Monday, June 1, 2026

வாழ்க்கை ஒரு வரம் (வரம் - 2) மனிதர்கள் மற்றும் மனிதர்களைத் தவிர்த்த பிற உயிரினங்களுக்கும் உள்ள வாழ்க்கை முறையில் காணப்படும் வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டால் இனிய வாழ்க்கை கைவசப்படாமல் போனதற்கான உண்மையான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியும். பிற உயிரினங்கள் உயிர் வாழ்வதற்காக மட்டும் உணவு தேடுகின்றன.இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே வளர்கின்றன. இந்த இரு காரணங்களுக்காக ஏற்படும் போட்டியே அந்த உயிரினங்களுக்கிடையே சண்டையை மூட்டி விடுகின்றன.இனப்பெருக்கம் செய்வதற்கான தகுதியைப் பெறுவதற்கும் அதன் பின்னர் இனப்பெருக்கத்தால் பெற்ற குட்டிகளை ,குஞ்சுகளை வளர்த்து ஆளாக்குவதற்கும் உடலை வளர்க்க உணவு தேடுகின்றன. அதிக ஆண்டுகள் வாழும் நோக்கம் அவைகளிடம் இல்லை. அதை இயற்கையின் முடிவிற்கு விட்டுவிட்டு அதில் சிறிதும் தலையிடுவதேயில்லை. தகுதிக்கு மீறிய முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளை இயற்கையிடம் கொடுத்து விட்டு அமைதியாக இருப்பது நல்லது . அதனால் மனம் கவலைப்பட்டு வாழ்நாளைக் குறைக்கும் நிலை ஏற்படுவதில்லை. இந்த உண்மையை பிற உயிரினங்கள் புரிந்து கொண்ட அளவிற்கு மனிதர்கள் புரிந்துகொள்ளவில்லை

No comments:

Post a Comment