Friday, October 9, 2020

 

இயந்திர அலை

 

திடீர் தாக்கம்  திடீர் அதிர்ச்சி

பொருளின் அதிர்ச்சி அதிர்வுகளே 

தாக்கம் புறத்தே  இல்லாதிருந்தால்

தாக்கப்பட்ட பொருள்

தன்ஆற்றலைத்

தொடர்ந்து  இழக்கும்

இழப்பு ஊடகத்தில்

அலை வடிவில் இருக்கும்.

ஒலி அலைகள் இவ்வகையினதே.

 

ஒலி அலைகள் இயந்திர அலைகள்

ஊடகக் கிளர்ச்சியால்

ஊடுருவிச் செல்ல 

வெற்றிட வெளியில் பரவிச்

செல்வதில்லை என அறிக

 

எவ்வலைக்கும் இருக்கு

இரு இயற்பியல் பண்புகள்

அவை  அதிர்வெண்ணும் அலைநீளமும்

அவையிரண்டும் ஒன்றுக்கொன்று

எதிர்விகிதத் தொடர்பில்.

 

அதிர்வெண் என்பது

அதிர்வுறும் பொருளின் இயற்பியல் பண்பு

அலை ஊடுருவும் ஊடகத்தின்

ஒரு பண்பல்ல

அலகு நேரத்தில் அதிரும்  பொருள் செய்யும்

அதிர்வுகளின் எண்ணிக்கையே ஆகும்.

ஓர்அதிர்வை ஏற்படுத்த

பொருள் எடுத்துக்கொள்ளும்  காலம்

அதிர்வெண்ணின் தலைகீழ் மதிப்பேயாகும்

 

அலைநீளம் என்பது

ஊடகத்தில் மதிப்பிடப்படுவது

ஒருமுறை அதிர்வுறும் காலத்தில்

ஊடகத்தில் அலை ஊர்ந்த தொலைவு

அலைநீளமாகும்

 

 

 

வேகத்தை காலத்தால் பெருக்க

கடந்த தொலைவு  கிடைக்கும் 

ஊடகத்தில் அலையின் திசைவேகம்

அலைநீளத்திற்கும் அதிர்வெண்ணிற்கும்

உள்ள தகவாகும் என அறிக.

அதிர்வெண் அதிகரிக்க

அலைநீளம் குறைகின்றது

அதிர்வெண்  குறைய

அலைநீளமும் அதிகரிக்கின்றது

குறிப்பிட்ட ஊடகத்தில்

அலையின் திசை வேகம்மாறுவதில்லை  

வெவ்வேறு ஊடகங்களில்

அதிர்வெண் மாறுவதில்லை

வேகமும் அலைநீளமும் நேரியல்  தொடர்பில்

மாறுகின்றன

No comments:

Post a Comment