Monday, January 10, 2011

Valarum Ariviyal Tamil-3

அறிவியல் எழுச்சி சமுதாய வாழ்க்கையை மேம்படுத்த வல்லது 
என்பதைத் தெரிந்து கொண்ட காலத்திலிருந்து வாழ்க்கையோடு 
பின்னிப் பிணைந்து விட்ட தாய் மொழியையும் அதற்கேற்ப 
வளர்க்க வேண்டிய நிலை தூண்டப்பட்டது 
வளரும் அறிவியலுக்கு ஏற்ப மொழியை வளர்க்கத் தவறியவர்கள் ,வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அவசியமான அறிவியலைப் பிறமொழி  வாயிலாகவே கற்றுக்கொள்ள
வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளானார்கள் .
தமிழர்களின் நிலை சற்று மாறுபாடானது. அவர்கள் தங்கள்
கல்வியை முழுமையாகத் தமிழ் மொழி வழியாக
இல்லாமலும், வேற்று மொழி வழியாக இல்லாமலும் கற்று வருகின்றார்கள். நீண்ட காலம் பிற மொழியில் பெற்ற
பயிற்சியைக் கைவிட மறுக்கும் மனம் தாய்மொழியில்
கொள்ள வேண்டிய நம்பிக்கையைத் தொடர்ந்து
புறக்கணித்து வருகிறது
அறிவியலை, கற்றுக் கொண்ட எம்மொழியில்
வேண்டுமானாலும் அறிந்து கொண்டு பயன் பெறலாம்
என்றாலும், தைத் தாய் மொழியில் படிப்பதால் கால
தாமதம் வெகுவாகத் தவிர்க்கபடுகிறது. போட்டியான
உலகில் சிறிய அளவிலான காலதாமதம் கூடப்
பின்னுக்குத் தள்ளிவிடும். அது மட்டுமன்று. கடிய
அறிவியலை ஆழமாக அறிந்து கொள்ளவும், அதுபற்றிச்
சுயமாகச் சிந்தித்து அறிவியலை வளர்க்கவும் முடியாது
போகிறது.

தமிழ் வழிக் கல்வி பின்தங்கிப் போவதற்குப் பல
காரணங்களைக் கல்விச் சிந்தனையாளர்கள் அவ்வப்போது
சுட்டிக்காட்டி உள்ளனர். உயர் கல்வி மற்றும் ரிய அறிவியல் நூல்கள் போதிய
ஆராய்சிகளுக்கு
அளவில் தமிழில் இல்லாததால், தொடக்கத்திலிருந்து
உயர் கல்வி வரை ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த
அறிவியலைத் தமிழ் மொழியில் கற்பதற்கு மாணவர்கள்
முன் வருவதில்லை. தமிழறிந்த அறிவியல் அறிஞர்கள்
பலரிருந்தும் அறிவியல் தமிழ் நூல்களின் எண்ணிக்கை 
பெரிதாக அதிகரிக்கவில்லை. அறிவியல் தமிழ் நூல்கள்
அறிஞர்களால் அதிகம் எழுதப்படாதற்கு ஒரு மூலகாரணம்
தமிழில் போதிய கலைச்சொற்கள் இல்லையோ என்ற
தவறான எண்ணம் அவர்களிடம் மேலோங்கி இருப்பதுதான்.. 
 தமிழ் சான்றோர்கள் மொழியை வளர்த்து ,தங்கள்
இலக்கியப் படைப்புகள் வழி , எண்ணிலாச் சொற்களைக்
கையாண்டு சொற்களின் பல்துறைப் பயன்பாடிற்கு
அன்றைக்கே வித்திட்டிருக்கிறர்கள் என்றால் அது
மிகையாகாது. அவர்களால் வளர்க்கப்பட்ட மொழிவளம்,
இன்றைய அறிவியலை மட்டுமல்ல ,நாளைய
அறிவியலையும் கூட விவரிக்கக் கூடியது. அந்த அளவிற்கு
தமிழ் மொழியில் சொற்கள் செறிந்துள்ளன. இன்றைக்கு
சங்க காலச் சொற்கள் மக்களின் இயல்பான வழக்காற்றில் இல்லாததால் .தமிழ் அறிஞர்கள் தவிர்த்த
பெரும்பாலானோருக்கு அவற்றின் பயன்பாடு
தெரிவத்தில்லை .
தாய்வழி தெரிந்து கொண்ட சொற்களோடு ஒருவர்
படிப்பறிவால் கற்றுக் கொண்ட சொற்களையும் கூட்டிச்
சேர்த்தாலும் மொழியில் உள்ள மொத்தச் சொற்களில்
அது பத்து விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கும்.
நமக்குத் தெரிந்த தமிழ் சொற்களுக்குள் கற்பிக்க
வேண்டிய மற்றும் கற்க வேண்டிய அறிவியலும் இருக்க
வேண்டும் என்று நினைப்பதால் ,அறிவியல்தமிழ் இன்னும்
தொடக்க நிலையிலேயே இருக்கிறது. தமிழால் உயர்
அறிவியலை முழுமையாக விவரிக்க இயலாது என்ற
கருத்து பலருடைய எண்ணங்களில் மேலோங்கி
இருப்பதை  புலப்படுத்திக் காட்டுகிறது 

No comments:

Post a Comment