Thursday, September 22, 2011

Valarum Ariviyal Tamil

மதராஸ் என்றிருந்த நம் மாநிலத்தின் பெயர் சேர நாடு, சோழ நாடு, 
பாண்டிய நாடு போலத் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது 
அந்தச் சொல்லைப் பெயரடையாகப்  பயன்படுத்தும்போது தமிழ்நாடு என்றே தமிழ் மரபிற்கு விதி விலக்க்காகப்
பயன் படுத்தப் பட்டது . தமிழ்நாட்டு அரசு ,தமிழ் நாட்டு 
மின்வாரியம் ,தமிழ்நாட்டு வீட்டு வாரியம் என்று மரபை ஓட்டிப் 
பயன்படுத்தாமல் தமிழ்நாடு அரசு ,தமிழ்நாடு மின்வாரியம், 
தமிழ்நாடு  வீட்டுவாரியம்என்றே வழங்கப்பட்டது 
.பைந்தமிழ் சொற்களிலும் இது போன்ற விதி விளக்கு காணப்படுகிறது.
 ஏடகம் (ஏடு + அகம் ),ஊடகம் (ஊடு + அகம் ) போன்ற சொக்களில் ,மரபு வழி மாற்றம் ஏதுமின்றிப் பெயரடையாகப் 
பயன்படுதப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. இலக்கண மரபை 
விடக் குறிக்கப்படும் பொருளுக்கு முக்கியத்துவம் 
கொடுக்கப்பட்டே மொழி வளர்ந்திருக்கிறது என்பதை 
இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. "டு" என்ற எழுத்தோடு 
முடியும் பெயர்ச் சொற்கள் பொதுவாக மாற்றமின்றி 
பெயரணைச் சொல்லாகப் பயன்படுத்தப்படுவதில்லை .
பெயர் உரிச் சொல்லாக்கப்ப்படும்போது ,அதில் ஒரு 
சொல்லொழுங்கு காணப்படுகிறது. அவ்வொழுங்கு 
விகாரப்புணர்சியிலும்  வெளிபடுகின்றது .
பெயர்ச்சொல்        பெயரடை           கூட்டுச்சொல் 
ஏடு                            ஏட்டு                   ஏட்டுச்சுவடி 
நாடு                          நாட்டு                  நாட்டுப்பற்று 
வினையடையாக வினைச் சொற்க்களோடு சேரும் போதும் 
இதுபோன்றதொரு சொல்லொழுங்கு காணப்படுகிறது 
.
வினைச்சொல்        வினையடை       கூட்டுச்சொல்
சுடு                             சுட்டு                    சுட்டுவீழ்த்து 
தொடு                        தொட்டு               தொட்டுப்பேசு
வினையிலிருந்து பெயரடைச் சொற்கள் உருவாக்கப்படுவது
முண்டு 
வினைச்சொல்     பெயரடை          கூட்டுச்சொல்
சாடு                       சாட்டு                 சா ட்டுங்குற்றம் 
திருடு                    திருட்டு              திருட்டுப் பொருள் 
பெயர்ச் சொல்லிலிருந்து வினையடைச் சொற்கள் உருவாக்கப்படுவதுமுண்டு .இது இரண்டாம் வேற்றுமை 
உறுப்புச் சேர்க்கையினால் ஏற்படுவதாகும்.
பெயர்ச்சொல்       வினையடை          கூட்டுச்சொல்
சூடு                        சூட்டை                   சூட்டைத்தணி
கோடு                    கோட்டை               கோட்டைத் தொடு
மரபுகள் பொருளை வேறுபடுத்துமாறு அமைந்தால் விதி 
விலக்குகளை ஏற்படுத்தக்  கொண்டு பொருள் திரிவு படாமல் 
சொல்லில் விகாரங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டியது 
அவசியமாகிறது .
மூடு - மூடுவிழா 
ஈடு - ஈடு  பெண்
ஊடு - ஊடுபரவல்
மூட்டு விழா ,ஈட்டுப்பெண்  ஊட்டுப்பரவல் போன்ற கூட்டுச்
சொற்கள் கூடும் சொற்களின் பொருளை முற்றும்
வேறுபடுத்துவதால் அத்தகைய கூட்டுச் சொற்கள் 
பயபடுத்த்ப்படுவதில்லை . 
  
  

No comments:

Post a Comment