இயக்கவாற்றல்
ஒரு குறிப்பிட்ட
நிறையுடைய பொருளொன்று
ஒரு குறிப்பிட்ட
திசைவேகத்தில்
இயங்கிச் செல்ல
அப்பொருள்
ஒரு இயக்கவாற்றலைப்
பெறுமே.
ஓய்வு நிலையிலில்
இருக்கும் ஒரு பொருளை
அத்திசை வேகத்தில்
இயக்க
ஒரு முடுக்கம்
கொடுக்கப்படவேண்டுமே
t என்ற காலத்தில் பொருள் இவ்வேகத்தை
அடைந்தால்
செயல்படும் முடுக்கம்
வேகத்திற்கும்
காலத்திற்கும் உள்ள தகவாகும்
நியூட்டனின்
இயக்கவியல் விதிப்படி
முடுக்கத்தை
நிறையால் பெருக்க
விசை கிடைக்குமே
விசையை இடப்பெயர்ச்சியால்
பெருக்கக்
செய்த வேலை
கிடைக்குமே
இடப்பெயர்ச்சி
என்பது
சராசரி வேகத்தில்
கடந்த தொலைவு
தொடக்க வேகம்
சுழியென்றால்
இதன் மதிப்பு
வேகத்தை காலத்தால் பெருக்கக்
கிடைப்பதில்
பாதியே
நிறை முடுக்கம்
இடப்பெயர்ச்சி இவற்றின்
பெருக்கல்
பலன் வேலை ஆகும்
இதுவே பொருளின்
இயக்கவற்றாலாகும்
இதை (1/2)mv2 என்ற குறிமொழி குறிப்பிடுமே
ஆற்றலின் அலகு ஜுல் என்பர்
ஓரலகு நிறையுடைய
பொருளொன்று
ஓரலகு வேகத்தில்
இயக்கிச் செல்ல
அதன் ஆற்றல்
1/2 ஜுல்
ஆகுமே
No comments:
Post a Comment