9. ஊசல் விதிகள்
தேவாலயத்தில் ஒருநாள்
வீசிய காற்றில்
விளக்குகள்
ஊஞ்சலாட
உற்றுநோக்கிய
கலிலியோ
ஊசல் விதிகளைக்
கண்டறிந்தார்
ஊசலின் சீரிசை
இயக்கம்
அதன் இயக்க
ஆற்றல் நிலையாற்றலாக
நிலையாற்றல்
இயக்கவாற்றலாக
தொடர்ச்சியாக
மாறுவதால்
தொடருவதாகும்
ஓய்வு நிலையிலிருந்து
விலகிச் செல்ல
நிலையாற்றல்
கூடும்
பெரும இடப்பெயர்ச்சியில்
நிலையாற்றல்
பெருமம்
இயக்கவாற்றல்
சுழிமம்
ஓய்வு நிலையில்
இயக்கவாற்றல்
பெருமம்
நிலையற்றல்
சுழிமம்
ஊஞ்சலாடும்
விளக்கு எப்போதும்
மீட்பு விசையால்
ஓய்வு நிலை
நாடும்
விளக்கு இயங்கும்
திசைக்கு இது
எப்போதும்
எதிர் திசையில் இருக்கும்
இதனளவு இடப்பெயர்ச்சி
அதிகமாக அதிகமாகும்
ஓரலகு இடப்பெயர்ச்சிக்கு
மீட்பு விசையின்
அளவு
விசை மாறிலியாகும்
ஊசல் ஒரு முறை
அசைந்தாட
எடுத்துக்
கொள்ளும் நேரம்
அலைவு நேரமாகும்
விளக்கின்
நிறையைப் பொருத்ததில்லை
ஊசலின் நீளத்தை
மட்டுமே
பொருத்திருக்கின்றது.
கனமாக இருந்தாலும்
லேசாக இருந்தாலும்
மெசுவாக ஆடினாலும்
விரைவாக ஆடினாலும்
அலைவு நேரத்தில்
மாற்றமில்லை
என்றாலும்
அலைவு நேரம்
அலைவீச்சைப்
பொருத்ததில்லை
என்றாலும்
கருத்துஒன்றே
அலைவு நேரத்தின்
இருமடி
ஊசல் நீளத்திற்கு
நேரியல் தொடர்பில்
மாறா நீளமுடைய
எவ்வூசலுக்கும்
அலைவுநேரம்
ஒன்றே
No comments:
Post a Comment