Aberration - பிறழ்ச்சி (ஒளியியல்),பிம்பக்குறைபாடு ,
தோற்றப் பெயர்ச்சி (வானவியல்,விண்ணியல்)
பிறழ்ச்சி (வானவியல்,விண்ணியல்)
ஒரு நோக்கர் ,பூமியின் இயக்கம் காரணமாக ஒரு விண்ணுருப்பின்
இருப்பிடத்தில் அறியப்படும் ஒரு தோற்ற வேறுபாடு.
Chromatic Aberration - நிறப் பிறழ்ச்சி
நிறப் பிறழ்ச்சி (ஒளியியல்)
கண்ணாடியின் ஒளி விலகல் எண் (refractive index ) வெவ்வேறு
நிறங்களுக்கு வேவேராக இருப்பதால் ,ஒரு வில்லையின்
குவியம் (focal length ) நிறங்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றது .
(f சிவப்பு > f ஊதா ) .இதன்னால் வில்லியில் விழும் ஒளிக்கற்றை
ஒரு புள்ளியில் குவிக்கப்படுவதில்லை .மாறாகப் பன்னிறப்
பிம்பம் கிடைக்கிறது .பன்னிற ஒளி நிறப்பிரிகைக்கு
(dispersion ) உட்படுவதால் இத் நிகழ்கிறது .நிறப்பிரிகையற்ற
தொகுப்பு வில்லைகளினால் (acromatic lenses ) இக் குறைபாட்டை
நீக்கலாம்
Spherical aberration – கோளப் பிறழ்ச்சி
கோளப் பிறழ்ச்சி
பொருளின் ஒரு புள்ளியிலிருந்து சிதறும் வெவ்வேறு ஒளி, அப்புள்ளியையும்,வில்லை அல்லது ஒரு கோள ஆடியின் ஒளியியல் மையத்தையும்
(optical centre) இணைக்கும் நேர் கோட்டிற்கு வெவேறு
கோணத்தை ஏற்படுத்துவதால் அவையெல்லாம்
வில்லை அல்லது கோள ஆடியால்
ஒரு புள்ளியில் குவிக்கப்படுவதில்லை. மாறாக நுண்ணிய அளவில் மாறுபடும்
வெவ்வேறு புள்ளிகளில் குவிக்கப்படுகின்றன.
வளவு ஆரம் (radius of curvature) 1:6 என்ற விகிதத்தில்
வடிவமைக்கப்பட்ட குவி அல்லது குழி
வில்லையாலும், ஒரு பக்க சமதள குவி
வில்லையாலும் இக் குறைபாட்டை நீக்கலாம்
Aberration பிறழ்ச்சி, பிம்பக்குறைபாடு ,
தோற்றப் பெயர்ச்சி
Annual- ஆண்டுப் பிறழ்ச்சி
Axial - அச்சுவழிப் பிறழ்ச்சி
Chromatic - நிறப் பிறழ்ச்சி
Coefficient of – பிறழ்ச்சிக் குணகம்
Constant of – பிறழ்ச்சி மாறிலி, பிறழ்ச்சிக் கெழு
Diurnal – நாள் பிறழ்ச்சி
Lateral- பக்கவாட்டுப் பிறழ்ச்சி
Planetary- கோள்மைப் பிறழ்ச்சி
Spherical – கோளப் பிறழ்ச்சி
Aberration of light ஒளிப் பிறழ்ச்சி

No comments:
Post a Comment