புவியீர்ப்பால்
பொருட்களெல்லாம்
பூமியின் புறப்பரப்பில்
உயரத்தில்
இட்ட பொருள்
தானாய்க் கீழே
விழ இயக்கத்தின்
முடுக்கம்
புவியீர்ப்பு முடுக்கமாகும்.
முழுமையான
கோளமில்லாத பூமியால்
ஈர்ப்பு முடுக்கம்
எங்கும் சமமில்லையே
பொருள் மீது
செயல்படும் புவிஈர்ப்பு விசையே
பொருளின் எடையாகும்
என அறிக
நடுவரைக்கோட்டில்
பூமியின் அதிக ஆரம்
ஈர்ப்பு விசையைக்
குறைக்க
ஈர்ப்புமுடுக்கம்
குறையுமே
துருவப்பகுதியில்
குறைந்த ஆரம்
ஈர்ப்பு விசையை
அதிகரிக்க
ஈர்ப்புமுடுக்கம் அதிகரிக்குமே
உயரே செல்லச்
செல்ல
ஈர்ப்பு விசையும்
முடுக்கமும் குறையுமே
g’ = g [
1 -2h/R) எனக் குறிமொழி குறிப்பிடுமே
பூமியைக் குடைந்து
ஆழம் செல்ல
உட்கோளம் மட்டும்
பொருளை ஈர்க்க
ஈர்ப்பு விசையும்
முடுக்கமும் குறையுமே
g’ = g [1
– h/R] எனக் குறிமொழி குறிப்பிடுமே
பூமியோடு பொருளும்
சேர்ந்தே
சுழல்வதால்
மைய விலகு விசையொன்று
பொருள் மீது
கூடுதலாய் செயல்படுமே
இது நடுவரைக்கோட்டில்
அதிகமாகவும்
துருவம் நெருங்க குறைவாகவும் இருக்குமே
நடுவரைக் கோட்டு
இணைகோடுகள்
துருவம் நெருங்கும் தீர்க்க ரேகைகள்
ᵩ கோணத்தில்
இருக்கும் தீர்க்க ரேகையில்
ꞷ கோணத் திசைவேகத்தில் பொருள் இயங்க
மைய விலகு
விசை சுற்றுத் தளத்தில்
பொருள் எடையின்
இணைதளக் கூறுக்கு
எதிர் திசையில்
செயல்படுமே
இவற்றின் தொகு
பலனும்
பொருள் எடையின்
செங்குத்துக் கூறும்
இணைந்து விளைவு
ஈர்ப்பு முடுக்கத்தை த் தருமே
g’ = g [1
– (Rꞷ2/g) cos2 ᵩ ]1/2 எனக் குறிமொழி குறிப்பிடுமே
No comments:
Post a Comment