மொழி என்பது சிந்தனையில் பூக்கின்ற எண்ணங்களையும்
கருத்துக்களையும் பிறருக்குத் தெரிவிக்க அல்லது பிறரிடமிருந்து
தெரிந்து கொள்ள உதவும் ஒரு கருவி. உண்மையில் செய்திப்
பரிமாற்றத்தில் ஈடுபடத் தூண்டுவதே ஒருவரிடம் இருக்கின்ற
மொழிவளம் தான் .மொழி வளம் இல்லாதபோது செய்திப்
பரிமாற்றம் முழுமையற்று ,யாருக்கும் பயனில்லாது
போய்விடுகின்றது .எனவே மக்களின் மேம்பாடு என்பது அவர்கள் ஒருவரோடொருவர் எவாளவுஅதிகமாக ,
இயல்பாக ,தன்னார்வமாகக் கருத்துக்களைப் பரிமாற்றிக்
கொள்கிறார்கள் என்பதோடு தொடர்புடையதாக இருப்பதால்
மொழி வளமே சமுதாயத்தின் வளத்தை த தீர்மானிக்கக்
கூடியதாக இருக்கின்றது எனலாம். மொழி வளமின்றிச்
சமுதாயமும்,சமுதாய வளமின்றி மொழியும்
மேம்படுவதில்லை .இதற்க்கு எண்ணிறைந்த
எடுத்துக்காட்டுகள் நம் இந்தியச் சரித்திரத்திலே காண
முடியும். வளர்ச்சிக்கு உள்ளாகாத மொழியும் சமுதாயமும் காலவோட்டத்தில் மங்கி மறைந்து
போயிருக்கின்றன. .எனவே மொழி வளர்ச்சி என்பது, வளர்ந்த மொழியானாலும் அல்லது வளரும்
மொழியானாலும் மொழிக்கு இன்றியமையாததாகும் .
இது மொழிக்கும் அம மொழி பேசும் மக்களுக்கும்
பாதுகாப்பாக அமையும்.
absolute சார்பிலா, தனி ,தூய்மையான,
தனித்தன்மையுடைய
சார்பிலா,தனி
ஒன்றைச் சார்ந்து தன் அளவை மாற்றிக்கொள்ளாதிருப்பது நிபந்தனைகள்,வரம்புகள் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டது எடுத்துக்காட்டு : சார்பிலா வெப்பநிலை:சார்பிலா சுழி வெப்பநிலை ,செல்சியஸ் வெப்பநிலை
அலகு போன்ற தனித்ததோர் அல்கு முறையில் உள்ள
சுழி வெப்பநிலையிலிருந்து தனித்திருக்கிறது
-code தனிக்குரிமொழி
-deviation தனி விளக்கம்
-determination தனித்தீர்மானம் ,தனி முடிவு
-error தனிப் பிழை . சார்பிலாப் பிழை
-expansion தனிப்பெருக்கம்,சார்பிலாபெருக்கம்
தனி விரிவு, தன்னிலை விரிவு
சார்பிலாப் பெருக்கம்
கொள்கலனில் உள்ள ஒரு நீர்மத்தை சூடுபடுத்தும் போது,
விரிவடைய ,அதன் உண்மைப் பெருக்கம் என்பது நீர்மத்தைக் கொண்டுள்ள கொள்கலனைச்
சார்ந்திருப்பதில்லை. ஒரு நீர்மத்தின் சார்பில
பெருக்கக் குணகம் (coefficient of absolute expansion ) என்பது,
அதே நீர்மத்தின் தோற்றப் பெருக்கக் குணகம்
(coefficient of apparant expansion ) மற்றும் நீர்மத்தைக்
கொண்டுள்ள கொள்கலனின் ஆக்கப் பொருளின்
பருமப் பெருக்கக் குணகம் அவற்றின் கூடுதலாகும் .
ஒரு பொருளின் பருமப் பெருக்கக் குணகம் ,
அதன் நீட்சிப் பெருக்கக் குணகத்தைப் போல
மூன்று மடங்காகும் .
-zero தனிச் சுழி
தனிச் சுழி வெப்பநிலை
நடைமுறையில் நாம் பெறக்கூடிய மிகத் தாழ்ந்த
வெப்பநிலையாகும் .இவ் வெப்ப நிலையில்
தொல்லியக்க த் துகள்கள் சிறிதும் வெப்ப
இயக்க மற்று ,இயக்க ஆற்றல் சுழியாக இருக்கும் .
[குவாண்ட இயக்கத் துகள்கள் சுழிவெப்ப நிலையிலும் கூட ஆற்றலைப் பெற்றிருக்கும் .
இதை சுழி நிலைஆற்றல் (zero point energy) என்பர்].
இது - 273 .15 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கும்
பாரென்ஹீட் அலகு முறையில் - 459 .67 டிகிரி
பாரென்ஹீட் வெப்ப நிலைக்கும் சமமாகும்
. -temperature சார்பிலா வெப்பநிலை
சார்பிலா வெப்ப நிலை
கெல்வின் (Kelvin) அலகு முறையில் அளவிடப்படும் வெப்பநிலையாகும். .
K என்ற குறியீட்டால் குறிப்பிடுவார்கள். இதன் தொடக்கம் நீரின் உறை
வெப்பநிலையாக இல்லாது ,தனிச் சுழி வெப்ப நிலையாக இருக்கின்றது .
-expansion தனிப் பெருக்கம் , சார்பிலா பெருக்கம்
தனி விரிவு
-humidity சார்பிலா ஈரப்பதம்
-luminosity தனி ஒளிப்பொலிவு , சார்பிலாஒளிப்பொலிவு
-motion தனி இயக்கம், சார்பிலா இயக்கம்
-insulation முழுமைக் காப்பு, முழு மின்னேமம்
-magnitude தனி ஒளிர்மை
-temperature சார்பிலா வெப்பநிலை
-units சார்பிலா அலகுகள்
தனி அலகுகள்
-value தனிப் பெறுமானம் , தனி மதிப்பு
-zero தனிச் சுழி

No comments:
Post a Comment