் மாற்றுச் சொற்களுக்காக
வழக்காற்றில் பின்பற்றப் படுகின்றன .என்றாலும்
ஆண்பாலைக் குறிக்கும் விகுதியாக 'அன்' விகுதியும்
உயர்திணை பொதுப்பாலைக் குறிக்கும் விகுதியாக 'அர்' விகுதியும் எல்லாச் சொற்களிலும் மாற்றமின்றி
வருகிறது. பெண்பால் விகுதி மட்டும் பல
விதங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
'ஞ்' உடன்பாடு மெய்யுடன் கூடிய 'அன்' விகுதி ஏற்ற
ஆண்பால் சொற்களை பெண்பாலுணர்த்தும்
சொற்களாக மாற்ற என்ன செய்ய வேண்டும்
என்ற கேள்வி பிறக்கிறது. மேற்குறிப்பிட்ட
வழிமுறைகளுள் ஏதாவது ஒன்றைத் தெரிவு
செய்யலாமா ? அதன்படி பார்த்தால் இளைஞன்
என்ற ஆண்பால் சொல்லுக்கு இளைஞி , இளைத்தி .இளைச்சி ,இளைங்காரி ,
இளைங்கள் ,இளங் ஞை ,இளைவி .இளாங்கனை
போன்ற பெண்பால் சொற்களைப் பெறலாம்
இவற்றுள் ஞி மற்றுள் ஞை விகுதிகள் மட்டுமே
குழப்பமின்றி அனைத்து ஆண்பால் சொற்களுக்கும்
ஏற்புடையதாக இருக்கிறது. ஈற்று அடிச் சொற்களுக்கு ஞி சேர்க்கை உச்சரிப்பிற்கு எளிமையாக இல்லை
என்பதால் ஞை விகுதியை பெண்பால்
விகுதியாகக் கொள்ளலாம் .
அறிஞன் அறிஞை அறிஞர்
பொறிஞன் பொறி ஞை பொறிஞர்
கொடைஞன் கொடைஞை கொடைஞர்
கலைஞன் கலைஞை கலைஞர்
இந்த பின்னொட்டு பல புதிய சொற்களை மொழிக்கு அறிமுகப் படுத்தியுள்ளது . ஈரெழுத்து வினையடிகளின் ஈறு இகரம் அல்லது
யைகாரமாகவும் முதலெழுத்து குறில் அல்லது குறில் சார்ந்த மெய்யாகவும் இருக்க வேண்டும் என்ற மரபிற்கு உட்பட்டு பின்வரும் சொற்களை
உருவாக்கலாம்
வெறிஞர் - தீவிரவாதி
மொழிஞர் - மொழி வல்லுநர்
வழி ஞர் - வழிகாட்டி
எளிஞர் - எளியவர்
எரிஞர்- பிணத்தை எரிப்பவர்
மறிஞர் - மறியல் செய்பவர்
உரிஞர் - தோல் உரிப்பவர்
பறிஞர் வழிப்பறி செய்பவர்
தறிஞர் - நூல் நெசவு செய்பவர்
மலைஞர் - மலை ஏறுபவர்
சிலைஞர் - சிற்பி
சிறைஞர் - கைதி
துளைஞர் - துளைபோடுபவர்
விலைஞர் -விலைமாது
அலைஞர் - வேலை இன்றி அலைபவர்
வழக்குரைஞர் - வாதாடுபவர்
சான்றுரைஞர் - சாட்சி செல்பவர்
No comments:
Post a Comment