வு -விகுதிச் சேர்க்கை - தொடர்ச்சி
அதிர் விசை - heavy metal
ஒரு பொருள் மற்றொரு பொருளைச் சுற்றி வளம் வருவதை சுற்றியக்கம் ( orbital motion )
என்றும் ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை சுழலழியக்கம் (spinning motion )
அல்லது தற்சுழற்சி (spin ) என்றும் கூறுவர்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதோடு ,தன்னைத் தானே யும் சுற்றிக் கொள்கிறது. சூரியனைச்
சுற்றி வருவதால் ஆண்டு காலச் சுற்று முறையில் பருவங்களும் ,தன்னைத் தானே சுற்றிக்
கொள்வதால் இரவு பகலும் வந்து போகின்றன.
பம்பரம் (top ) விளையாடுவோர் ,அதன் இயக்கங்களில் இவற்றோடு மற்றோர் வகையான
சுழற்சி யியக்கம் இருப்பதை அறிவர் .தற்சுழலும் பம்பரம் ஒரே இடத்தில் இருந்து கொண்டு
இயங்கினாலும், அதன் சாய்வான சுழலச்சு செங்குத்து அச்சை வலம் வரும். இவ்வியக்கத்தை
ஆங்கிலத்தில் precession என்றும் தமிழில் சாய்வுச் சுழற்சி என்றும் கூறுவர்.
Precession - சாய்வுச் சுழற்சி
சில வேதிப் பொருட்கள் தம் மீது கட்புலனுக்கு உட்படாத கதிர் வீச்சுக்கள் விழும் போது, அவற்றை
உட்கிரகித்துக்கொண்டு ,கட்புலனறி ஒளியாக வெளிவிடும் . இந் நிகழ்வை ஒளிர்வு /ஒளிர்மை
என்பர்.
Luminescence - ஒளிர்வு/ஒளிர்மை
பொதுவாக ஒரு பெயர் அல்லது வினைச் சொல்லின் பொதுப் பண்பியல்புகளைக் குறிப்பிட மை விகுதிச் சேர்க்கை
மிகவும் பயன் தருகிறது .
எ.கா. பெண் -பெண்மை
ஆண் - ஆண்மை
ஆளு - ஆளுமை
thermo luminescence - வெப்ப ஒளிர்மை
சில புறத் தாக்குதல் இருக்குமட்டும் ஒளிரும் .வேறு சில புறத் தாக்குதல் நீக்கப் பட்ட பிறகும் ஒளிரும்.
fluorescence - உடனொளிர்வு /உடனொளிர்மை
Phosphorescence - நின்றொளிர்வு/ நின்றொளிர்மை
resonance - ஒத்ததிர்வு
nuclear magnetic resonance - அணுக கரு காந்த ஒத்ததிர்வு
resonator - ஒத்ததிர்வி /ஒத்ததிர்வான்
displacement - இடப்பெயர்வு
displacement current - இடப்பெயர் மின்னோட்டம்
பெயர்ச்சொல்லை பெயர் அடைச் சொல்லாக ,அர்த்தம் வேறுபடாமல் மாற்ற வு விகுதி இங்கு நீக்கப் பட்டுள்ளது .
damped vibration /oscillation - தடை அதிர்வு/அலைவு
undamped vibration /oscillation - தடையிலா அதிர்வு /அலைவு
forced vibration - தூண்டல் அதிர்வு /அலைவு
lattice vibration - அணித்தள அதிர்வு/அணிம அதிர்வு
equipartition - சமப் பகிர்வு
transition temperature - (நிலைப் ) பெயர்வு வெப்ப நிலை
analysis - பகுப்பாய்வு
assay - தேர்வுப் பகுப்பாய்வு
friction -உராய்வு
static friction - ஓய்வு நிலை உறைவு
dynamic friction - இயக்க நிலை உராய்வு
by pass - குறுக்குப் பாய்வு
abstract - ஆய்வுரைச் சுருக்கம்
relaxation time - தளர்வு நேரம்
அதிர் விசை - heavy metal
'கன உலோகம் ' எனப் பொருள் கற்பித்தால் அது தவறாகும் .ஒப்பு அடர்த்தி - 3 க்கும் குறைவாக உள்ள
அலுமினியம் ,மக்னீசியம் மற்றும் இவற்றின் கலப்பு உலோகங்கள் போன்றவை லேசான உலோகங்களாகும் .
யுரேனியம் ,பிளாட்டினம் ,தங்கம் போன்றவை கனமான உலோகங்களாகும் .இதற்குக் காரணம்
இவற்றில் பொருள் திணிவு அதிகமாக இருப்பதுதான் .ஒளிமயமான ஒரு மேடை அமைத்து ,பலவேறு
இசைக்கருவிகளை மீட்டக்கூடிய கலைஞர்களை அமர்த்தி ,உரத்த சத்தத்துடன் இசை யெழுப்பி ஆடல்
பாடல்களையும் சேர்த்தளிப்பதை 'Heavy metal ' என்றும் சுருக்கமாக 'metal ' என்றும் குறிப்பிடுகின்றனர் .
1970 களில் தீவிர அபிநயம் என்ற பொருளில் 'hard rock ' என்ற சொல்லைப் பயன் படுத்தினர் ..இதற்குக்
காரணம் இதில் பங்கேற்கும் இசைக் கலைஞர்கள் அனைவரும் உடல் அங்கங்களை தீவிரமாக அசைத்து
இசைப்பதை வழக்கமாகக் கொண்டதுதான் .இவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்களாக ,நீண்ட தலை
முடியுடனும் ,தோலாடை களை அணிந்தும் ,கழுத்தில் தடித்த தங்கச் சங்கிலியுடனும் ,காதில்
கடுக்கனுடனும் காணப்பட்டார்கள் .
அதிர் விசைக்குப் பழக்கமானவர்கள் தலை யசைப்பவர்களாக (head banger ) இருப்பார்கள் . இச் சொல்
நடனமாடும் போது இசைக்கும் இணைக்கும் ஏற்ப தலை யசைப்பதிலிருந்து பிறந்ததாகும் .ஆனால்
இன்றைக்கு இச் சொல் மதி கெட்ட மனிதர்களைக் (moron ) குறிப்பிடுவதற்கான துணைச் சொல்லாகப்
பயன் படுத்தப்படுகிறது அதிவிசைக் கலைஞர் களின் நாகரிக வளர்ச்சியில் ஏற்பட்ட புதுமையாக்கத்தினால் எண்ணிறைந்த புதிய
.
சொற்கள் விளைந்துள்ளன .அதிர்விசையோடு விரைவுத் தன்மையும் கலந்த போது அதை 'hard core ' என்றும்
'thrash ' என்றும் குறிப்பிட்டனர் ஒரு குறிப்பிட்ட வேறுபாட்டின் காரணமாக speed metal ,death metal என்று
அதிர்விசைக் கலைஞர் களை அழைக்கின்றனர்.
.
No comments:
Post a Comment