Tuesday, March 8, 2011


மரபு வழிச் சொற்கள் 

பரிபாடலில் எடுத்தாளப் பட்டுள்ள சொற்களைக் கொண்டு 
எங்ஙனம் கலைச் சொற்களை உருவாக்குவது என்று பார்த்தோம் .
சங்க இலக்கியங்களை அலசினால் ஒருவர் ஆயிரக்கணக்கான 
கலைச் சொற்களைப் புத்தக்க்கம் செய்து மீட்டுருவாக்கம் 
செய்யமுடியும் . கலைச் சொற்களுக்காக நாம் மரபு வழிச்
சொற்களை மறந்து விட்டுத் தேடும் முயற்சி கையில் 
வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையைத்தான் நினைவூட்டுகிறது .

சிலப்பதிகாரத்தின் கடலாடு காதையில் ‘பையுள்  என்றொரு 
சொல் வருகிறது .’பையின் உள்ளே என்பது இதன் பொருள் 
அல்ல .’பையுள் என்பது துன்பத்தைக் குறிக்கும் சொல்லாகும்
இதன் வேர்ச்சொல்லான 
பை -க்கு இடுங்குதல்,நெருங்குதல் போன்ற பல 
பொருண்மைகள் உண்டு . பைய நட 
என்றால் விரைவு ஒடுங்கி நட என்பதாகும். எனவே 
இச்சொல்லை சற்று மாற்றி deceleration  என்ற ஆங்கிலச் சொல்லுக்கான கலைச் சொல்லாக 
மீட்டுருவாக்கம் செய்யலாம். ‘பை என்ற வேரோடு ‘அல் என்ற விகுதியைச் சேர்த்து 
பையல் என்ற ஒரு புதுச் சொல்லை உருவாக்கி 
எதிர் முடுக்கம்  என்று சொல்லாக்கம் 
செய்யப்பட்டுள்ள deceleration  அல்லது redardation
 என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 
இணையாக்கலாம்.
முடுக்கம் என்று உருவாக்கப்பட்டுள்ள acceleration  என்ற
ஆங்கிலச் சொல்லுக்கு
 வரந்தரு காதையில் 149  வரியில் கதழ் என்ற சொல்லை மாற்றமின்றிப் பயன்படுத்தல்லாம் .
விரைந்து பரவும் தீயை கதழேரி  என்று மக்கள் கூறுவதிலிருந்து இதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
இந்தப் பழஞ்சொல் முடுக்கம் போல துணைச் சொற்களுக்கும் அனுகூலமாக இருக்கிறது .
accelerator  - கதழி- முடுக்கி 
accelerated  modition  கதழியக்கம் -முடுக்கப்பட்ட இயக்கம்Linear  accelerator
 - நேர் கதழி - நேர்கோட்டு முடுக்கி
angular  acceleration  - கோட்டக் கதழ் - கோண முடுக்கம்        
  


  

No comments:

Post a Comment