பரிபாடலில்அறிவியல்சார்ந்தகருத்துகள்
முனைவர்.மெ.மெய்யப்பன்
இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் ஒருசேர
இயக்கும் சக்தி இறைவனிடத்தில் மட்டுந்தான் இருக்கிறது. எது முதல் எது முடிவு என்று கூறமுடியாதோ அதுவே கடவுள்,அது இயற்கையைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது என்ற கொள்கையில் கொண்டுள்ள நம்பிக்கையால் இறைவன் என்பதைப் பொதுவாகத் தமிழர்கள் இயற்கை என்று கூறுவார்கள்.இறைவன் என்றாலும் இயற்கை என்றாலும் ஒன்றுதான், எனெனில் இறைவனையும் இயற்கையையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத அளவிற்கு அனேக ஒற்றுமைகள் இருக்கின்றன.
இறைவனும் இயற்கையும்
இறைவனே இயற்கை இயற்கையே
இறைவன் என்ற கருத்து பரிபாடலில் வரும் திருமால் வாழ்த்து பற்றிய முதல் பாடலில் கூறப்பட்டுள்ளது.“மன்னுயிர் முதல்வன்” என்ற சொற்றொடர்,அனைத்தையும் படைப்பதால் தோன்றச் செய்தும்,காப்பதால் வாழச் செய்தும்,அழிப்பதால் மறையச் செய்தும் பிரபஞ்சத்திலுள்ள அனைத்திற்கும் ஆதிமூலமாக விளங்கும் இறைவனை இயற்கையென வர்ணிக்கின்றது.
வெளியின்றி பொருட்கள் இருக்க முடியாது. பொருட்கள் தோன்றியிருக்க வெளி வேண்டும்.எனவே பிரபஞ்சத்தில் விண்மீன்களும்,கோள்களும் தோன்றி இருப்பதற்கு முன்னரே ஆகாயம் என்ற வெளி இருக்கவேண்டும்.ஆகாயம் என்பது உருவமில்லாத ஒரு வெளி.அதற்கு எல்லையில்லை.பொருட்கள் தோன்றுவதற்கு முன்பே வெளி உண்டாகியிருக்கவேண்டும் என்ற கருத்தை ஆகாய ஊழியே முதல்தனிமம் (பூதமாக) எனக் குறிப்பிடும் பரிபாடலின் இரண்டாவது பாடல் வரிகளால் அறியலாம்.
பெரு வெடிப்புக் கொள்கை(Big Bang theory)யில் பெரு வெடிப்புக்கு முன்பு பிரபஞ்சத்தின் நிலைபற்றி ஏதும் தெரிவிக்கவில்லை.ஆனால் இரண்டாம் பரிபாடல் வரிகள் பிரபஞ்சம் தோன்றி உருவாவதற்கு முன்பு இருந்த பிரபஞ்சத்தின் நிலை பற்றியும் குறிப்புணர்த்துகின்றது. பிரபஞ்சத்தின் பிறப்பு ,பிரபஞ்சத்தின் அழிவிலிருந்து தொடங்குகின்றது என்ற அறிவியல் கருத்தை இப்பாடல் வரிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.உயிரினங்களின் பிறப்பு என்பது அவற்றின் இறப்பிலிருந்தே தொடங்குகின்றது என்ற அனுபவ அறிவே பரிபாடலின் இவ்வரிகளுக்கு ஆதாரமாக இருக்கலாம்.
சூரியனும்(விண்மீன்களும்),சந்திரனும்(கோள்களும்) அழிய பொருள் ஆற்றலானது அப்போது ஆகாயம் அழகிழந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. விண்மீன் அழிந்து ஒண்முகிற்படலமாவது(Nebula) இத்தகையதே என்று இன்றைக்கு விண்ணியற்பியலார் கண்டறிந்ததோடு இக்கருத்து
ஒத்துப்போகிறது.அதன்பின் ஆற்றல் பொருட்களாக மாறி பிரபஞ்சமாக விரிவடைந்தது என்று ஊழிகளால் பிரபஞ்சத்தின் முழு வரலாற்றையும் கீரந்தையார்தான் தன் பாடலில் விவரிக்கின்றார்.
பிரபஞ்சத்தின்
அழிவும்
தோற்றமும்
ஆற்றல்-பொருள்
இவைகளுக்கிடையே
இடைவிடாது
நடைபெறும்
பரிமாற்று
வினைகளால்
விளக்கிக்
கொள்ள முடியும். முழுமையாகப் பொருள் நிலையில்
இருக்கும்
போதும் அல்லது ஆற்றல்
நிலையில்
இருக்கும்
போதும் பிரபஞ்சம்
வெறும் வெற்று வெளியாக
இருக்கும்.இடைநிலையில்
அவ்வெளி
அண்டங்கள்
அடங்கிய
பிரபஞ்சமாக
விளங்கும். பிரபஞ்சம்
முழுப் பொருள் நிலைக்கும் (Big Bang)முழு ஆற்றல் நிலைக்கும்
இடையில்
தொடர்ந்து அலைந்து கொண்டிருப்பதால் அதன் அழிவும்
பிறப்பும்
மீண்டும்
மீண்டும்
தோன்றிக்
கொண்டேயிருக்கின்றன.
அந்த
வானத்தில்
ஆற்றலிலிருந்து
அணுக்கள்
தோன்றி பொருட்களாய்
வளர்ந்தன
என்பதை “கருவளர்
வானத்திசையில் தோன்றி”
என்ற வரிகளால்
குறிப்பிட்டுள்ளார். வெப்பச்சலனத்தால்
இயங்கிச்
செல்லும்
அணுக்களையே
இவர் ஊழிக்காற்றெனக் குறிப்பிட்டுள்ளார்.ஆகாயதில் உயிரில்லா
அணுக்களை இடப்பெயர்த்து
செலுத்தக்
கூடிய காற்று அடுத்த ஊழியாக தோன்றியது.இதனால்
அண்டங்கள் அங்குமிங்குமாக எங்கும் தோன்றக்
காரணமான நெருப்பும், நீரும், நிலமும்
அதனின்று
முறையே
தோன்றின. பிரபஞ்சத்தின் வளர்ச்சிப் படிகளை எடுத்துரைக்கும் இப் பாடல் அதன் அழிவின் நிலைகளுக்கும் விளக்கத்தை உள்ளடக்கி வைத்திருக்கின்றது .நிலம் நீரில் மூழ்கும் என்றும் நீர் நெருப்பில் ஒடுங்கும் என்றும் அழிவின் முறைமையைக் கூறுகின்றது .வெப்பத்தின் அதிகரிப்பால் துருவப் பகுதிகளிலுள்ள பனிப்பாறைகள் உருக, கடல்நீர் மட்டம் உயர
,தாழ்ந்த நிலப் பகுதிகள் மூழ்கடிக்கப்படுவதை இன்று
நாம் காண்கிறோம். விண்மீன்களின் வளர்ச்சிப்படிகளில் ஏற்படும் மாற்றங்களினால் விளையும் உயர் வெப்ப நிலையால் நிலத்தை விழுங்கிய நீர் ஆவியாகி மூலக்கூறுகளாகவும் ,அணுக்களாகவும் ,அடிப்படைத் துகள்களாகவும் மாறும்.விண்வெளியில் காணப்படும் நீரில்லாக் கோள்கள் இந்த மாற்றத்தின் ஒரு கட்டடமே.இதையே நெருப்பில் நீர் ஒடுக்கும் என்று குறிப்பிட்டிருப்பது போலத் தோன்றுகின்றது .
மறுபிறப்பு
உயிரினங்களுக்கு மறுபிறப்பு உண்டென உறுதிபட தெரிவிக்கின்றது பரிபாடலின் செவ்வேள் பற்றிய ஐந்தாம் பாடல்
"மறுபிறப்பு இல்லெனும் மடவோரும் சேரார் "
உயிரினங்களின் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடைபெறவேண்டுமானால் அது தொடக்கமும் முடிவும் இல்லாத வட்டம் போல ஒரு வட்டச் சுற்று முறையில் நிகழ வேண்டும் .இறப்பு என்பது உயிரியல் மூலக்கூறுகள் சாதாரண ,உயிரியல் அல்லாத மூலக்கூறுகளாக நிலை மாறுவதாகும் .பிறப்பு என்பது உயிரியல் அல்லாத மூலக்கூறுகள் உயிரியல் மூலக் கூறுகளாக நிலை மாற்றம் பெறுவதாகும் .நிலை மாற்றம் என்பது அழிவில்லை.பிறப்பிற்குத் தேவையான உயிரியல் மூலக்கூறுகளை இறப்பினால் விளைந்த உயிரில்லா மூலக்கூறுகளிலிருந்தே இயற்கை தேர்வு செய்கிறது.இந்த அறிவியல் உண்மையை உணர்ந்தோரே மறுபிறப்பைப் பற்றிக் குழப்பமின்றிக் கூறமுடியும்.மறுபிறப்பு இல்லையென வாதிடுவோர் அறிவிலாதார் என்று இகழ்கின்றார் பாடல் ஆசிரியர் கடுவன் இளவெயினனார்.
அறிவியல் என்ற சொல்லும் சிந்தனையும் வளராத முற்காலத்திலேயே மழையின் மூலம் பற்றி வெகு அழகாக பரிபாடலின் சில பாடல் வரிகள் தெரிவிக்கின்றன .வையை பற்றிய ஆறாம் பாடலில் காணப்படும்
" நிறைகடல் முகந்துராய் நிறைந்துநீர் துளும்பும்தம் பொறைதவிர் பசைவிடப் பொழிந்தன்று வானம்”
என்ற வரி கடல்
வற்றாத நீர்வளத்தைக் கொண்டுள்ளது என்றும் கடல் நீர் மேகமாகி வானிடம் எங்கனும் பரவிச் செல்வதால் மழை எங்கும் பொழிகிறது என்றும் தெரிவிக்கின்றது. வையை பற்றிய ஏழாம் பாடலின் தொடக்க வரியான
“திரையிரும் பனிப்பௌவம் செவ்விதா அறமுகத்து "
ஏறக்குறைய இதே கருத்தை எடுத்தியம்புகின்றது.
No comments:
Post a Comment