வு -பின்னொட்டு விகுதி
பொதுவாக 'வு' என்ற எழுத்து பின்னொட்டு விகுதியாக த் தன வினையடிகளுடன் மட்டும் சேருகிறது.
இச் சேர்க்கையில் ஒரு செவ்வொழுங்கு இயல்பாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது. 'வு' என்ற எழுத்தை
ஈறாகக் கொண்டுள்ள ஈரெழுத்துச் சொற்களை நுணுகி ஆராயும் பொது, அச் சொற்களின் முதலெழுத்து
உயிர் நெடில் அல்லது உயிர் நெடிலுடன் கூடிய மெய் எழுத்துக்களாக இருக்கின்றன.
ஈரெழுத்து சொற்களில் வு- பின்னொட்டு விகுதி
நெடில் நெடில்-மெய்
ஆ ஈ ஊ ஏ ஓ ஒள
ஈவு காவு கூவு
ஏவு சாவு சீவு
தாவு தீவு தூவு
பாவு
மாவு மேவு
நீவு நோவு
வௌவு
'வு' விகுதி சேர்க்கைக்கு இணங்கும் வினையடி ஈரெழுத்து டையதெனில், வினையடியின் ஈற்றெழுத்து இடையின
மெய்யாகவோ அல்லது உயிர் குறிலுடன் இணைந்த உயிர்மெய் யாகவோ மட்டும் இருக்கிறது.
No comments:
Post a Comment