Monday, June 1, 2026
வாழ்க்கை ஒரு வரம் (வரம் - 1)
முனைவர் .மெ.மெய்யப்பன் இயற்பியல் பேராசிரியர் (நிறைவு)
இந்தத் தலைப்பில் ஒரு தொடர் கட்டுரையை எழுத விரும்பு கின்றேன். அதற்கு முன்னால் இந்தக் கட்டுரையோடு தொடர்பு டைய ஒரு சில எதார்த்தமான, இயற்கையால் அறிவுறுத்தப்பட்ட கருத்துக்களை நினைவூட்ட நினைக்கின்றேன்.மனிதனைத் தவிர எந்த உயிரினமும் தான் நீண்ட காலம் வாழப்போகின்றோம் என்ற கனவுகளுடன் வாழ்வதில்லை. இருந்தும் அந்த உயிரினங்கள் எல்லாம் அவைகளுடைய வாழ்க்கையை இயல்பாக, மகிழ்ச்சி யாகக் கடந்து செல்கின்றன.அவை 100 ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டிக் கொள்வதில்லை.நூல்களைப் படிப்ப தில்லை.தேவைக்கு அதிகமாக உண்பதில்லை,விரதம் இருப்ப தில்லை,மருந்து எடுத்துக்கொள்வதில்லை,உடற்பயிற்சி செய்வ தில்லை, இயற்கையாக வாழும்போது இதெல்லாம் தேவையில்லை என்பதை அவைகள் நன்கு உணர்த்திருக்கின்றன.நாம் தான் இருப்பதை அனுபவிக்காமல் இல்லாததைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம் பரிணாம வளர்ச்சியில் அவைகளுக்குப் பின் தோன்றிய நாம்தான் இந்த வரத்தின் சிறப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு இனிய வாழ்க்கையை வாழ்நாள் முழுதும் தேடித் தேடி தோற்றுப்போய்க் கொண்டிருக்கின்றோம். அறிவாற்றலால் பிற உயிரினங்களை முந்திய மனிதர்கள் இனிய வாழ்க்கையைத் தேடும் வழிமுறையில் எப்படி பின்தங்கிப்போனார்கள். மனிதர் களிடம் இல்லாத எது பிற உயிரினங்களிடம் இருக்கின்றது? அல்லது பிற உயிரினங்களிடம் இருக்கின்ற எது மனிதர்களிடம் இல்லாதிருக்கின்றது. இதை ஆராய்ந்து அறியும்போது 100 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்ற இயற்கை இரகசியத்தை மனிதர்களுக்கு உணர்த்துவதாக இருக்கின்றது .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment