வு விகுதிச் சேர்க்கை - தொடர்ச்சி
ozone depletion - ஒசோன் நலிவு /ஒசோ ன் மெலிவு
இன்றைக்கு உலகில் வாழும் மக்கள் சுற்றுச் சூழல் பற்றிய பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறார்கள் .இதில்
தீவிரமாக இருக்கும் அமில மழை,உலகளாவிய வெப்பமய மாக்கம் ,பசுமையக விளைவு இவற்றுடன்
ஒசோன் மண்டலத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஊறுபாடும் சேர்ந்துள்ளது.
ஒசோன் என்பது ஆக்சிசனின் ஒரு வடிவம் . நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் மூலக்கூறு இரு ஆக்சிஜன்
அணுக்களைப் பெற்றிருக்கிறது .ஆனால் ஒசோன் மூன்று ஆக்சிஜன் அணுக்களைப் பெற்றிருக்கிறது .
வேதிக் குறியீட்டு மொழியில் ஆக்சிஜன் மூலக்கூறை O (2) என்றும் ஒசோன் மூலக்கொரை O (3 )
என்றும் கூறுவர்.ஒசோனில் உள்ள இந்த அதிகப்படியான ஆக்சிஜன் அணு மக்கள் எதிர்பார்ப்பதைப்
போல பாதுகாப்பிற்குக் காரணமாயிருக்கிறது .ஆனால் உண்மையில் ஒசோன் ஒரு நச்சுத் தன்மையுள்ள
வளிமம் .சிறிதளவாக இருப்பினும் காசநோயால் அவதிப்படும் மக்களிடையே சுவாசக் கோளாறுகளை
ஏற்படுத்தி விடுகிறது. கார் போன்ற தானியங்கு வண்டிகள் வெளியேற்றும் புகையின் மீது சூரிய ஒளி
ஊடு பரவும் போதுஉண்டாகும் ஒளியியல் மூடு பனியில் இது காணப் படுகிறது .
ஆனால் உயர் வளி மண்டலத்தில் ஒசோன் பூமிக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமைந்திருக்கிறது .
வளி மண்டலத்தைச் சூரிய ஒளியோடு ஊடுறுவும், தீங்கு விளைவிக்கக் கூடிய புற ஊதாக் கதிர்களை
இந்த ஒசோன் மண்டலம் வடிகட்டி விடுகிறது. சூரிய ஒளிக் குளியலை எடுப்போருக்கு இது ஒன்றும்
கவலையூட்டுகின்ற விஷயம் இல்லை. ஆனால் அதிகமான புற ஊதாக் கதிர்வீச்சு புற்று நோயைத்
தூண்டக் கூடியது என்பத்குதான் துன்பந் தரக்கூடியது. வளி மண்டலத்தில் இந்த ஒசோன் மட்டும்
ஒரு படலமாக இல்லாதிருந்தால் உலகில் உள்ள பல வகையான உயிரினங்கள் உயிர் வாழ முடியாத
ஊர் இடர்பாடான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும் .
இது தொடர்பான ஓர் எச்சரிக்கையை 1980 -ல் அண்டார்டிக்கா துருவப் பகுதிக்கு மேலாக ஒசோன்
மண்டலத்தில் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு துளை ஏற்படுத்தியது . மேலும் இந்த ஒசோன் மண்டலம் கொஞ்சம்
கொஞ்சமாக அரித்தெடுக்கப்பட்டு இத் துளை அகன்று வருவதும் உறுதி செய்யப்பட்டது .இத் துளை பூமிக்கு
பெருமளவு புற ஊதாக் கதிர்களை அனுப்பி வைக்கக் கூடியது என்பதால் பின்னால் தடுத்து நிறுத்திக்
கொள்ள முடியாத பல தீங்குகளை ஏற்படுத்தி விடும் என எதிர்பார்க்கலாம் . இதையே இன்றைக்கு ஒசோன்
துளை (ozone hole ) என்று குறிப்பிடுகின்றார்கள் .
ஒசோன் மண்டலத்தின் நலிவு CFC என்று குறிப்பிடப் படுகின்ற குளோரோ புளுரோ கார்பன்களினால்
தூண்டப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.புகை போக்கி வழியாக வெளியேறும் ஆலைப் புகையில்
இது ஒரு மாசாக இருக்கிறது. கார் போன்ற தானியங்கு வண்டிகள் உமிழும் புகை, வெப்ப மாற்றிகளில்
பயன் படுத்தப்படும் குளிர்விப்பான்கள் ,தலை முடிச் சாயம் போன்ற வீட்டுப் பயன் பாட்டுப் பொருட்கள்
மூலமாகவும் CFC மாசுகள் வெளிப்படுகின்றன. இதனால் இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம்
ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்பட்டது .கார் போன்ற உந்து வண்டிகளுக்கான எரி பொருட்களில் சிறப்புக்
கலவைப் பொருட்களைக் கலந்து, அதன் கழிவில் மாசுகள் கட்டுப் படுத்தப் பட்டன. .சட்டங்கள்
இயற்றுவதன் மூலம் இவற்றை மக்களிடையே கட்டாயப் படுத்தி விடலாம் .ஆனால் ஏற்கனவே
வெளியேற்றப் பட்டு வளி மண்டலத்தில் தங்கியுள்ள CFC மாசுகள் எவ்வளவு காலத்தில்
இல்லாதொழியும் என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை.
இது ozone fear (ஒசோன் பயம் ) என்றொரு துணைச் சொல் ஏற்படக்
காரணமாய் இருக்கிறது .பிறருக்குத்
தெரியாமல் நாம் செய்கின்ற தவறுகள் எல்லோருக்கும் சேர்த்து விளைவிக்கும் ஒரு பொதுவான
தீங்கு தரும் அச்சமே 'ஒசோன் பயம் ' எனப்படுகிறது
ozone hole - ஒசோன் ஓட்டை என்றும் கூறலாம்
ozone cheating - ஒசோன்மை ஏய்ப்பு
No comments:
Post a Comment