வு விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி
acitivity -சிதைவு வீதம்
auto claving - சுய யூக்க உறைவு
ablation - பாறைச் சிதைவு (புவியமைப்பியல் )
பிற துறைகளில் இது வேறு பொருளில் பயன் படுத்தப் படுகிறது .
இயற்பியலில் ,பருமச் சுருக்கம் என்றும் மருத்தவத் துறையில்
திசுவை வெட்டி அகற்றுதல் என்றும் ,வேதியியலில் வெப்பக்
கடு நீக்கம் (விரைந்து நீக்குதல் )
altitude effect - குத்துயர விளைவு
centre of oscillation - அலைவு மையம்
chemical bond - வேதிப் பிணைப்பு
ionic bond - அயனிப் பிணைப்பு
condensation - உறைவிப்பு
solid state physics - திண்ம இயற்பியல்/ உறைமை
condensed matter Physics - உறைம இயற்பியல்
condensed matter - உறைமம்
fountain effect - நீரூற்று விளைவு
space -time curvature - வெளி கால வளைவு
mean free path - சராசரி மோதலிடைத் தொலைவு
plastic deformation - நெகிழ்ம உருக்குலைவு catastrophy - திடீர் நிலைக் குலைவு
ஒரு சொல் கலைச் சொல்லாகவும் இருக்க முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு .
catastrophe என்றால் பேரழிவை உண்டாக்குகின்ற, பெருந் துயரம் தருகின்ற ஒரு திடீர்
நிகழ்வு எனலாம். நிலைக் குலைவு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க
மொழிச் சொல் அப்படியே ஆங்கிலத்தில் புகுந்துகொண்டது .
ஒரு சீரான மாற்றத்தோடு மாறிக் கொண்டிருக்கும் ஒன்றின் போக்கில் திடீரென்று
விளையும் கோட்டங்களைப் பற்றி விவரிக்கும் இது நிலைக் குலைவு கொள்கையாக
catastrophe theory ஆனது. இது இன்றைக்கு கணிதத்தில் ஒரு பிரிவாக உள்ளது .
தொடர்ச்சியான மாற்றங்களை மட்டும் விவரிக்கும் கணிமுறை கணிதத்திற்கு
(Calculus ) நேர் எதிர் மாறானது.
No comments:
Post a Comment