Wednesday, September 28, 2011

Valarum Ariviyal Tamil

டு விற்கு முன் டகர மெய்  வந்தால் ,அத்தகைய பெயர்ச்சொற்கள் 
பெயரடையாகவும் இருக்கும். எ.கா 
பட்டுச்சீலை ,
வேட்டுச்சத்தம் ,
சிட்டுக் குருவி ,
ஒட்டுத் துணி ,
கட்டு  மரம், 
கொட்டு மேளம், 
சொட்டு மருந்து .
 
ஆனால் அத்தகைய சொற்கள் பிற வினைச் சொல்லானால்
வினையடையாக மாறும் போது இது போன்ற 
சொல்லொ ழுங்கு காணப்படுகிறது .
 
எட்டு - எட்டி உதை
முட்டு - முட்டிக்கொள் 
தட்டு - தட்டிக் கேள்
காட்டு - காட்டிச் சொல் 
வாட்டு - வாட்டி எடு 
 
டு விகுதி சேர்க்கப்பட்டு பிற வினைச் சொற்களாக்கபட்ட 
சொற்களுக்கும் இது பொருந்தும்.
 
துவள் -துவட்டு - துவட்டிக் கொள் - துவண்டு 
மிரள் - மிரண்டு - மிரட்டிக் கேள் -மிரண்டு
உருள் - உருட்டு - உருட்டிச் செல் - உருண்டு 
 மீள் - மீட்டித் தா - மீண்டு
 
இது போன்ற கிளைச் சொல்லாக்கங்களில் 
உகர ஈறு இகரமாயிருப்பதைப் பார்க்க முடிகிறது.
'டு ' உடன் முடியும் ஈரெழுத்து வினையடிகள்
 பெயர்ச்சொல்லாக மாறும் போது ஒரு குறிப்பிட்ட 
நெறி முறை பின்பற்றப்படுகிறது.
 
வினன்     பெயர்       எச்சம்(பொது)          பெயரெச்சம் 
ஆடு        ஆட்டம்      ஆட்டநாயகன்         ஆடிய ஆட்டம் 
ஓடு         ஓட்டம்       ஓட்டப் பந்தையம்     ஓடிய    ஓட்டம் 
கூடு         கூட்டம்      கூட்ட நெரிச்சல்       கூடிய   கூட்டம் 
கோடு      கோட்டம்    கோட்ட வாயில்
நாடு         நாட்டம்       நாட்டமின்மை          நாடிய உதவி 
வாடு       வாட்டம்      வாட்டமில்லை         வாடிய பயிர் 
மூடு        மூட்டம்       மூடுபனி                    மூடிய கதவு
பாடு        பாட்டம்       பாடுங்கூட்டம்           பாடிய குரல்
 
வினையடியுடன் 'அம்' என்ற விகுதிச் சேர்க்கையால் வருவன
பெயர்ச் சொற்களாகும் .'டு ' உடன் 'அம்' சேர 'ட்டம்' 
தோன்றுகிறது .
 
டு + அம் = ட்டம்
 
உகரம் நீங்கி மெய் இரட்டித்து அகரத்துடன் இணைவதால் 
ஏற்படும் சொற்கள் தமிழ் மொழியில் பலவுண்டு .
'டு' உடன் முடியும் ஈரெழுத்துப் பிற வினையடிகளில் முதலெழுத்து பெரும்பாலும் 
நெடில் அல்லது நெடில் சார்ந்த மெய்களாக இருப்பதைப்
 பார்க்க முடிகிறது. இவ்விதிக்கு உடம்படாத 
வினையடிகளும் உள்ளன .போடு என்ற
வினையடியைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் .
 
'அம் ' விகுதிச் சேர்கையால் பெறப்பட்ட
 சொற்கள் மகர மெய்யீற்றைக் கொண்டிருப்பதால் ,
மகரத்தை நீக்கி பெயரடைச் 
சொற்களை உருவாக்கிக் கொள்ளுதல் எளிது .
நோட்டம் என்ற சொல் வழக்காற்றில் உள்ளது .இதன் வினையடி 
நோடு என்றிருந்தால் 'அம்' விகுதிச் சேர்க்கை 
அச்சொல்லைத் தந்திருக்கமுடியும் . ஆனால் நோடு
என்ற வினைச் சொல் வழக்காற்றில் இல்லை. மூன்றாம் 
வேற்றுமை உருபுகள் ஒன்றான ஓடு ,என் ,உன் ,கண் ,மண் 
போன்ற சொற்களோடு சேரும் போது என்னோடு ,உன்னோடு ,
கண்ணோடு ,மண்ணோடு போன்ற கூட்டுச் சொற்களைத் தரும். 
இவற்றைப் பிரித்தறிவதில் குழப்பம் மேலிடலாம் 
என்பதால் நோடு என்ற வினைச் சொல் 
தவிர்க்கப்பட்டிருக்கலாம் .
மூடு, பாடு போன்ற வினையடிகளிலிருந்து பெயரடைச் சொற்களை வருவிக்கும் போது சில அமைவுகளில் விதி 
விலக்கு காணப்படுகிறது. மேக மூட்டம் ,ஆட்டம் பாட்டம்  என்று பெயரடைச் சொல்லாக வரும் மூட்டமும் ,
பாட்டமும் ,பெயரடைச் சொல்லாக வரும் போது மூடு ,பாடு
என்றே வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டலாம் .
 
'டு ' உடன் முடியும் மூவெழுத்து பெயரடி 
அல்லது வினயடிகளின் இடையில் டகர ஒற்று இருப்பின் ,மெய்
இரட்டித்தல் தேவையில்லாது போக ,இது போலப்
 பிற மாற்றங்களைப் பெறுகிறது .
 
ஊட்டு - ஊட்டம்
கட்டு - கட்டம் 
கொட்டு - கொட்டம்
 
பட்டு என்றால் உல்லாசம் என்றும் பொருள்படும் . எனவே 
உல்லாசம் தரும் விளையாட்டு பட்டமானது போலும்.
இதிலும் ஒரு சில விதி விலக்குகள் காணப்படுகின்றன.
 
தீட்டு - திட்டம் 
 
இம்மாற்றத்தில் ஆதி குறுகல் ஏற்பட்டிருக்கின்றது . ஆதி குறுகலும் ஆதி நீட்டலும் புணர்ச்சி வழிமுறைகளில் ஏற்றுக் 
கொள்ளப்பட்டிருகின்றன .    
     

No comments:

Post a Comment