Saturday, October 31, 2020

Kavithai

 டாப்ளர் பெயர்ச்சி 

சார்பியக்கம் அளவீடுகளில்  

ஒரு தோற்ற மாற்றத்தை ஏற்படுத்துமே

ஓய்வில் செய்யும் அளவீடும்

ஓடிக்கொண்டே செய்யும் அளவீடும்

ஒன்றுபோல இருப்பதில்லையே 

அலை உமிழும்  மூலமும்

அதை அளவிடும் மூலமும்

அவற்றின் சார்பியக்கத்தால்

அதிர்வெண்ணில் ஒரு

தோற்ற மாற்றத்தை விளைவிக்குமே

இதுவே டாப்ளர் பெயர்ச்சியாகுமே 

அலைமூலம் அலைபரவும் திசையில்

u என்ற திசைவேகத்தில்

அலைமூலம் நோக்கிச் செல்ல

அலைநீளம் சுருங்கித் தோன்றுமே

அளவிடும் மூலம் ஓய்விலிருக்க

அலைநீளப் பெயர்ச்சி

அலைவு நேரத்தில் அலைமூலம்

கடக்கும் தொலைவு மட்டுமே

அலையின் திசை வேகம் c எனில்  

தோற்ற  அலைநீளம்  λ’ = λ  [1- u/c]

தோற்ற அதிர்வெண் n’ = n [c/(c-u)]

எனக் குறிமொழி குறிப்பிடுமே

 

அலைமூலம் அலைபரவும் திசைக்கு

எதிர்த்திசையில் விலகிச் செல்ல விரியும்

அலைநீளம்  விரிந்து தோன்றுமே

அளவிடும் மூலம் ஓய்விலிருக்க

அலைநீளக் கூடுதல்  

அலைவு நேரத்தில் அலைமூலம்  

கடக்கும் தொலைவாகுமே

அலையின் திசை வேகம் c எனில்  

தோற்ற  அலைநீளம்  λ* = λ  [1+ u/c]  

தோற்ற அதிர்வெண் n’ = n [c/(c+u)]

எனக் குறிமொழி குறிப்பிடுமே

  

ஆய்கருவி  அலைபரவும் திசையில்

v என்ற திசைவேகத்தில்

அசையா அலைமூலம் நோக்கிச் செல்ல  

c என்ற திசைவேகத்தில்

வரும் ஒரு முழு அலை

குறைந்த நேரத்தில் கடக்க

அதிர்வெண் அதிகரிக்குமே

தோற்ற அதிர்வெண் n’ = n [(c+v)/c]

தோற்ற  அலைநீளம்  λ* = λ  [ c/(c+v)]

எனக் குறிமொழி குறிப்பிடுமே

 

ஆய்கருவி  அலைபரவும் திசையில்

v என்ற திசைவேகத்தில்

அசையா அலைமூலம்  விட்டு

விலகிச் செல்ல  

c என்ற திசைவேகத்தில்

வரும் ஒரு முழு அலை

கூடுதல் நேரத்தில் கடக்க

அதிர்வெண் குறையுமே

தோற்ற அதிர்வெண் n’ = n [(c-v)/c]

தோற்ற  அலைநீளம்  λ* = λ  [ c/(c-v)]

எனக் குறிமொழி குறிப்பிடுமே

 

அலை மூலமும் அளவிடும் மூலமும்

ஒன்றையொன்று நெருங்கி வர

தோற்ற அதிர்வெண் n’ = n (c+v)/(c-u)]

தோற்ற  அலைநீளம்  λ* = λ  [(c-u)/(c+v)]

எனக் குறிமொழி குறிப்பிடுமே

ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்ல

தோற்ற அதிர்வெண் n’ = n (cvv)/(c+u)]

தோற்ற  அலைநீளம்  λ* = λ  [(c+u)/(c-v)]

எனக் குறிமொழி குறிப்பிடுமே

 

அலைமூலம் அருகில் வர

தோற்ற அலைநீளம் குறைவது

நீலப்பெயர்ச்சியாகும்

அலைமூலம் விலகிச் செல்ல

தோற்ற அலைநீளம் அதிகரிப்பது

செம்பெயர்ச்சியாகும்


Kavithai

 

9. ஊசல் விதிகள்

 தேவாலயத்தில் ஒருநாள்

வீசிய காற்றில்

விளக்குகள் ஊஞ்சலாட

உற்றுநோக்கிய கலிலியோ

ஊசல் விதிகளைக் கண்டறிந்தார்

ஊசலின் சீரிசை இயக்கம்

அதன் இயக்க ஆற்றல் நிலையாற்றலாக

நிலையாற்றல் இயக்கவாற்றலாக

தொடர்ச்சியாக மாறுவதால்

தொடருவதாகும்

ஓய்வு நிலையிலிருந்து விலகிச் செல்ல

நிலையாற்றல் கூடும்

பெரும இடப்பெயர்ச்சியில்

நிலையாற்றல் பெருமம்

இயக்கவாற்றல் சுழிமம்

ஓய்வு நிலையில்

இயக்கவாற்றல் பெருமம்

நிலையற்றல் சுழிமம்

ஊஞ்சலாடும் விளக்கு எப்போதும்

மீட்பு விசையால்

ஓய்வு நிலை நாடும் 

விளக்கு இயங்கும் திசைக்கு இது 

எப்போதும் எதிர் திசையில் இருக்கும்

இதனளவு இடப்பெயர்ச்சி

அதிகமாக அதிகமாகும்

ஓரலகு இடப்பெயர்ச்சிக்கு

மீட்பு விசையின் அளவு

விசை மாறிலியாகும்

ஊசல் ஒரு முறை அசைந்தாட

எடுத்துக் கொள்ளும் நேரம்

அலைவு நேரமாகும்

விளக்கின் நிறையைப் பொருத்ததில்லை

ஊசலின் நீளத்தை மட்டுமே

பொருத்திருக்கின்றது.

கனமாக இருந்தாலும்

லேசாக இருந்தாலும்

மெசுவாக ஆடினாலும்

விரைவாக ஆடினாலும்

அலைவு நேரத்தில் 

மாற்றமில்லை என்றாலும் 

அலைவு நேரம் அலைவீச்சைப்

பொருத்ததில்லை என்றாலும்

கருத்துஒன்றே

அலைவு நேரத்தின் இருமடி

ஊசல் நீளத்திற்கு

நேரியல் தொடர்பில்

மாறா நீளமுடைய எவ்வூசலுக்கும்

அலைவுநேரம் ஒன்றே

Wednesday, October 28, 2020

KAVITHAI

8. உராய்வு விசையும் விதிகளும்

ஒரு  பரப்பில் ஒரு பொருள்

சார்பியக்கம் கொள்ளும்போது

அப்பொருளின் இயக்கத்தை

உராய்வு  எதிர்க்குமே

காரணம் பரப்புகளின் காணப்படும்  

நுண்ணிய மேடு பள்ளங்களே    

 

பொருளிடைப்பரப்பில் செயல்படும்

உராய்வு விசை என்பது

சமநிலையிலிருக்கும் ஒரு பொருள்

மற்றொரு பொருள் மீது

நழுவிச் செல்வதை தடுக்கும்

பெரும விசையே ஆகும் 

 

உராய்வு விசையின் உச்சவரம்பு

பொருளெடையின் நேர்குத்து வினைவிசை

இவையிரண்டின் தகவு

அவ்விரு மூலப்பொருட்களுக்கான

உராய்வுக்குணமாகும்

பொருளெடையின் நேர்குத்து வினை விசை

மாறாதவரை  இது பொருளிடைப்பரப்பின்

அளவு சார்ந்ததில்லை

 

உராய்வுவிசையின் உச்சவரம்பு

பொருளெடையின் நேர்குத்து வினைவிசை

இரண்டுமிணைந்த

விளைவிசை செயல்படும் திசைக்கும்

பொருளெடையின் நேர்குத்து வினைவிசைக்கும்

இடைப்பட்ட கோணம்

உராய்வுக்கு கோணம் ஆகுமே

Friday, October 23, 2020

Kavithai

 

மின்னணுவியலில் நுழைவாயில் சுற்றுக்கள்      

         ஒன்று அல்லது பல உள்ளீடுகளுக்கு

         ஒரு வெளியீட்டைத் தரும்

         சுற்றுக்களை கேட் என்றும் கூறுவர்

         மறு குறிப்பலை வரும்வரை

         ஒரு குறிப்பலையால் செயல்படும்

        இதுவொரு  மின்னணுவியல் சுற்று

        உட்புகு அலையின் காலம் அல்லது

       அலைவீச்சைத் தேர்வு செய்யும் 

       மின்னணுவியல் சுற்றுமாகும்   

 

 

      மின்னணுவியலில்   OR  கேட்  என்பது

      கூட்டல் செயலி

      ஆணோ பெண்ணோ யாரவது

      ஒருவரோ அல்லது சேர்ந்தோ

      வந்தால் போதும் தானாய்த் 

      திறக்கும் வாயில்  OR

      இரு உள்ளீடுகளில்  இரண்டும்

      அல்லது ஏதேனும் ஒன்று

      இருந்தால் மட்டுமே

      வெளியீடு தருவது இது  

 

 

      மின்னணுவியலில்   AND  கேட்  என்பது

      பெருக்கல்  செயலி

     ஆணும் பெண்ணும் சேர்ந்து

     வந்தால் மட்டுமே தானாய்த்

     திறக்கும் வாயில் AND

     இரு உள்ளீடுகளில்  இரண்டும்

     அல்லது ஏதேனும் ஒன்று

     இல்லாமலிருந்தால் 

     வெளியீட்டைத் தர மறுப்பது இது

 

 

      மின்னணுவியலில்  NOT  கேட்  என்பது

      தலைகீழ் செயலி

      உள்ளீடு இருந்தால் வெளியீடில்லை

      வெளியீடு இருந்தால் உள்ளீடில்லை

      பெண்ணை ஆணாய் ஆணைப் பெண்ணாய்

      நிலை மாற்றும் சுற்று

 

      மின்னணுவியலில்  NOR  கேட்  என்பது

      கூட்டல் செயலியின் தலைகீழ் செயலி

      மின்னணுவியலில்  NAND  கேட்  என்பது

      பெருக்கல்  செயலியின் தலைகீழ் செயலி

 

Tuesday, October 13, 2020

kavithai

 

கெப்ளரின் விதிகள்

 

சூரியனும் சுற்றிவரும் கோள்களும்

சூரியக் குடும்பமாகும்

குடும்பத் தலைவன் சூரியன்

கட்டமைப்பின் நடு  மையத்தில்

கோள்களின் சுற்றுப்பாதைகள்

நீள் வட்டப்பாதைகளாகும்.

நீள் வட்டப்பாதைக்கு இரு மையங்கள்

அதிலொன்று சூரியனின் அமைவிடமாகும்

இதுவே கெப்ளரின் முதல்  விதியாகும்

 

தொலைவில் ஏற்படும் மாற்றத்தால்

ஈர்ப்பில் ஏற்படும் மாற்றத்தைச்

சமன்செய்ய  சூரியனுக்கு

தொலைவிலிருந்தால் கோ ளின்

இயக்கவேகம்  குறைவாகவும் 

அருகிலிருந்தால் அதிகமாகவும் இருக்குமே

அதனால் ஓரலகு நேரத்தில்  ஆரம்

கூட்டிச் செல்லும் பரப்பு

சமமாக இருக்குமே  

பரப்பு வேகம் ஒரு மாறிலி என்பது

கெப்ளரின் இரண்டாம் விதியாகும்.

 

நிலைத்த இயக்கத்திற்கு

மைய விலகு விசை ஈர்ப்பு விசையாகுமே

இத் தொடர்பு கோளின் இயக்க வேகத்தின்

இருமடி மற்றும் ஆரத்தின் பெருக்கல் பலன்

ஒரு மாறிலி என்று தெரிவிக்குமே

v2 r = மாறிலி என்பது இதன் குறிமொழியாகுமே

கோணத் திசைவேகம்  என்பது

கோணப்பெயர்ச்சி வீதமாகும்.

சுற்றுப்பாதை மற்றும் கோணத் திசை வேகம்

 v = r  என்ற தொடர்பில் இருக்குமே

ஒன்றில் ஒன்றை பதிலீடு செய்ய

ஆரத்தின் மும்மடி

சுற்றுக் காலத்தின்  இருமடிக்கு

நேர்விகிதத் தொடர்பிலிருக்கின்றது

இதுவே கெப்ளரின் மூன்றாம் விதியாகும்

Sunday, October 11, 2020

kavithai

 

இயக்கவாற்றல்

 

ஒரு குறிப்பிட்ட நிறையுடைய பொருளொன்று

ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தில்

இயங்கிச் செல்ல அப்பொருள்

ஒரு இயக்கவாற்றலைப் பெறுமே.

 

ஓய்வு நிலையிலில் இருக்கும் ஒரு பொருளை

அத்திசை வேகத்தில் இயக்க

ஒரு முடுக்கம் கொடுக்கப்படவேண்டுமே

t  என்ற காலத்தில் பொருள் இவ்வேகத்தை

அடைந்தால் செயல்படும் முடுக்கம்

வேகத்திற்கும் காலத்திற்கும் உள்ள தகவாகும்

நியூட்டனின் இயக்கவியல் விதிப்படி

முடுக்கத்தை நிறையால் பெருக்க

விசை கிடைக்குமே

விசையை இடப்பெயர்ச்சியால் பெருக்கக்

செய்த வேலை கிடைக்குமே

இடப்பெயர்ச்சி என்பது

சராசரி வேகத்தில் கடந்த தொலைவு

தொடக்க வேகம் சுழியென்றால்

இதன் மதிப்பு வேகத்தை காலத்தால் பெருக்கக்

கிடைப்பதில் பாதியே

நிறை முடுக்கம் இடப்பெயர்ச்சி இவற்றின்

பெருக்கல் பலன்    வேலை  ஆகும்

இதுவே பொருளின் இயக்கவற்றாலாகும்

இதை (1/2)mv2  என்ற குறிமொழி குறிப்பிடுமே

 

ஆற்றலின் அலகு  ஜுல் என்பர்

ஓரலகு நிறையுடைய பொருளொன்று

ஓரலகு வேகத்தில் இயக்கிச் செல்ல

அதன் ஆற்றல்  1/2 ஜுல்  ஆகுமே

Saturday, October 10, 2020

kavithai

 

நியூட்டனின் நேர்கோட்டு  இயக்க விதிகள்

 

இடப்பெயர்ச்சி வீதத்தை வேகம் என்பர்

வேகப்பெயச்சி வீதத்தை முடுக்கம் என்பர்

முடுக்கத்தை காலத்தால் பெருக்கக்  

கிடைக்குமே கூடுதல் வேகம்.

இக்கூடுதல் வேகமும்  தொடக்க வேகமும் கூட்டக்   

கிடைக்குமே இறுதிவேகம்

இதை v = u  + at  என்று குறிமொழி கூறுமே

 

முடுக்கம் இருந்தால் வேகம் தொடர்ந்து

மாறுபடும் சீராக

தொடக்க வேகம் இறுதி வேகம் இவற்றின்

கூடுதலின் சரிபாதி சராசரி வேகமாகும்

சராசரி வேகத்தில் இக்காலத்தில்

கடக்கும் தொலைவும்

தொடக்க வேகத்தோடும் முடுக்கத்தோடும்

கடக்கும் தொலைவும் சமமே

வேக மாற்றத்தை முடுக்கத்தால் வகுக்க

காலமும்

சராசரி வேகத்தை  காலத்தால் பெருக்க

இடப்பெயர்ச்சியும் கிடைக்குமே  

இதை V2 = u2 + 2aS     என்று குறிமொழி கூறுமே

 

சராசரி வேகத்தில் ,இறுதி வேகத்தின் மதிப்பை

தொடக்க வேகத்தால் நீக்கி விட்டு

காலத்தால் பெருக்க இடப்பெயர்ச்சி கிடைக்குமே

இதை S = ut + ½ at2     என்று குறிமொழி கூறுமே

Friday, October 9, 2020

kavithai

 

ஊசல் விதிகள்

 

தேவாலயத்தில் ஒருநாள்

வீசிய காற்றில்

விளக்குகள் ஊஞ்சலாட

உற்றுநோக்கிய கலிலியோ

ஊசல் விதிகளைக் கண்டறிந்தார்

ஊசலின் சீரிசை இயக்கம்

அதன் இயக்க ஆற்றல் நிலையாற்றலாக

நிலையாற்றல் இயக்கவாற்றலாக

தொடர்ச்சியாக மாறுவதால்

தொடருவதாகும்

ஓய்வு நிலையிலிருந்து விலகிச் செல்ல

நிலையாற்றல் கூடும்

பெரும இடப்பெயர்ச்சியில்

நிலையாற்றல் பெருமம்

இயக்கவாற்றல் சுழிமம்

ஓய்வு நிலையில்

இயக்கவாற்றல் பெருமம்

நிலையற்றல் சுழிமம்

ஊஞ்சலாடும் விளக்கு எப்போதும்

மீட்பு விசையால்

ஓய்வு நிலை நாடும் 

விளக்கு இயங்கும் திசைக்கு இது 

எப்போதும் எதிர் திசையில் இருக்கும்

இதனளவு இடப்பெயர்ச்சி

அதிகமாக அதிகமாகும்

ஓரலகு இடப்பெயர்ச்சிக்கு

மீட்பு விசையின் அளவு

விசை மாறிலியாகும்

ஊசல் ஒரு முறை அசைந்தாட

எடுத்துக் கொள்ளும் நேரம்

அலைவு நேரமாகும்

விளக்கின் நிறையைப் பொருத்ததில்லை

ஊசலின் நீளத்தை மட்டுமே

பொருத்திருக்கின்றது.

அலைவு நேரத்தின் இருமடி

ஊசல் நீளத்திற்கு

நேரியல் தொடர்பில்

மாறா நீளமுடைய எவ்வூசலுக்கும்

அலைவுநேரம் ஒன்றே

 

இயந்திர அலை

 

திடீர் தாக்கம்  திடீர் அதிர்ச்சி

பொருளின் அதிர்ச்சி அதிர்வுகளே 

தாக்கம் புறத்தே  இல்லாதிருந்தால்

தாக்கப்பட்ட பொருள்

தன்ஆற்றலைத்

தொடர்ந்து  இழக்கும்

இழப்பு ஊடகத்தில்

அலை வடிவில் இருக்கும்.

ஒலி அலைகள் இவ்வகையினதே.

 

ஒலி அலைகள் இயந்திர அலைகள்

ஊடகக் கிளர்ச்சியால்

ஊடுருவிச் செல்ல 

வெற்றிட வெளியில் பரவிச்

செல்வதில்லை என அறிக

 

எவ்வலைக்கும் இருக்கு

இரு இயற்பியல் பண்புகள்

அவை  அதிர்வெண்ணும் அலைநீளமும்

அவையிரண்டும் ஒன்றுக்கொன்று

எதிர்விகிதத் தொடர்பில்.

 

அதிர்வெண் என்பது

அதிர்வுறும் பொருளின் இயற்பியல் பண்பு

அலை ஊடுருவும் ஊடகத்தின்

ஒரு பண்பல்ல

அலகு நேரத்தில் அதிரும்  பொருள் செய்யும்

அதிர்வுகளின் எண்ணிக்கையே ஆகும்.

ஓர்அதிர்வை ஏற்படுத்த

பொருள் எடுத்துக்கொள்ளும்  காலம்

அதிர்வெண்ணின் தலைகீழ் மதிப்பேயாகும்

 

அலைநீளம் என்பது

ஊடகத்தில் மதிப்பிடப்படுவது

ஒருமுறை அதிர்வுறும் காலத்தில்

ஊடகத்தில் அலை ஊர்ந்த தொலைவு

அலைநீளமாகும்

 

 

 

வேகத்தை காலத்தால் பெருக்க

கடந்த தொலைவு  கிடைக்கும் 

ஊடகத்தில் அலையின் திசைவேகம்

அலைநீளத்திற்கும் அதிர்வெண்ணிற்கும்

உள்ள தகவாகும் என அறிக.

அதிர்வெண் அதிகரிக்க

அலைநீளம் குறைகின்றது

அதிர்வெண்  குறைய

அலைநீளமும் அதிகரிக்கின்றது

குறிப்பிட்ட ஊடகத்தில்

அலையின் திசை வேகம்மாறுவதில்லை  

வெவ்வேறு ஊடகங்களில்

அதிர்வெண் மாறுவதில்லை

வேகமும் அலைநீளமும் நேரியல்  தொடர்பில்

மாறுகின்றன