பரிபாடல் 5 வரி 1 ல் பரந்த என்ற பொருளில் பாய் என்ற
சொல் வந்துள்ளது.இயற்பியலில் space என்பதற்குப் பரந்த வெளியை விளக்கச் சொல்லாகவும் ,பாய் வெளியைக் கலைச்
சொல்லாகவும் கொள்ளலாம் .எங்கும் ஊடுருவிச் செல்வதை
நாம் பாய்மம் (fluid ,flux )என்று குறிப்பிடுவதைப் போல ,எங்கும் விரிந்துள்ள வெளியை பாய் வெளி என்பது பொருத்தமானதே .
காந்தவியலில் magnetic டொமைன் என்ற சொல்லுக்குக் காந்த வயல்,காந்தப் பண்ணை
காந்தத் திட்டு என்று பலவாறாகச் சொல்லாக்கம்
செய்யப்ப்பட்டிருந்தாலும் 6 வது பரிபாடல்
48 வது வரி தரும் நிறைவான சொல் காந்த மண்டியாகும். மண்டி என்றால் மிகுதியாகத் திரண்டிருக்கும்
மிடமாகும். வழக்காற்றில் தேங்காய் மண்டி,புளி மண்டி
வாழை மண்டி என்று சொல்வதிலிருந்து இதை உணரலாம்.
காந்த மூலங்கள் திரண்டிருக்கும் ஒரு பகுதியைக் காந்த
மண்டி என்று அழைப்பது சாலப்பொருத்தமே.
பரிபாடல் 6 வரி 83 ல் கசிந்தொழுகுதல் என்ற
பொருளில் மலிர்தல் என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
இதை tunnelling என்ற சொல்லுக்கு இணையாகக்
கொள்ளலாம் . பீட்சாங் குழல் என்ற கூட்டுச்
சொல்லுக்கு சுருங்கை
என்ற கலைச் சொல்லை பரிபாடல் ( பரி 16 வரி 20 )
தந்துள்ளது. Acceleration என்ற ஆங்கிலச் சொல்லுக்கு
பரிபாடல் 14 வரி ௧௬ ல் இடம்பெற்றுள்ள கதழ் என்ற சொல்லை மாற்றமின்றிப் பயன்படுத்தலாம்.
விரைந்து பரவும் தீயை கதழேரி என்று மக்கள்
கூறுவதிலிருந்து இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் .இச் சொல் பல
துணைச் சொல்லக்கங்களுக்கு அனுகூலமாக இருக்கிறது.
accelerator - கதழி/முடுக்கி
accelerated motion - கதழியக்கம் / முடுக்கப்பட்ட இயக்கம்
linear accelerator-நேர் கதழி /நேர் கோட்டு முடுக்கி
angular acceleration-கோட்டக் கதழி /கோண முடுக்கம்
பரிபாடல் 2 வரி 30 ௦ ல் நிலவின் களங்கத்தை குறிப்பிட மதி
மறு என்ற கூட்டுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Crystal imperfection என்ற சொற்றொடvர் படிக்கக் குறைபாடு என்று மொழியாக்கம் செய்திருந்தாலும் படிக மறு/படிக வழு என்று சுருக்கமாகக் குறிப்பிடுவது சிறப்பாக உள்ளது
No comments:
Post a Comment