வு விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி
Futon - காலணைவு இருக்கை
மனையடி இடத்தை அதிகப் பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்ற வீடுகளில் சோபா -படுக்கை கூடுதல்
பயன்தருவதாக இருக்கும். உட்காருவதற்கான
இருக்கையாகவும் ,உறங்குவதற்கான படுக்கையாகவும்
இதை நேரத்திற்குத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்வார்கள் .
திடீரென்று இரவுக்கு மட்டும் வந்து போகின்ற
விருந்தினர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும் .சுறுசுறுப்பான
பகல் நேரத்தில் வீட்டின் பயனுறு உட்பரப்பை அதிகரித்துக்
கொள்ளவும் ,நடமாட்டமில்லாத இரவில் வசதியை
அதிகரித்துக் கொள்ளவும் இது பயன் தருகிறது .அண்மையில்
இதன் பரிணாம வளர்ச்சியில் கீழை நாகரிகத் தொடர்புடைய
ஜப்பானியர்களின் காலணை என்ற ஒரு மாற்றமும்
சேர்ந்துகொண்டது. மரப்பலகையால் ஆன அடிப்பாகமும் ,
அதன் மீது ஒரு மெல்லிய பஞ்சு பொதிக்கப்பட்ட மெத்தையும்
இணைக்கப்பட்ட படுகை இருக்கையை காலணைவு
இருக்கை என்றழைக்கின்றனர்
.
melt down - திடீர் சீர்குலைவு
அணு உலைகளில் உரேனியம் -235 போன்ற கனமான
அணுக்களின் கருக்களை பிளப்பிற்கு
உட்படுத்துகிறார்கள் .அப்போது ஏற்படும் பொருண்மை
இழப்பு ஆற்றலாக வெளிப்படுகிறது .
இதைக் கொண்டு நீரை நீராவியாக்கி ,மின் உற்பத்தி
சாதனங்களை இயக்குகிறார்கள் .இதுவே
ஓர் அணுமின் உலை செய்து வரும் செயலாகும். இன்று
உலகமெங்கும் 250 அணு மின் உலைகளும்
நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அணுஉலைகளும் இயக்கிக் கொண்டிருக்கின்றன .
அணுக கருப் பிளப்பு வினையில் விளைபொருட்கள் யாவும்
கதிரியக்கம் கொண்டவை இவை தவறுதலாக அணு
உலையிலிருந்து வெளிப்படுமானால் ,அது சுற்றுப் புறத்தை
கதிரியக்கத்தால் மாசுபடுத்தித் தவிர்த்துக் கொள்ள முடியாத
பல தீங்குகளை ஏற்படுத்திவிடும் .இரண்டாம்
உலக பெரும் போரின் போது ஜப்பான் நாட்டின் நாகசாகி ,
ஹிரோஷிமா நகரங்களில்
அணுகுண்டு வீச்சு ஏற்படுத்திய பேரழிவின் கோரக் காட்சிகள்
இந்த அச்சுறுத்தலை வலுப்படுத்தியிருக்கிறது .சாலை விபத்துகள்
போல அணுஉலைகளும் விபத்துகளிலிருந்து
தப்பிக்கவில்லை.
1957 -ல் இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸ்கேல் என்னுமிடத்தில் உள்ள அணுஉலை, 1979 -ல் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவின்
மூன்று மைல் தீவிலுள்ள அணுஉலை,
1986 ல் ரஷ்யாவிலுள்ள செர்னோபைல் அணுஉலை போன்ற அணுஉலைகளில் திடீர் விபத்துகள் நிகழ்ந்தன .ஏதாவதொரு புறக் காரணங்களினால் உடனுக்குடன் உற்பத்தி
செய்யப்படும் ஆற்றலை உள்ளகத்திலிருந்து வெளியேற்ற
முடியாமல் போகும் போது
உள்ளகம் வரம்பு மீறி சூடாக்கப் பட்டு உருகிப் போய்.
உலையில் சுவர்களில் வெடிப்பு
ஏற்பட்டு கதிரியக்கக் கழிவுகள் கசிந்து வெளியேறுகின்றன.
இதையே melt down என்று
குறிப்பிடுகின்றார்கள் .
ஏதாவதோர் அமைப்பு திடீரென்று சரிவரத் தெரியாத காரணத்தால் முழுதுமாகச் சீர்குலைந்து
நீண்ட காலப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதிக குறிப்பிட melt down என்ற வார்த்தையை
பயன்படுத்த அணுஉலை விபத்துகள் மக்களுக்கு வழி காட்டின .
1987 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 19 ம் தேதி திங்கட்
கிழமையைக் கறுப்புத் திங்கள் (Black Monday ) என்பர் .
அன்று பன்னாட்டு பங்குச் சந்தையில் திடீர் சீர்குலைவு
ஏற்பட்டு வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சி விளைந்தது. இதை
'melt down ' என்று அப்போது செய்தித்
தாள்கள் வர்ணித்தன..
.
No comments:
Post a Comment