விடுபடு வேகம்
உயரே எறிந்த ஏறி பொருள்
ஓரளவு தொலைவு கடந்த பின்
கடந்த தொலைவை மீண்டும் கடந்து
பூமியின் மடியில் விழுமே
ஈர்ப்புவிசைக்கு எதிராக
வேலை செய்தால் மட்டுமே
பூமியிலிருந்து ஒரு பொருளை
பிரித்துச் செல்ல முடியுமே
வேலைக்கு வேண்டிய ஆற்றலை
கொடுப்பது தொடக்க இயக்கவாற்றலே
இயக்கவாற்றல் தீரும் வரை
பொருள் உயர உயரச் செல்லுமே
பூமியின் ஈர்ப்பிலிருந்து விடுபட்டு
விண் வெளிக்குச் செல்ல
ஈர்ப்பழுத்தம் சுழியாக இருக்கும்
எல்லைவரை செல்ல வேண்டுமே
புவி பரப்பில் ஈர்ப்பழுத்தம் GM/R
பொருளின் ஈர்ப்பாற்றல் GMm/R
பொருள் பூமியிலிருந்து விடுபட்டுச் செல்ல
பொருளுக்குக் கொடுக்கப்பட்ட
தொடக்க இயக்கவாற்றல்
பூமியில் பொருளின் ஈர்ப்பாற்றலுக்குச்
சமமாக இருக்கவேண்டுமே
இது v = [2GM/R]1/2 என்ற தொடர்பைத் தருமே
புவிபரப்பில் பொருளின் எடை என்பது
பொருள் மீது செயல்படும் ஈர்ப்பு விசைதான்
இது g =GM/R2 என்ற தொடர்பைத் தர
அதைப் பதிலீடு செய்ய விடுபடு வேகம்
v = (2gR)1/2 என்று நிறுவப்படுமே
விடுபடு வேகம் விண்ணுறுப்பின்
ஈர்ப்பு முடுக்கம் கோளத்தின் ஆரம்
இவற்றைப்பொறுத்து அமையுமே
பூமியில் இதன் மதிப்பு
வினாடிக்கு 11.2 கிலோமீட்டராகுமே
No comments:
Post a Comment