டாப்ளர் பெயர்ச்சி
சார்பியக்கம் அளவீடுகளில்
ஒரு தோற்ற மாற்றத்தை
ஏற்படுத்துமே
ஓய்வில் செய்யும்
அளவீடும்
ஓடிக்கொண்டே செய்யும்
அளவீடும்
ஒன்றுபோல இருப்பதில்லையே
அலை உமிழும் மூலமும்
அதை அளவிடும் மூலமும்
அவற்றின் சார்பியக்கத்தால்
அதிர்வெண்ணில் ஒரு
தோற்ற மாற்றத்தை விளைவிக்குமே
இதுவே டாப்ளர் பெயர்ச்சியாகுமே
அலைமூலம் அலைபரவும்
திசையில்
u என்ற திசைவேகத்தில்
அலைமூலம் நோக்கிச்
செல்ல
அலைநீளம் சுருங்கித்
தோன்றுமே
அளவிடும் மூலம்
ஓய்விலிருக்க
அலைநீளப் பெயர்ச்சி
அலைவு நேரத்தில்
அலைமூலம்
கடக்கும் தொலைவு
மட்டுமே
அலையின் திசை
வேகம் c எனில்
தோற்ற அலைநீளம் λ’ = λ [1- u/c]
தோற்ற அதிர்வெண் n’ = n [c/(c-u)]
எனக் குறிமொழி குறிப்பிடுமே
அலைமூலம் அலைபரவும்
திசைக்கு
எதிர்த்திசையில்
விலகிச் செல்ல விரியும்
அலைநீளம் விரிந்து தோன்றுமே
அளவிடும் மூலம்
ஓய்விலிருக்க
அலைநீளக் கூடுதல்
அலைவு நேரத்தில்
அலைமூலம்
கடக்கும் தொலைவாகுமே
அலையின் திசை
வேகம் c எனில்
தோற்ற அலைநீளம் λ* = λ [1+ u/c]
தோற்ற அதிர்வெண் n’ = n [c/(c+u)]
எனக் குறிமொழி குறிப்பிடுமே
ஆய்கருவி அலைபரவும் திசையில்
v என்ற திசைவேகத்தில்
அசையா அலைமூலம்
நோக்கிச் செல்ல
c என்ற திசைவேகத்தில்
வரும் ஒரு
முழு அலை
குறைந்த நேரத்தில்
கடக்க
அதிர்வெண்
அதிகரிக்குமே
தோற்ற அதிர்வெண் n’ = n [(c+v)/c]
தோற்ற அலைநீளம் λ* = λ [ c/(c+v)]
எனக் குறிமொழி குறிப்பிடுமே
ஆய்கருவி அலைபரவும் திசையில்
v என்ற திசைவேகத்தில்
அசையா அலைமூலம்
விட்டு
விலகிச் செல்ல
c என்ற திசைவேகத்தில்
வரும் ஒரு
முழு அலை
கூடுதல் நேரத்தில்
கடக்க
அதிர்வெண்
குறையுமே
தோற்ற அதிர்வெண் n’ = n [(c-v)/c]
தோற்ற அலைநீளம் λ* = λ [ c/(c-v)]
எனக் குறிமொழி குறிப்பிடுமே
அலை மூலமும் அளவிடும்
மூலமும்
ஒன்றையொன்று நெருங்கி
வர
தோற்ற அதிர்வெண் n’ = n (c+v)/(c-u)]
தோற்ற அலைநீளம் λ* = λ [(c-u)/(c+v)]
எனக் குறிமொழி குறிப்பிடுமே
ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்ல
தோற்ற அதிர்வெண் n’ = n (cvv)/(c+u)]
தோற்ற அலைநீளம் λ* = λ [(c+u)/(c-v)]
எனக் குறிமொழி குறிப்பிடுமே
அலைமூலம் அருகில் வர
தோற்ற அலைநீளம் குறைவது
நீலப்பெயர்ச்சியாகும்
அலைமூலம் விலகிச் செல்ல
தோற்ற அலைநீளம் அதிகரிப்பது
செம்பெயர்ச்சியாகும்
No comments:
Post a Comment