வு விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி
admissible solution - ஏற்புடைத் தீர்வு
algorithm - கணிதத் தீர்வு முறை
non destructive testing - அழிவிலா ஆய்வு முறை
search coil - ஆய்வுச் சுருள்
fluxuation - ஏற்றத் தாழ்வு
half life - அரை வாழ்வு
alpha emition - ஆல்பா உமிழ்வு
alpha emitter - ஆல்பா உமிழ்வான் /ஆல்பா உமிழ்மம்
திண்மம் ,நீர்மம், வளிமம் போல உமிழும் பொருட்களை உமிழ்மம் என்று பொதுவாக
அழைக்கலாம் .
membrane - சவ்வு
osmosis - சவ்வூடு பரவுதல்
rest mass - ஓய்வு நிறை
blood doping - இரத்தச் செறிவூட்டல்
rest mass - ஓய்வு நிறை
blood doping - இரத்தச் செறிவூட்டல்
ஓர் ஊடகத்தில் வேற்றுப் பொருளின் சேர்க்கையை ச் செய்து அதன் இயற்பியல் தன்மைகளில் குறிப்பிடும்படியான மாற்றங்களைச் செய்வார்கள். இதனால் அதன் செயல் திறனில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்த முடியும். குறைக் கடத்திகளில்
(semi conductors ) நேர் மின் வகை (P -type ) எதிர் மின் வகை (N -type ) என்று ஏற்படுத்தி மின்னணுவியலில் புரட்சியை வளர்ச்சி பெறச்
செய்துள்ளார்கள் .இந்த வலி முறையை 'doping ' (கலப்பு ) என்பர் திண்ம இயற்பியலார்.இதைப் புறப் பொருள் ஊட்டம் என்றும்
விளக்கம் கூறுவர்.இவ்வாக்கமுறை இரத்தச் செறிவூட்டல் என்ற புதிய சொல்லைப் புதிய பொருளுரைக்க வழங்கி இருக்கிறது .
பொதுவாக இரத்தத்தில் புறப் பொருளைக் கலக்க முடியாது. ஏனெனில் அதை ரத்தம் ஏற்றுக் கொள்ளவதில்லை .ஒரு வகையான
இரத்தம் மற்றொரு வகையான இரத்தத்தைக் கூட ஏற்றுக் கொள்வதில்லை.ஆனால் ஒரு வகையான இரத்தம் அதே வகையான
இரத்தத்தை ஏற்றுக்கொள்கிறது
.
இரத்தம் A ,B ,AB மற்றும் O என நன்கு வகைப் படும். மனிதர்களின் சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A ,B என்ற
இரண்டு வகையான
ஆண்டிஜென்கள் இருக்க முடியும். A மட்டும் இருந்தால் அது A வகை இரத்தம் என்றும்
B மட்டும் இருந்தால் அது B வகை இரத்தம் என்றும் ,இரண்டும் கலந்திருந்தால் AB வகை இரத்தம் என்றும்,
ஒன்றுமில்லாதிருந்தால் O வகை இரத்தம் என்றும் கூறுவர். இரத்தத்தின் பிளாஸ்மாவில் எதிர்ப்பொருள்கள்
உள்ளன. A வகை இரத்தத்தின் பிளாஸ்மாவில் B எதிர்ப் பொருளும், B வகை இரத்தத்தின் பிளாஸ்மாவில் A
எதிர்ப் பொருளும் AB வகை இரத்தத்தின் பிளாஸ்மாவில் எந்தவொரு எதிர்ப்பொருள் இல்லாமலும் o வகை
இரத்தத்தின் பிளாஸ்மாவில் இரு வகை எதிர்பொருளும் இருக்கும் .
A வகை இரத்தத்துடன் B வகை அலாது AB வகை இரத்தத்தைக் கலந்தால் A வகை இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவின்
B எதிர்ப் பொருள் B வகை அல்லது AB வகை இரத்தத்திலுள்ள B ஆண்டிஜென் களுடன் வினை புரிந்தும் ,B வகை
இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவின் A எதிர்ப் பொருள் A வகை இரத்தத்திலுள்ள A ஆண்டிஜென் களுடன் வினை புரிந்தும்
இரத்தத்தை திரிவுறச் செய்து கெட்டிப் படுத்திவிடும் .இக் கட்டிகள் சிறு இரத்தக் குழாய்களை அடைத்துவிடும் .
இரத்த ஓட்டம் தடைப்படுவதால் இறுதியில் மனிதன் இறக்க நேரிடும் .
இதிலிருந்து A வகை இரத்தத்தை A மற்றும் AB வகை இரத்தம் உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம் .
அது போல B வகை இரத்தத்தை B மற்றும் AB வகையினர் பெறலாம். AB வகை இரத்தத்தை அவ்
வகையினர் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் .o வகை இரத்தத்தை o ,A ,B ,AB வகையினர் அனைவரும்
பெற்றுக் கொள்வதால் பாதிப்பில்லை .AB வகை இரத்தமுள்ளவர்கள் அனைத்துவகை இரத்தமுள்ளவர்களிடமிருந்து
இரத்தம் பெறத் தகுதியுள்ளவர்கள் .
இது தவிர Rh (Macasus Rhesus - என்ற குரங்கின் இரத்தத்தைக் கொண்டு ஆராய்ந்து கண்டுபிடித்ததால் இப்பெயர்
பெற்றது.) என்றொரு காரணியும் இரத்த மாற்றத்தை மட்டுப் படுத்துகிறது. மக்களில் ஏறக்குறைய 85 சதவீதம்
பேருக்கு இந்த ரீசஸ் புரதப் பொருள் இருக்கிறது. இவர்களை ரீசஸ் தன்மையர் (Rh -positive ) என்றும் எஞ்சிய
15 சதவீதம் மக்களின் இரத்தத்தில் இந்த ரீசஸ் பொருள் இருப்பதில்லை. இவர்களை ரீசஸ் இன்மையர்
(Rh -negative ) என்றும் கூறுவார் .இரத்த மாற்றம் செய்வதற்கு முன்னர் இரத்த வகை, ரீசஸ் காரணி இவற்றையெல்லாம்
ஆராய்ந்து பொருத்தம் பார்த்தே செய்ய வேண்டும் என்பதை இது முன்னறிவிக்கிறது .
தடகள வீரர்கள் வெற்றி பெற குறுகிய நேரத்தில் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது.
குத்துச் சண்டை வீரர்கள் நெடு நேரம் ஆடுகளத்தில் சண்டை போட வேண்டியிருக்கிறது.
அப்போது தீவிரமாகச் செயலாற்றும் உடல் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியை இரத்த
அணுக்கள் இரத்த ஓட்டம் மூலம் எடுத்துச் சென்று அளிக்கின்றன. போதிய இரத்த அணுக்கள்
இல்லையென்றால் சக்தியின் பற்றாக்குறையால் களைப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணம்
வளர்சிதை மாற்றம் ஏற்படும் வீதம் போதாமல் இருக்கிறது. இதற்காக தடகள வீரர்கள்
போட்டியில் கலந்து கொள்வதற்குச் சியல் நாட்களுக்கு முன்னர் அவர்களுடைய உடலிலிருந்து
இரத்தத்தை எடுத்து பாதுகாத்து வருவார்கள் .இதனால் ஏற்பட்ட இரத்தச் சிவப்பணுக்களின்
இழப்பினை ,அவர்களுடைய உடல் ஒருசில நாட்களுக்குள் புதுப்பித்துக் கொண்டு விடுகிறது.
போட்டியில் பங்கேற்பதற்கு சற்று முன்னர் அல்லது முதல்நாள் முன்பு அவர்களிடமிருந்து
எடுக்கப்பட்ட அதே இரத்தத்தை உடலுக்குள் செலுத்தி விடுவார்கள் .இதனால் வீரர்களின் இரத்தத்தில்
சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ,களைப்பின்றி
நெடு நேரம் விளையாட முடிகிறது..இம்முறையை
இரத்தச் செறிவூட்டல் என்றழைக் கின்றனர்..
.
No comments:
Post a Comment