Thursday, September 22, 2011

Valarum Ariviyal Tamil

சொல்லாக்கங்களில் சொல்லமைப்புக்கள்
 
மரபு வழிச் சொல்லாக்கங்கள்
 
கலைச் சொல்லாக்க நெறிமுறைகள் உண்மையில் சொல்லாக்க நெறிமுறைகளோடு
தொடர்புடையன .சொல்லாக்க நெறிமுறைகள் பல ஏற்கனவே மொழியில் 
பின்பற்றப் பட்டு  உருவான சொற்களையே நாம் இன்றைக்கும் வழக்காற்றில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் .பொதுவான ,பழமையான அந்த நெறிமுறைகளை
கலைச்  சொல்லாக்க வலி முறைகளில் பின்பற்றினால், தரமான கலைச் சொற்களை எளிதாக
உருவாக்க முடிகிறது. அச் சொற்கள் அதனோடு பொருள் தொடர்புடைய 
கிளைச் சொற்களை உருவாக்க இடம் கொடுப்பதால் விரிவாக்கங்களுக்கும்  ஏற்புடையதாக
 இருக்கின்றன. கிளைச்சொற்களை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலை 
பொதுவாகத் தமிழ் மரபை ஒட்டி எழாத சொற்களுக்கே ஏற்படுகின்றன. அப்போது ,அச் சொல்லை 
நீக்கிவிட்டு வேறு சொல்லைப் பயன் படுத்த வேண்டிய கட்டாயம் 
ஏற்படுகின்றது. 
 
எடுத்துக்காட்டாக Library  என்ற சொல்லை நூல் நிலையம் என்று மொழி   யாக்கம்  செய்தார்கள். ரயில் நிலையம், பேருந்து நிலையம், அழகு நிலையம், விமான நிலையம் 
சிகை அலங்கார நிலையம்  போன்ற கூட்டுச் சொர்க்களைப் போல நூல் நிலையமும் பெரு 
வழக்கில் நிலை பெற்றது. ஆனால் Librarian ,Library  Science ,circulation  library reference
library  ஆகிய சொற்களுக்கு இணையான தமிச் சொற்களை நூல் நிலையம் என்ற அடிப்படைச்
சொல்லிலிருந்து உண்டாக்குவது சற்று கடினம். எனவே
இப்போது இச் சொல் நூலகம் என்று தரப்படுத்தப் பட்டுள்ளது .இக் சொல் நூலகர் ,நூலகவியல் ,சுழல் நூலகம் ,தகவல் நூலகம் போன்ற கிளைச் சொற்களை எளிதாக உருவாகிக் கொடுத்திருக்கிறது.
 
அகம் என்ற சொல் விகுதிச் சேர்க்கையாகப் பயன் படுத்தப் படுவது சொல்லாக்க வழி முறைகளில் மேற்கொள்ளப் பட்டிருகிறது. .அகம் என்ற சொல்லிற்கு வீடு, மனம் ,
ஞானம் ,உள் எனப் பொருள் பல வுண்டு .இது பல பொருளில் அகம் என்ற சொல் ,
சொல்லொட்டுகளில் பயன் படுத்த முடியும் என்பதைத் தெரிவிக்கிறது. விகுதிச் சேர்க்கையாகப் 
பயன் படுத்தும் போது மகர ஈறு மங்குவதில்லை .எ.கா . நூலகம் ,உணவகம் ,தேநீரகம் ,முடி திருத்தகம் ,மருந்தகம் ,பெட்டகம் ,காப்பகம் ,ஆய்வகம் ,
போன்ற சொற்களைக் காட்டலாம் .இங்கு அகம் பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது 
பெயரடியாக ப் பயன் படுத்தும் போது மகர ஈறு நீங்கப் பெற்று ,பெயரடைச் சொல்லாகப் 
பயன் படுத்தப் படுகிறது.
எ. கா. அகநானுறு ,அகத்திணை ,அக நிலை .
இதற்கு விதி விலக்காக அமைந்துள்ள சொற்களும் வழக்காற்றில்  உள்ளன. அகம் தன மகர ஈற்றை 
இழக்காமல் ,சொல்லொட்டுகளில் பெயரடையாகச் சேருவதும் உண்டு .
எ. கா. 
அகம்படி 
அகம்பாவம் 
 
அகப்படி ,அகப்பாவம் என்ற சொற்கள் சரியான பொருளுரைக்காததால் வல்லின மெய்யொற்று  
இடைத் தோன்றல் தவிக்கப்பட்டு இயல்பாய் வந்த மகர ஒற்றே நிலைப்பட்டது. .
 
அகம் கலைச் சொல்லாக்கங்களில் பயன்படுத்தப் படுகிறது . 
infrared - அகச் சிவப்பு 
infra  sound - அக வொலி
green  house  effect  - பசுமையக விளைவு 
 
ரயில்,பேருந்து ,விமானம் போன்ற போக்குவரத்து ஊர்திகள் வந்து போகுமிடங்களுக்கும் ,தொலைகாட்சி 
வானொலி போன்ற ஒளி மற்றும் ஒலி பரப்புமிடங்களுக்கும் 
நிலையம் என்ற சொலொட்டே ஏற்றுக் கொள்ளப் பட்டது .பொதுவாக உகர ஈற்றுப் பெயர்ச் சொற்கள் மெய்யீற்றுப் பெர்யர்ச் சொற்கள் போன்றவை . அகம் என்ற சொல்லை 
பின்னொட்டாக  ஏற்கின்றன. பிரிப்பகம் ,நினைவகம் , இனிப்பகம், படிப்பகம் ,பதிப்பகம் போன்ற
சொற்கள் உகர ஈற்றுப் பெர்யர்ச் சொற்களிலிருந்து தோன்றியவை. எழிலகம் ,
தூதரகம் ,அலுவலகம் போன்றவை மெய்யீற்றுப் பெயர்ச் சொற்களிலிருந்து தோன்றியவை. .இந்த வழி முறையை சொல்லாக நெறி முறைகளில் பயன்படுத்தி புதிய சொற்களை உருவாக்கலாம்      .    

No comments:

Post a Comment