வு விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி
coherence length - இசைவினைத் தொலைவுdegeneracy - சீர் குலைவு
strong - வன் சீர் குலைவு
weak - மென் சீர் குலைவு
distortion - உருக் குலைவு
orientation - திசை யமைவு
perturbation - சிற்றுலைவு
memory metal -நினைவு உலோகம்
isotopic effect - சம அணு எண்ம விளைவு
effect என்பது விளைவு என்று தமிழாக்கம் செய்யப்பட்டு வழக்காற்றில் ஒரு
பின்னொட்டாக ப் பயன் படுத்தப்படுகிறது .
Compton effect - காம்ப்டன் விளைவு
Doppler effect -டாப்ளர் விளைவு
Faraday effect - பாரடே விளைவு
Hall effect - ஹால் விளைவு
green house effect - பசுமையக விளைவு
Joule -Thompson effect - ஜூல் தாம்சன் விளைவு
photo electric effect - ஒளி மின் விளைவு
piezo electric effect - ஒலி மின் விளைவு
Peltier effect - பெல்டியர் விளைவு
tunnel effect - புழல் விளைவு Blip - ஙப்போல் வளைவு
ரேடார் (RADAR ) என்பது முதலெழுத்துச் சொல் .Radio detection and ranging என்ற விளக்கச்
சொல்லின் சுருக்கமாக மலர்ந்தது .இது போல ஆங்கில மொழியில் பல முதலெழுத்துச்
சொற்கள் உள்ளன. தமிழில் அப்படிப்பட்ட சொற்களை அமைக்க முடியாது. ஏனெனில்
இன்ன எழுத்திற்குப் பிறகு இன்ன எழுத்துத்தான் வர வேண்டும் ,முதலிலும் ,இறுதியிலும் .
இன்னின்ன எழுத்துத்தான் வர வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இக் கட்டுப்பாட்டை
தளர்த்திக் கொள்ள முடியாது. ஏனெனில் அது மொழியின் உச்சரிப்பில் சீரற்ற இடைவெளியை
ஏற்படுத்தி விடும் .
LASER - Light Amplification by Stimulated Emission of Radiation
MASER - Microwave Amplification by Stimulated Emission of Radiation
SONAR - Sound Navigation and Ranging
PULSAR - Pulsating Star
QUASAR - Quasi Stellar Radio Source
போன்ற சில சொற்களை ஆங்கிலத்தில் காணப்படும்
முதலெழுத்துச்சொற்களாகும்
வெகு தொலைவில் இயக்க நிலையில் அல்லது ஓய்வு நிலையில் உள்ள பொருளைத்
(குறிப்பாக விமானம் ,கப்பல், ஏவுகணை ,கவச வண்டி ) துல்லியமாகக் கண்டறிய
உதவும் ரேடார் ஓர் உயர் தொழில் நுட்பக் கருவி .அங்கு பொருள் இருப்பின் ,திரையில்
சுட்டிக் காட்டப்படும் வரைபடக் கோட்டில் ஒரு கோட்டம் காணப்படும் .இதையே
BLIP என்று கூறுவர்.திரையின் மையத்திலிருந்து இக்கோட்டத்தின் இருப்பிடம்
அல்லது இடப்பெயர்ச்சி ,இலக்கின் இருப்பிடத்தை த் தெரிவிக்கும் .
பின்னர் ஏதாவது ஒரு வரைபடக் கோட்டில் காணப்படும் பொதுநிலை திரிந்த
மாற்றங்களுக்கும் இதே சொல்லைப் பயன்படுத்தினர் .இறுதியாக இது வணிகம்
மற்றும் நிதித் துறைகளில் பொதுநிலைத் திரிவு ஏற்படுவதற்குக் காரணமாகும்
நிகழ்வுகளை விவரிக்கும் சலசலப்பு மொழியாக நிலைபெற்றது .1988 -ல்
இங்கிலாந்து நாட்டின் நிதித்துறை உயர் அதிகாரி ஒருவர் ஏற்றுக்கொள்ளத்
தக்கவாறு அதிகரித்த பண வீக்க விகிதத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது
இச் சொல்லைக் கையாளப் போக பிற்பாடு அதுவே நிலைபெற்றது .தொடர்ச்சியான
மாற்றங்களின் சீரான போக்கில் ஏற்படும் சிறிய மற்றும் தற்காலியமான
சீர்குலைவுகளை 'BLIP ' என்ற சொல் குறிப்பிடுவதாக இப்போது கொள்ளப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment