Friday, November 18, 2011

Valarum ariviyal Tamil

வு விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி 
auto emission - சுய உமிழ்வு 
spontaneous emission - இயல்பு உமிழ்வு 
stimulated  emission  - தூண்டல் உமிழ்வு 
mass - பொருள் திணிவு /நிறை 
survey - நேராய்வு
know -how - கண்டறிவு
expertise - தேர்ந்தறிவு
polar molecule - முனைவு மூலக்கூறு 
non - polar  molecule - முனைவிலா மூலக்கூறு
adduct - அணைவு மூலக்கூறு 
electric polarization - மின் முனைவாக்கம் /ஒத்திசைவாக்கம் 
                                     ஒரு திசையமைவாக்கம்
spiral galaxy - உட்சுழிவு அண்டம் 
scale - அளவுத் திட்டம் 
slit - பிளவு / நுழைவாய் பிளவு 
after glow - பிற் பொலிவு 
enrichment - செறிவூட்டல் /செறிவூட்டம்
avalanche breakdown - திடீர் பெருக்க முறிவு  
proactive - செயல் முனைவு 
நிறுவனத்தின் எதிர்கால் வளர்ச்சி கருதி ,சூழ்நிலையை அதன் போக்கில் உருவாக்குவதும் ,
கட்டுப்படுத்துவதும் ,எதிர்கொள்வதும் proactive எனப்படும் .இச் சொல் உண்மையில் கல்வி 
சார்ந்த உளவியலில் அதிகம் பேசப்படுகிறது .இது முன்னர் பெற்ற அறிவு அல்லது 
அனுபவம் இவற்றின் அடிப்படையில் உண்டாக்கப் படுகின்ற அனுபவமாகும் .இதன் பிறகு 
இது என்னால் முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டி வளர்ச்சிக்கு வழிகாட்டிச் செல்கிறது 
என்று இதைப்பற்றி விவரித்தார்கள் .இன்றைக்கு இச் சொல் வளர்ச்சி 'proactive manager ,
என்ற சொற்றொடரைத் தந்துள்ளது. ஒன்று நிகழ்வதற்காக காத்திருக்காமல் ,அது 
நிகழ்வதற்கான முன் ஆயத்தப் பணிகளைத் தானே முனைந்து செய்பவரையே 
இச்சொல் குறிப்பிடுகிறது. .
 Dink (y )- வளரும் வருமானமும் வாரா உறவும் 
ஆங்கிலத்தில் முதல் எழுத்துச் சொற்கள் பல உள்ளன.எ.கா ராடார் .லேசர் 
போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் ..இணக்கமான தலை எழுத்துச் 
சொற்களை ஒன்று சேர்த்து குறும்புத் தனமாக ஒரு புதிய சொல்லைக் 
கட்டமைக்கும் யுக்தி அப்போது தொடங்கியது .
glams - என்ற சொல் (greying ,leisured ,affluent ,middle -aged ) நரைத்த ,ஓய்வில் 
இருக்கின்ற ,செல்வமிக்க ,நடுத்தர வயது மக்கள் என்ற பொருளில் 
பயன்படுத்தப் படுகிறது .Woopies  என்ற சொல் (well -off old  people )
பணக்காரக் கிழவர்கள் என்ற பொருளிலும் ,sitcoms  என்ற சொல் 
(single income ,two kids ,outrageous  mortgage ) ஒற்றை வருமானம், இரண்டு 
குழந்தைகள் மட்டுமீறி பணியில் ஈடுபாடு என்ற பொருளிலும் 
பயன்படுத்தப் படுகின்றன . இதில் ஒற்றை வருமானம் என்பது 
குடும்பத்தில் கணவனோ அல்லது மனைவியோ மட்டுமே சம்பாதிக் 
கின்றார்கள் என்ற பொருளுணர்த்தும் .
பல தலை எழுத்துச் சொற்கள் இன்று வரும் நாளை  போகும். ஆனால் dink 
அல்லது dinky  என்ற சொல் வழக்காற்றில் நிலை பெற்றது .இரட்டை 
வருமானம் ,பிள்ளகைள் இல்லை (double income No kids ) அல்லது 
இரட்டை வருமானம் ,இதுவரை பிள்ளைகள் இல்லை (double income 
No kids yet ) என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியினர் 
என்ற பொருளுரைக்க இது எடுத்தாளப் படுகிறது. இவர்கள் குழந்தைகள் இல்லாத அகவெறிஞர்
(Yuppie ) ஜோடிகள் . ஒவ்வொருவரும் நல்ல ஊதியத்துடன் வேலை ,அதனால் 
ஆடம்பரமாகச் செலவு செய்து கொண்டு வாழப் போதிய பண வசதி .
அகவெறிஞர் போல யாரையாவது dink  என அழைத்தால் அவர்களுடைய 
ஜடப் பொருள் போன்ற வாழ்க்கையையும் ,தன்னலம் மிக்க வாழ்க்கைப் 
போக்கையும் குத்திக் காட்டுவது போலிருப்பதால் ,அது அவர்களை 
அவமானப்படுத்தியது போலாகும். இச் சொல் பிறந்த அமெரிக்காவில் 
இச்சொல் கொச்சை வழக்கில் முட்டாள் ,அறிவில்லாதவன் என்ற 
பொருளில் பயன்படுத்தப் படுகிறது. 
 








Wednesday, November 16, 2011

valarum ariviyal thamil

வு விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி 


Futon - காலணைவு இருக்கை

மனையடி இடத்தை அதிகப் பயனுள்ளவாறு பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்ற வீடுகளில் சோபா -படுக்கை கூடுதல்
பயன்தருவதாக இருக்கும். உட்காருவதற்கான
இருக்கையாகவும் ,உறங்குவதற்கான படுக்கையாகவும்
இதை நேரத்திற்குத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்வார்கள் .
திடீரென்று இரவுக்கு  மட்டும் வந்து போகின்ற
விருந்தினர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும் .சுறுசுறுப்பான
பகல் நேரத்தில் வீட்டின் பயனுறு உட்பரப்பை அதிகரித்துக் 
கொள்ளவும் ,நடமாட்டமில்லாத இரவில் வசதியை 
அதிகரித்துக் கொள்ளவும் இது பயன் தருகிறது .அண்மையில் 
இதன் பரிணாம வளர்ச்சியில் கீழை நாகரிகத் தொடர்புடைய 
ஜப்பானியர்களின் காலணை என்ற ஒரு மாற்றமும் 
சேர்ந்துகொண்டது. மரப்பலகையால் ஆன அடிப்பாகமும் ,
அதன் மீது ஒரு மெல்லிய பஞ்சு பொதிக்கப்பட்ட மெத்தையும் 
இணைக்கப்பட்ட படுகை இருக்கையை காலணைவு 
இருக்கை என்றழைக்கின்றனர்
.
melt down - திடீர் சீர்குலைவு
 
அணு உலைகளில் உரேனியம் -235  போன்ற கனமான 
அணுக்களின் கருக்களை பிளப்பிற்கு
உட்படுத்துகிறார்கள் .அப்போது ஏற்படும் பொருண்மை 
இழப்பு ஆற்றலாக வெளிப்படுகிறது .
இதைக் கொண்டு நீரை நீராவியாக்கி ,மின் உற்பத்தி 
சாதனங்களை இயக்குகிறார்கள் .இதுவே 
ஓர் அணுமின் உலை செய்து வரும் செயலாகும். இன்று 
உலகமெங்கும் 250  அணு மின் உலைகளும் 
நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி அணுஉலைகளும் இயக்கிக் கொண்டிருக்கின்றன .
அணுக கருப் பிளப்பு வினையில் விளைபொருட்கள் யாவும் 
கதிரியக்கம் கொண்டவை இவை தவறுதலாக அணு 
உலையிலிருந்து வெளிப்படுமானால் ,அது சுற்றுப் புறத்தை
கதிரியக்கத்தால் மாசுபடுத்தித் தவிர்த்துக் கொள்ள முடியாத
பல தீங்குகளை ஏற்படுத்திவிடும்  .இரண்டாம் 
 உலக பெரும் போரின் போது ஜப்பான் நாட்டின் நாகசாகி ,
ஹிரோஷிமா நகரங்களில் 
அணுகுண்டு வீச்சு ஏற்படுத்திய பேரழிவின் கோரக் காட்சிகள் 
இந்த அச்சுறுத்தலை வலுப்படுத்தியிருக்கிறது .சாலை விபத்துகள் 
போல அணுஉலைகளும் விபத்துகளிலிருந்து 
தப்பிக்கவில்லை. 
1957 -ல் இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸ்கேல் என்னுமிடத்தில் உள்ள அணுஉலை, 1979 -ல் அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவின் 
மூன்று மைல் தீவிலுள்ள அணுஉலை, 
1986 ல் ரஷ்யாவிலுள்ள செர்னோபைல் அணுஉலை போன்ற அணுஉலைகளில் திடீர் விபத்துகள் நிகழ்ந்தன .ஏதாவதொரு புறக் காரணங்களினால் உடனுக்குடன் உற்பத்தி 
செய்யப்படும் ஆற்றலை உள்ளகத்திலிருந்து வெளியேற்ற 
முடியாமல் போகும் போது 
உள்ளகம் வரம்பு மீறி சூடாக்கப் பட்டு உருகிப் போய்.
உலையில் சுவர்களில் வெடிப்பு 
ஏற்பட்டு கதிரியக்கக் கழிவுகள் கசிந்து வெளியேறுகின்றன. 
இதையே melt down என்று 
குறிப்பிடுகின்றார்கள் .
ஏதாவதோர் அமைப்பு திடீரென்று சரிவரத் தெரியாத காரணத்தால் முழுதுமாகச் சீர்குலைந்து 
நீண்ட  காலப் பாதிப்பை ஏற்படுத்தினால் அதிக குறிப்பிட melt down  என்ற வார்த்தையை 
பயன்படுத்த அணுஉலை விபத்துகள் மக்களுக்கு வழி காட்டின .
1987 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 19  ம் தேதி திங்கட் 
கிழமையைக் கறுப்புத் திங்கள் (Black Monday ) என்பர் .
அன்று பன்னாட்டு பங்குச் சந்தையில் திடீர் சீர்குலைவு 
ஏற்பட்டு வர்த்தகத்தில் பெரும் வீழ்ச்சி விளைந்தது. இதை
 'melt down ' என்று அப்போது செய்தித் 
தாள்கள் வர்ணித்தன.. 
.

Tuesday, November 15, 2011

Valarum ariviyal Tamil

வு விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி 
acitivity -சிதைவு வீதம் 
auto claving - சுய யூக்க உறைவு 
ablation - பாறைச் சிதைவு (புவியமைப்பியல் )
பிற துறைகளில் இது வேறு பொருளில் பயன் படுத்தப் படுகிறது .
இயற்பியலில் ,பருமச் சுருக்கம் என்றும் மருத்தவத் துறையில் 
திசுவை வெட்டி அகற்றுதல் என்றும் ,வேதியியலில் வெப்பக் 
கடு நீக்கம் (விரைந்து நீக்குதல் )
altitude effect - குத்துயர விளைவு 
centre of oscillation - அலைவு மையம் 
chemical bond - வேதிப் பிணைப்பு 
ionic bond - அயனிப் பிணைப்பு 
condensation - உறைவிப்பு
solid state physics - திண்ம இயற்பியல்/ உறைமை
condensed matter Physics - உறைம இயற்பியல் 
condensed matter - உறைமம்
fountain effect - நீரூற்று விளைவு 
space -time curvature - வெளி கால வளைவு 
mean free  path - சராசரி மோதலிடைத் தொலைவு 
plastic deformation - நெகிழ்ம உருக்குலைவு  catastrophy - திடீர் நிலைக் குலைவு
ஒரு சொல் கலைச் சொல்லாகவும் இருக்க முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு .
catastrophe  என்றால் பேரழிவை உண்டாக்குகின்ற, பெருந் துயரம் தருகின்ற ஒரு திடீர் 
நிகழ்வு எனலாம். நிலைக் குலைவு என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட கிரேக்க 
மொழிச் சொல் அப்படியே ஆங்கிலத்தில் புகுந்துகொண்டது .
ஒரு சீரான மாற்றத்தோடு மாறிக் கொண்டிருக்கும் ஒன்றின் போக்கில் திடீரென்று 
விளையும் கோட்டங்களைப் பற்றி விவரிக்கும் இது நிலைக் குலைவு கொள்கையாக 
catastrophe theory  ஆனது. இது இன்றைக்கு கணிதத்தில் ஒரு பிரிவாக உள்ளது .
தொடர்ச்சியான மாற்றங்களை மட்டும் விவரிக்கும் கணிமுறை கணிதத்திற்கு 
(Calculus ) நேர் எதிர் மாறானது.  

 

Monday, November 14, 2011

Valarum ariviyal Tamil


வு விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி 
coherence  length - இசைவினைத் தொலைவு
degeneracy - சீர் குலைவு
  strong - வன் சீர் குலைவு 
 weak - மென் சீர் குலைவு 
distortion - உருக் குலைவு 
orientation - திசை யமைவு 
perturbation - சிற்றுலைவு
memory metal -நினைவு உலோகம் 
isotopic effect - சம அணு எண்ம விளைவு 
effect  என்பது விளைவு என்று தமிழாக்கம் செய்யப்பட்டு வழக்காற்றில் ஒரு 
பின்னொட்டாக ப் பயன் படுத்தப்படுகிறது .
Compton effect - காம்ப்டன் விளைவு 
Doppler effect -டாப்ளர் விளைவு 
Faraday effect - பாரடே விளைவு 
Hall effect - ஹால் விளைவு 
green house effect - பசுமையக விளைவு 
Joule -Thompson effect - ஜூல் தாம்சன் விளைவு 
photo electric effect - ஒளி மின் விளைவு 
piezo electric effect - ஒலி மின் விளைவு 
Peltier effect - பெல்டியர் விளைவு 
tunnel effect  - புழல் விளைவு Blip - ஙப்போல் வளைவு 
ரேடார் (RADAR ) என்பது முதலெழுத்துச் சொல் .Radio detection and ranging  என்ற விளக்கச் 
சொல்லின் சுருக்கமாக மலர்ந்தது .இது போல ஆங்கில மொழியில் பல முதலெழுத்துச்
சொற்கள் உள்ளன. தமிழில் அப்படிப்பட்ட சொற்களை அமைக்க முடியாது. ஏனெனில் 
இன்ன எழுத்திற்குப் பிறகு இன்ன எழுத்துத்தான் வர வேண்டும் ,முதலிலும் ,இறுதியிலும் .
இன்னின்ன எழுத்துத்தான் வர வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. இக் கட்டுப்பாட்டை 
தளர்த்திக் கொள்ள முடியாது. ஏனெனில் அது மொழியின் உச்சரிப்பில் சீரற்ற இடைவெளியை 
ஏற்படுத்தி விடும் .
LASER - Light Amplification  by Stimulated  Emission of  Radiation 
MASER - Microwave Amplification  by  Stimulated  Emission of Radiation 
SONAR - Sound Navigation  and Ranging 
PULSAR  - Pulsating Star 
QUASAR - Quasi  Stellar Radio Source 
போன்ற சில சொற்களை ஆங்கிலத்தில் காணப்படும்
 முதலெழுத்துச்சொற்களாகும்  
 வெகு தொலைவில் இயக்க நிலையில் அல்லது ஓய்வு நிலையில் உள்ள பொருளைத் 
(குறிப்பாக விமானம் ,கப்பல், ஏவுகணை ,கவச வண்டி ) துல்லியமாகக் கண்டறிய 
உதவும் ரேடார் ஓர் உயர் தொழில் நுட்பக் கருவி .அங்கு பொருள் இருப்பின் ,திரையில் 
சுட்டிக் காட்டப்படும் வரைபடக் கோட்டில் ஒரு கோட்டம் காணப்படும் .இதையே 
BLIP  என்று கூறுவர்.திரையின் மையத்திலிருந்து இக்கோட்டத்தின் இருப்பிடம் 
அல்லது இடப்பெயர்ச்சி ,இலக்கின் இருப்பிடத்தை த் தெரிவிக்கும் .
பின்னர் ஏதாவது ஒரு வரைபடக் கோட்டில் காணப்படும் பொதுநிலை திரிந்த 
மாற்றங்களுக்கும் இதே சொல்லைப் பயன்படுத்தினர் .இறுதியாக இது வணிகம் 
மற்றும் நிதித் துறைகளில் பொதுநிலைத் திரிவு ஏற்படுவதற்குக் காரணமாகும் 
நிகழ்வுகளை விவரிக்கும் சலசலப்பு மொழியாக நிலைபெற்றது .1988 -ல் 
இங்கிலாந்து நாட்டின் நிதித்துறை உயர் அதிகாரி ஒருவர் ஏற்றுக்கொள்ளத் 
தக்கவாறு அதிகரித்த பண வீக்க விகிதத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது
இச் சொல்லைக் கையாளப் போக பிற்பாடு அதுவே நிலைபெற்றது .தொடர்ச்சியான 
மாற்றங்களின் சீரான போக்கில் ஏற்படும் சிறிய மற்றும் தற்காலியமான 
சீர்குலைவுகளை 'BLIP ' என்ற சொல் குறிப்பிடுவதாக இப்போது கொள்ளப்பட்டுள்ளது .     

 


   

Friday, November 11, 2011

Valarum ariviyal thamil

வு விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி 
admissible solution - ஏற்புடைத் தீர்வு 
algorithm - கணிதத் தீர்வு முறை 
non destructive testing - அழிவிலா ஆய்வு முறை 
search coil - ஆய்வுச் சுருள்             
fluxuation - ஏற்றத் தாழ்வு 
half life - அரை வாழ்வு 
alpha emition - ஆல்பா உமிழ்வு 
alpha emitter - ஆல்பா உமிழ்வான் /ஆல்பா உமிழ்மம்
திண்மம் ,நீர்மம், வளிமம் போல உமிழும் பொருட்களை உமிழ்மம் என்று பொதுவாக 
அழைக்கலாம் .
membrane - சவ்வு 
osmosis - சவ்வூடு பரவுதல்
rest  mass - ஓய்வு நிறை


 blood doping - இரத்தச் செறிவூட்டல்
ஓர் ஊடகத்தில் வேற்றுப் பொருளின் சேர்க்கையை ச் செய்து அதன் இயற்பியல் தன்மைகளில் குறிப்பிடும்படியான  மாற்றங்களைச் செய்வார்கள். இதனால் அதன் செயல் திறனில் மகத்தான மாறுதல்களை  ஏற்படுத்த முடியும். குறைக் கடத்திகளில் 
(semi conductors ) நேர் மின் வகை (P -type ) எதிர் மின் வகை (N -type ) என்று ஏற்படுத்தி மின்னணுவியலில் புரட்சியை வளர்ச்சி பெறச் 
செய்துள்ளார்கள் .இந்த வலி முறையை 'doping ' (கலப்பு ) என்பர் திண்ம இயற்பியலார்.இதைப் புறப் பொருள் ஊட்டம் என்றும் 
விளக்கம் கூறுவர்.இவ்வாக்கமுறை  இரத்தச் செறிவூட்டல் என்ற புதிய சொல்லைப் புதிய பொருளுரைக்க வழங்கி இருக்கிறது .
பொதுவாக இரத்தத்தில் புறப் பொருளைக் கலக்க முடியாது. ஏனெனில் அதை ரத்தம் ஏற்றுக்  கொள்ளவதில்லை .ஒரு வகையான 
இரத்தம் மற்றொரு வகையான இரத்தத்தைக் கூட ஏற்றுக் கொள்வதில்லை.ஆனால் ஒரு வகையான இரத்தம் அதே வகையான
 இரத்தத்தை ஏற்றுக்கொள்கிறது
.      
 இரத்தம் A ,B ,AB மற்றும் O என நன்கு வகைப் படும். மனிதர்களின் சிவப்பணுக்களின் புறப்பரப்பில் A ,B  என்ற 
இரண்டு வகையான 
ஆண்டிஜென்கள் இருக்க முடியும். A மட்டும் இருந்தால் அது A  வகை இரத்தம் என்றும் 
B  மட்டும் இருந்தால் அது B வகை இரத்தம் என்றும் ,இரண்டும் கலந்திருந்தால் AB  வகை இரத்தம் என்றும், 
ஒன்றுமில்லாதிருந்தால் O  வகை இரத்தம் என்றும் கூறுவர். இரத்தத்தின் பிளாஸ்மாவில் எதிர்ப்பொருள்கள்
உள்ளன. A வகை இரத்தத்தின் பிளாஸ்மாவில் B எதிர்ப் பொருளும், B  வகை இரத்தத்தின் பிளாஸ்மாவில் A 
எதிர்ப் பொருளும் AB  வகை இரத்தத்தின் பிளாஸ்மாவில் எந்தவொரு எதிர்ப்பொருள் இல்லாமலும் o வகை 
இரத்தத்தின் பிளாஸ்மாவில் இரு வகை எதிர்பொருளும் இருக்கும் .
A வகை இரத்தத்துடன் B வகை அலாது AB  வகை இரத்தத்தைக் கலந்தால் A வகை இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவின் 
B எதிர்ப் பொருள் B வகை அல்லது AB  வகை இரத்தத்திலுள்ள B ஆண்டிஜென் களுடன் வினை புரிந்தும் ,B வகை 
இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவின் A  எதிர்ப் பொருள் A வகை இரத்தத்திலுள்ள A  ஆண்டிஜென் களுடன் வினை புரிந்தும் 
இரத்தத்தை திரிவுறச் செய்து கெட்டிப் படுத்திவிடும் .இக் கட்டிகள் சிறு இரத்தக் குழாய்களை அடைத்துவிடும் .
இரத்த ஓட்டம் தடைப்படுவதால் இறுதியில் மனிதன் இறக்க நேரிடும் . 
இதிலிருந்து A வகை இரத்தத்தை A  மற்றும் AB  வகை இரத்தம் உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளலாம் .
அது போல B  வகை இரத்தத்தை B மற்றும் AB  வகையினர் பெறலாம். AB  வகை இரத்தத்தை அவ்
வகையினர் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும் .o  வகை இரத்தத்தை o ,A ,B ,AB  வகையினர் அனைவரும் 
பெற்றுக் கொள்வதால் பாதிப்பில்லை .AB வகை இரத்தமுள்ளவர்கள் அனைத்துவகை இரத்தமுள்ளவர்களிடமிருந்து 
இரத்தம் பெறத் தகுதியுள்ளவர்கள் .
இது தவிர Rh (Macasus Rhesus - என்ற குரங்கின் இரத்தத்தைக் கொண்டு ஆராய்ந்து கண்டுபிடித்ததால் இப்பெயர் 
பெற்றது.) என்றொரு காரணியும் இரத்த மாற்றத்தை மட்டுப் படுத்துகிறது. மக்களில் ஏறக்குறைய 85 சதவீதம் 
பேருக்கு இந்த ரீசஸ் புரதப் பொருள் இருக்கிறது. இவர்களை ரீசஸ் தன்மையர் (Rh -positive ) என்றும் எஞ்சிய 
15  சதவீதம் மக்களின் இரத்தத்தில் இந்த ரீசஸ் பொருள் இருப்பதில்லை. இவர்களை ரீசஸ் இன்மையர்
(Rh -negative ) என்றும் கூறுவார் .இரத்த மாற்றம் செய்வதற்கு முன்னர் இரத்த வகை, ரீசஸ் காரணி இவற்றையெல்லாம் 
ஆராய்ந்து பொருத்தம் பார்த்தே செய்ய வேண்டும் என்பதை இது முன்னறிவிக்கிறது .
தடகள வீரர்கள் வெற்றி பெற குறுகிய நேரத்தில் கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. 
குத்துச் சண்டை வீரர்கள் நெடு நேரம் ஆடுகளத்தில் சண்டை போட வேண்டியிருக்கிறது.
அப்போது தீவிரமாகச் செயலாற்றும் உடல் உறுப்புகளுக்குத் தேவையான சக்தியை இரத்த 
அணுக்கள் இரத்த ஓட்டம் மூலம் எடுத்துச் சென்று அளிக்கின்றன. போதிய இரத்த அணுக்கள் 
இல்லையென்றால் சக்தியின் பற்றாக்குறையால் களைப்பு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் 
வளர்சிதை மாற்றம் ஏற்படும் வீதம் போதாமல் இருக்கிறது. இதற்காக தடகள வீரர்கள் 
போட்டியில் கலந்து கொள்வதற்குச் சியல் நாட்களுக்கு முன்னர் அவர்களுடைய உடலிலிருந்து 
இரத்தத்தை எடுத்து பாதுகாத்து வருவார்கள் .இதனால் ஏற்பட்ட இரத்தச் சிவப்பணுக்களின் 
இழப்பினை ,அவர்களுடைய உடல் ஒருசில நாட்களுக்குள் புதுப்பித்துக் கொண்டு விடுகிறது. 
போட்டியில் பங்கேற்பதற்கு சற்று முன்னர் அல்லது முதல்நாள் முன்பு அவர்களிடமிருந்து 
எடுக்கப்பட்ட அதே இரத்தத்தை உடலுக்குள் செலுத்தி விடுவார்கள் .இதனால் வீரர்களின் இரத்தத்தில் 
சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ,களைப்பின்றி 
 நெடு நேரம்  விளையாட முடிகிறது..இம்முறையை 
இரத்தச் செறிவூட்டல் என்றழைக் கின்றனர்.. 



.      


        

Monday, November 7, 2011

Valarum ariviyal thamil

வு -விகுதிச் சேர்க்கை - தொடர்ச்சி 
ஒரு பொருள் மற்றொரு பொருளைச் சுற்றி வளம் வருவதை சுற்றியக்கம் ( orbital motion ) 
என்றும் ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதை சுழலழியக்கம் (spinning motion ) 
அல்லது தற்சுழற்சி (spin ) என்றும் கூறுவர்.
பூமி சூரியனைச் சுற்றி வருவதோடு ,தன்னைத் தானே யும் சுற்றிக் கொள்கிறது. சூரியனைச் 
சுற்றி வருவதால் ஆண்டு காலச் சுற்று முறையில் பருவங்களும் ,தன்னைத் தானே சுற்றிக் 
கொள்வதால் இரவு பகலும் வந்து போகின்றன. 
பம்பரம் (top ) விளையாடுவோர் ,அதன் இயக்கங்களில் இவற்றோடு மற்றோர் வகையான 
சுழற்சி யியக்கம் இருப்பதை அறிவர் .தற்சுழலும் பம்பரம் ஒரே இடத்தில் இருந்து கொண்டு 
இயங்கினாலும், அதன் சாய்வான சுழலச்சு செங்குத்து அச்சை வலம் வரும். இவ்வியக்கத்தை 
ஆங்கிலத்தில் precession  என்றும் தமிழில் சாய்வுச் சுழற்சி என்றும் கூறுவர்.
Precession - சாய்வுச் சுழற்சி 
சில வேதிப் பொருட்கள் தம் மீது கட்புலனுக்கு உட்படாத கதிர் வீச்சுக்கள் விழும் போது, அவற்றை 
உட்கிரகித்துக்கொண்டு ,கட்புலனறி ஒளியாக வெளிவிடும் . இந் நிகழ்வை ஒளிர்வு /ஒளிர்மை 
என்பர். 
Luminescence - ஒளிர்வு/ஒளிர்மை 
பொதுவாக ஒரு பெயர் அல்லது வினைச்  சொல்லின் பொதுப் பண்பியல்புகளைக் குறிப்பிட மை விகுதிச் சேர்க்கை 
மிகவும் பயன் தருகிறது .
எ.கா. பெண் -பெண்மை 
ஆண் - ஆண்மை
ஆளு - ஆளுமை 

thermo luminescence - வெப்ப ஒளிர்மை 
சில புறத் தாக்குதல் இருக்குமட்டும் ஒளிரும் .வேறு சில புறத் தாக்குதல் நீக்கப் பட்ட பிறகும் ஒளிரும்.
fluorescence - உடனொளிர்வு /உடனொளிர்மை
Phosphorescence - நின்றொளிர்வு/ நின்றொளிர்மை 

resonance - ஒத்ததிர்வு 
nuclear  magnetic resonance - அணுக கரு காந்த ஒத்ததிர்வு 
resonator - ஒத்ததிர்வி /ஒத்ததிர்வான் 
displacement - இடப்பெயர்வு 
displacement  current - இடப்பெயர் மின்னோட்டம் 
பெயர்ச்சொல்லை பெயர் அடைச் சொல்லாக ,அர்த்தம் வேறுபடாமல் மாற்ற வு விகுதி இங்கு நீக்கப் பட்டுள்ளது .
damped  vibration /oscillation - தடை அதிர்வு/அலைவு 
undamped  vibration /oscillation - தடையிலா அதிர்வு /அலைவு 
forced vibration - தூண்டல் அதிர்வு /அலைவு 
lattice vibration - அணித்தள அதிர்வு/அணிம அதிர்வு 

equipartition - சமப் பகிர்வு 
transition temperature - (நிலைப் ) பெயர்வு வெப்ப நிலை 
analysis - பகுப்பாய்வு 
assay - தேர்வுப் பகுப்பாய்வு 
friction -உராய்வு 
static friction - ஓய்வு நிலை உறைவு 
dynamic friction - இயக்க நிலை உராய்வு 
by pass - குறுக்குப் பாய்வு 
abstract - ஆய்வுரைச் சுருக்கம் 
relaxation time - தளர்வு நேரம் 
   
அதிர் விசை - heavy metal 
'கன உலோகம் ' எனப் பொருள் கற்பித்தால் அது தவறாகும் .ஒப்பு அடர்த்தி - 3 க்கும் குறைவாக உள்ள
அலுமினியம் ,மக்னீசியம் மற்றும் இவற்றின் கலப்பு உலோகங்கள் போன்றவை லேசான உலோகங்களாகும் .
யுரேனியம் ,பிளாட்டினம் ,தங்கம் போன்றவை கனமான உலோகங்களாகும் .இதற்குக் காரணம்
இவற்றில் பொருள் திணிவு அதிகமாக இருப்பதுதான் .ஒளிமயமான ஒரு மேடை அமைத்து ,பலவேறு 
இசைக்கருவிகளை மீட்டக்கூடிய கலைஞர்களை  அமர்த்தி ,உரத்த  சத்தத்துடன் இசை யெழுப்பி ஆடல் 
பாடல்களையும் சேர்த்தளிப்பதை 'Heavy metal ' என்றும் சுருக்கமாக 'metal ' என்றும் குறிப்பிடுகின்றனர் .
1970 களில் தீவிர அபிநயம் என்ற பொருளில் 'hard rock ' என்ற  சொல்லைப் பயன் படுத்தினர் ..இதற்குக் 
காரணம் இதில் பங்கேற்கும் இசைக் கலைஞர்கள் அனைவரும் உடல் அங்கங்களை தீவிரமாக அசைத்து 
இசைப்பதை வழக்கமாகக் கொண்டதுதான் .இவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்களாக ,நீண்ட தலை 
முடியுடனும் ,தோலாடை களை அணிந்தும் ,கழுத்தில் தடித்த தங்கச் சங்கிலியுடனும் ,காதில் 
கடுக்கனுடனும் காணப்பட்டார்கள் .
அதிர்  விசைக்குப் பழக்கமானவர்கள் தலை யசைப்பவர்களாக (head banger ) இருப்பார்கள் . இச் சொல் 
நடனமாடும் போது இசைக்கும் இணைக்கும் ஏற்ப தலை யசைப்பதிலிருந்து பிறந்ததாகும் .ஆனால் 
இன்றைக்கு இச் சொல் மதி கெட்ட மனிதர்களைக் (moron ) குறிப்பிடுவதற்கான துணைச் சொல்லாகப் 
பயன் படுத்தப்படுகிறது அதிவிசைக் கலைஞர் களின் நாகரிக வளர்ச்சியில் ஏற்பட்ட புதுமையாக்கத்தினால் எண்ணிறைந்த புதிய
சொற்கள் விளைந்துள்ளன .அதிர்விசையோடு விரைவுத் தன்மையும் கலந்த போது அதை 'hard core ' என்றும் 
'thrash ' என்றும் குறிப்பிட்டனர் ஒரு குறிப்பிட்ட வேறுபாட்டின் காரணமாக speed metal ,death metal என்று 
அதிர்விசைக் கலைஞர் களை அழைக்கின்றனர். 



.     

Saturday, November 5, 2011

Valarum ariviyal thamil

வு விகுதிச் சேர்க்கை - தொடர்ச்சி 


ozone depletion - ஒசோன் நலிவு /ஒசோ ன் மெலிவு 
இன்றைக்கு உலகில் வாழும் மக்கள் சுற்றுச் சூழல் பற்றிய பிரச்சனைகளில் சிக்கியிருக்கிறார்கள் .இதில் 
தீவிரமாக இருக்கும் அமில மழை,உலகளாவிய வெப்பமய மாக்கம் ,பசுமையக விளைவு இவற்றுடன் 
ஒசோன் மண்டலத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஊறுபாடும் சேர்ந்துள்ளது. 
ஒசோன் என்பது ஆக்சிசனின் ஒரு வடிவம் . நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் மூலக்கூறு இரு ஆக்சிஜன் 
அணுக்களைப் பெற்றிருக்கிறது .ஆனால் ஒசோன் மூன்று ஆக்சிஜன் அணுக்களைப் பெற்றிருக்கிறது .
வேதிக் குறியீட்டு மொழியில் ஆக்சிஜன் மூலக்கூறை O (2)  என்றும் ஒசோன் மூலக்கொரை O (3 ) 
என்றும் கூறுவர்.ஒசோனில் உள்ள இந்த அதிகப்படியான ஆக்சிஜன் அணு மக்கள் எதிர்பார்ப்பதைப் 
போல பாதுகாப்பிற்குக் காரணமாயிருக்கிறது .ஆனால் உண்மையில் ஒசோன் ஒரு நச்சுத் தன்மையுள்ள 
வளிமம் .சிறிதளவாக இருப்பினும் காசநோயால் அவதிப்படும் மக்களிடையே சுவாசக் கோளாறுகளை 
ஏற்படுத்தி விடுகிறது. கார் போன்ற தானியங்கு வண்டிகள் வெளியேற்றும் புகையின் மீது சூரிய ஒளி
ஊடு பரவும் போதுஉண்டாகும் ஒளியியல் மூடு பனியில் இது காணப் படுகிறது .

ஆனால் உயர் வளி மண்டலத்தில் ஒசோன் பூமிக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக அமைந்திருக்கிறது .
வளி மண்டலத்தைச் சூரிய ஒளியோடு ஊடுறுவும், தீங்கு விளைவிக்கக் கூடிய புற ஊதாக் கதிர்களை 
இந்த ஒசோன் மண்டலம் வடிகட்டி விடுகிறது. சூரிய ஒளிக் குளியலை எடுப்போருக்கு இது ஒன்றும் 
கவலையூட்டுகின்ற விஷயம் இல்லை. ஆனால் அதிகமான புற ஊதாக் கதிர்வீச்சு புற்று நோயைத் 
தூண்டக் கூடியது என்பத்குதான் துன்பந் தரக்கூடியது. வளி மண்டலத்தில் இந்த ஒசோன் மட்டும் 
ஒரு படலமாக இல்லாதிருந்தால் உலகில் உள்ள பல வகையான உயிரினங்கள் உயிர் வாழ முடியாத 
ஊர் இடர்பாடான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும் .

இது தொடர்பான ஓர் எச்சரிக்கையை 1980 -ல் அண்டார்டிக்கா துருவப் பகுதிக்கு மேலாக ஒசோன் 
மண்டலத்தில் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு துளை ஏற்படுத்தியது . மேலும் இந்த ஒசோன் மண்டலம் கொஞ்சம் 
கொஞ்சமாக அரித்தெடுக்கப்பட்டு இத் துளை அகன்று வருவதும் உறுதி செய்யப்பட்டது .இத் துளை பூமிக்கு 
பெருமளவு புற ஊதாக் கதிர்களை அனுப்பி வைக்கக் கூடியது என்பதால் பின்னால் தடுத்து நிறுத்திக் 
கொள்ள முடியாத பல தீங்குகளை ஏற்படுத்தி விடும் என எதிர்பார்க்கலாம் . இதையே இன்றைக்கு ஒசோன் 
துளை (ozone hole ) என்று குறிப்பிடுகின்றார்கள் .

ஒசோன் மண்டலத்தின் நலிவு CFC  என்று குறிப்பிடப் படுகின்ற குளோரோ புளுரோ கார்பன்களினால் 
தூண்டப்படுவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள்.புகை போக்கி வழியாக வெளியேறும் ஆலைப் புகையில்
இது ஒரு மாசாக இருக்கிறது. கார் போன்ற தானியங்கு வண்டிகள் உமிழும் புகை, வெப்ப மாற்றிகளில் 
பயன் படுத்தப்படும் குளிர்விப்பான்கள் ,தலை முடிச் சாயம் போன்ற வீட்டுப் பயன் பாட்டுப் பொருட்கள் 
மூலமாகவும் CFC மாசுகள் வெளிப்படுகின்றன. இதனால் இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் 
ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்பட்டது .கார் போன்ற உந்து வண்டிகளுக்கான எரி பொருட்களில் சிறப்புக் 
கலவைப் பொருட்களைக் கலந்து, அதன் கழிவில் மாசுகள் கட்டுப் படுத்தப் பட்டன. .சட்டங்கள் 
இயற்றுவதன் மூலம் இவற்றை மக்களிடையே கட்டாயப் படுத்தி விடலாம் .ஆனால் ஏற்கனவே 
வெளியேற்றப் பட்டு வளி மண்டலத்தில் தங்கியுள்ள CFC  மாசுகள் எவ்வளவு காலத்தில் 
இல்லாதொழியும் என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. 

இது ozone fear  (ஒசோன் பயம் ) என்றொரு துணைச் சொல் ஏற்படக் 
காரணமாய்  இருக்கிறது .பிறருக்குத்
 தெரியாமல் நாம் செய்கின்ற தவறுகள் எல்லோருக்கும் சேர்த்து  விளைவிக்கும் ஒரு பொதுவான  
தீங்கு தரும் அச்சமே 'ஒசோன் பயம் ' எனப்படுகிறது 
ozone hole - ஒசோன் ஓட்டை என்றும் கூறலாம் 
ozone cheating - ஒசோன்மை ஏய்ப்பு  

 

Friday, November 4, 2011

Valarum ariviyal thamil

வு விகுதிச் சேர்க்கை - தொடர்ச்சி

density என்பது செறிவு என்றும் அடர்த்தி என்றும் தமிழாக்கம் செய்யப்பட்டு பெரு வழக்கில் உள்ளது .
liquid density - நீர்ம அடர்த்தி 
charge density - மின்னூட்டச்  செறிவு 
current density - மின்னோட்டச் செறிவு  
condensation என்பது இறுக்கத்தால் ,வெப்பக் குறைப்பால் அடர்த்தியை அதிகரிக்கச் செய்யும் வழிமுறை .
இது பொருள் வளிம நிலையில் இருக்கும் போது இயலக் கூடியதாக இருப்பதால் வளிமச் செறிவிப்பு
என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது .
actinometer  எனும் கருவி ஒளி அல்லது கதிர் வீச்சின் அளவை அளவிட்டறிந்து தெரிவிப்பதால் அதைக்
கதிர் செறிவு மானி அல்லது ஒளிப் பொதிவு மானி என்று அதைக் கலைச்  சொல்லாக்கம் செய்யலாம் .
ஒளி குறுக்கீட்டு விளைவில் இரு வகையுண்டு .ஓரியல் ஒளியின் ஓரலையின் முகடும் அல்லது அகடும் 
மற்றோர் அலையின் முகடும் அல்லது அகடும் ஒன்று கூடும் போது ஒளிச் செறிவு பன் மடங்கு அதிகரிக்கும் .
மாறாக ஓரலையின் முகடும் அல்லது அகடும் மற்றோர் அலையின் அகடும் அல்லது முகடும் ஒன்று சேரும்போது 
ஒளிச் செறிவில் இருள் சூழும். இதை ஆக்கக் குறுக்கீடு என்றும் அழிவுக் குறுக்கீடு என்றும் கூறுவர்.
distructive interference - அழிவுக் குறுக்கீடு

விண்மீன்களின் வளர்ச்சிப் படிகளில் nova  என்பதும் ஒன்று. ஈர்பழிவின் இறுதிக் கட்டத்தில் உலவும் ஒரு 
விண்மீனை நோவா என்பர். .அந் நிலையில் அது விரிந்தும் ,சுருங்கியும் விந்தையான தோற்றங்களை க்
காட்டும். அதனால் இதை அழிவுறு விண்மீன் என்பர். 
super nova - உடன் அழிவுறு விண்மீன் 
இது போல கீழ் கண்ட சொற்களுக்கும் விளக்கமளிக்கலாம் 
acidity - அமில வலிவு ,அமிலமை
air leakage - காற்றுக் கசிவு 
current leakage - மின் கசிவு,
absolute expansion - சார்பிலா விரிவு 
luminosity - ஒளிப் பொதிவு
expertise - தேர்ந்தறிவு, தேர்மைத் திறன்
fossil fuel - தொல் படிவு எரிபொருள்
hologram - ஒருங்கைப் பதிவு , முப்பரிமாண ஒளிப்படம்
holography - ஒருங்கைப் பதிவியல் ,முப்பரிமாண ஒளிபடவியல் 
heat content - பொதிவு வெப்பம் ,வெப்ப அடக்கம் 
intensity - ஒளிச் செறிவு 
slope - சரிவு 
 positive - நேர் சரிவு 
 negative - எதிர் சரிவு 
ohmic contact - மின் நொட்டுறவு
glasnost - ஒளிவு மறைவற்ற தன்மை 
மிகைல் கோபச்சொவ் சோவியத் யூனியனில் பொதுவுடமைக் கொள்கையின் வீழ்ச்சிக்கு 
வழிவகுத்த ,நம்ப முடியாத அளவிற்கு ப் பெரிதும் வியப்பளித்த நிகழ்வுகளோடு இயக்கிக் 
கொண்டிருந்தார் .உலகம் இச் சீரமைப் பிற்காக விழாவெடுத்துக் கொண்டாடிக் கொண்டாடி
அவரைச் சிறப்பித்தது. அப்போது இரஷ்ய மொழியில் இரு புதிய சொற்கள் சேர்க்கப் பட்டன .
அவை பொருளாதாரச் சீர்திருத்தங்களை ப் புதுப்பித்தல் ,புதுமையக்கம் செய்தல் என்ற 
 பொருள் படும் 'பிரெஸ்ட் ரோயிக்கா ' , வெளிப்படைத் தன்மை ,மக்கள் பணத்திற்கு கணக்குக் 
காண்பித்தல் மற்றும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை என்ற 
பொருள் படும் கிளாஸ்நோஸ்ட் ஆகியவையாகும் .இதற்குத் தமிழில் முறையே திருத்தச் 
சீர்திருத்தங்கள் என்றும் ஒளிவு மறைவின்மை என்றும் கூறலாம் .  
.
       இராணுவ இரகசியங்கள் ,பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற சிலவற்றைத் தவிர அரசியல் வாதிகளின் ஒளிவு
மறைவின்மை என்பது நல்ல ஆளுமைக்கும் ஆட்சிக்கும் அடையாளமாகும் .ஆட்சி மாற்றத்திற்கான 
எண்ணங்களுக்குச் சிறிதும் இடம் கொடுக்காமல் ,ஆட்சியில் மக்கள் முழுநம்பிக்கை கொள்ள இது 
மறைமுகமான அளவுகோலாக இருக்கிறது .அடிக்கடி ஆட்சி மாறுகிறது என்றால் ஒளிவு மறைவின்மையில் 
ஓசோன் துளை என்று பொருள் .
ஒளிவு மறைவின்மை சில கிளைச் சொற்களையும் உண்டாக்கி இருக்கிறது .Glasnostify  என்பது ஒளிவு மறைவின்றி 
இருக்கச் செய் என்ற பொருள் படும் வினைச் சொல்லாகும் .இச் சொல்லை இங்கிலாந்து நாட்டு நிறுவனங்கள் 
புழக்கத்தில் ஏற்றுக் கொண்டுள்ளன.இதை ஒளிவு மறைவிலாக் கொள்கை என்று சற்று மாற்றி வர்ணிக்கிறது .                     
 

Valarum ariviyal thamil

வு -விகுதிச் சேர்க்கை -தொடர்ச்சி 
அண்டக் கதிர்கள் (Cosmic  rays ) புவி வளி மண்டலத்தை ஊடுருவிச் செல்லும் போது தன மிகுதியான ஆற்றலால் ,
இடைவரும் அணுக்களை அயனிக்கின்றன. அப்போது வெளியேறும் விளை துகள் களும் அடுத்தடுத்து அயனியாக்கம் 
செய்வதால் ,அவ்விடத்தில் கதிர் வீச்சு மழை போல பொழிகிறது . இதை ஆங்கிலத்தில் cascade  shower  என்றும் 
தமிழில் தொடர் பொழிவு என்றும் கூறுவார்.

விண்மீன்களின் வளர்ச்சிப் படிகள் அதன் ஈர்ப்பு விசையால் தீர்மானிக்கப் படுகின்றது .எரிபொருள் தீர்ந்த பிறகு 
அது குளிரத் தொடங்குவதால் ,ஈர்ப்பினால் ஏற்படும் சுருக்கத்தை ,அணுக்களின் வெப்ப இயக்கத்தால் தடுத்துக் 
கொள்ள முடிவதில்லை . அந்நிலையில் விண்மீன் ஈர்ப்பழி விற்கு உள்ளாகிறது. .இதை ஆங்கிலத்தில் 
gravitational  collapse  என்பர்.
gravitational  collapse - ஈர்ப்பழிவு        

படிகங்களில் பல வகைகள் உள்ளன. படிக மூல அலகான ஓரலகு செல்லின் (unit cell ) முகங்களின் எண்ணிக்கையைக் கொண்டும் ,பக்கங்களின் சாய்மையைக் 
கொண்டும் வரையறுப்பர். .இன  அடிப்படையில் 7  வகைகளும்,கட்டமைப்பு வேறுபாடுகளினால் 14  வகைகளும் உள்ளன .இவை உருவ வேறுபாடுகளினால்
மேலும் வகைப் படுத்தப் பட்டுள்ளன . 
triclinic - முத்திசைச் சரிவுள்ள 
monoclinic - ஒரு திசைச் சரிவுள்ள
 
collateral damage - துணை அழிவு 
திட்டமிட்ட இலக்கை விட்டுவிட்டு சில சமயங்களில் பெரும்பாலும் மக்களின் வசிப்பிடங்களில் குண்டுகள் வெடித்து அழிவை 
ஏற்படுத்தி விடுவதுண்டு .இராணுவத்தினர் இதை துணை அழிவு என்று வர்ணிப்பார். உலகப் பெரும் போருக்குப் பின் இந்த 
விளக்கம் வாழ்க்கையின் பிற துறைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு புழக்கத்தில் கையாளப்பட்டது. ஒரு நிறுவனத்தின் உற்பத்திப் பொருளை 
பற்றிய மோசமான விளம்பரம் அல்லது விமர்சனம் எப்படி அந்நிறுவனத்தின் பிற உற்பத்திப் பொருள்களின் விற்பனையைப்
பாதிக்கின்றது என்பதை விவரிப்பதற்கு இச்சொல்லைப் பயன் படுத்துகின்றார்கள் .அரசின் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையால் 
வேலையிழப்பு ஏற்படுவது போன்ற தூர திருஷ்டமான பின் விளைவுகளைப் பற்றி விளக்கமளிப்பதற்கு அரசியல் வாதிகளுக்கு 
இச் சொல் கைகொடுக்கிறது .
பயன் பாட்டில் இச் சொல் தீய பக்க விளைவுகளுக்கான மங்கல வழக்குச் சொல்லாகப் பயன் படுத்தபடுகிறது .ஆனால் இது பெரிதும் 
தொழில் நுட்ப முறையை ச் சாந்திருப்பதால் ,ஓரளவு குறைவான ,தவிர்க்க இயலாத அல்லது எளிதில் நியாயப் படுத்தக் கூடிய 
ஒருவகையான தீமை என்று கருதி யாரும் இதைப் பெரிய களங்கமாகக் குறிப்பிடுவதில்லை. 

தொலைக் காட்சி, கையடக்க தொலைபேசி போன்றவைகள் கூட துணை அழிவைத் தருகின்றன என்று சிலர் கூறுவர்.ஏனெனில் 
தொலைக்காட்சியால் செய்யும் தொழிலை மறப்பவர் ஏராளம் .குழந்தைகள் படிப்பில் அக்கறை செலுத்துவதில்லை .
தவிரவும் அதில் வருகின்ற மோசமான காட்சிகள் வளரும் குழந்தைகளின் மனதில் தீய எண்ணங்களையும் ,வன்மத்தையும் 
தூண்டிவிடுகின்றன.
 
sabbling  - தீய அழிவிற்கு எதிர்ப்பு 
இரத்த விளையாட்டுக்களை பலர் காணச் சகியார் . இந்த விளையாட்டுக்களை ஒருவர் தீவிரமாக எதிர்த்தால் ,அவர் ஓர் எதிர்ப்பு 
உணர்வைக் கொண்டுள்ளார் எனலாம் .நாச வேலையை அல்லது அழிவுப் பணியை வேட்டையாடுதலை இவ்வுணர்வு ஊக்குவிக்கும் .
இப்பணியைச் செய்வோரை தீய அழிவிற்கு எதிர்ப்பாளர் (sabs ) எனக் குறிப்பிடுகின்றனர். 
இந்தியாவில் மதத்தோடு தொடர்பு படுத்தி விலங்குகளை பலி கொடுப்பதை பரவலாகச் செய்து வருகின்றனர். விலங்கினங்களின் 
நலச் சங்கங்கள் இதை எதிர்த்தாலும் ,இது இன்னமும் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கடவுளின் அருளை, அதே 
கடவுளின் படைப்பொன்றை வரம்பு மீறி அழிப்பதால் பெறமுடியாது என்பதை அறியாதவர்களே இது போன்ற செயல்களில்
ஈடுபடுவதில் தங்களைக் கட்டாயப் படுத்திக் கொள்கிறார்கள். 'Sabbling ' என்ற சொல் உருவாகிவிட்டது. ஆனால் இந்தியாவில் 
இனமும் sabs தான் உருவாகவில்லை .      


Wednesday, November 2, 2011

வு -விகுதிச் சேர்க்கை 
தமிழில் 'வு' விகுதிச் சேர்க்கையால் உருவான சொற்கள் எண்ணிலா 
கலைச் சொல்லாக்கங்களிலும் இப் போக்கு பின்பற்றப்பட்டு பல புதிய 
சொற்கள் படைக்கப் பட்டுள்ளன . 
நிறமாலையியலில் ஒரு சில இயற்பியல் காரணங்களினால் 
அதிலுள்ள பட்டை வரிகள் விரிந்து காணப்படுவதுண்டு .
இதை ஆங்கிலத்தில் broadening  என்பர். இச் சொல்லை
அகல் விரிவு என்று சொல்லாக்கம் செய்யலாம் 
.
expanding  universe  - விரிவண்டம் 
expansion of universe - அண்ட விரிவு

இங்கு விரிவுக்கு 'பெருக்கம் ' என்ற சொல்லை ப் பயன்படுத்த 
முடியாது. .வேறு சில இடங்களில் அப்படியும் பயன் படுத்த 
முடியும் .

linear  expansion - நீள விரிவு /நேரிய விரிவு 
areal  expansion - முக விரிவு /பரப்பு விரிவு 
volume expansion - பரும விரிவு 
expansion of gas - வளிம விரிவு
expansion of liquid - நீர்ம விரிவு  
விரிவுக்கு 'பெருக்கம்' என்ற சொல்லும் இணக்கமானதே 
என்றாலும்,துணைச் சொற்களின் சுருக்கமான கலைச் 
சொற்களுக்கு அனுகூலமிக்கதாக இல்லை. 

coefficient of linear expansion - நீள விரிவுக் குணகம் 
coefficient of  areal  expansion - முக விரிவுக் குணகம் 
coefficient of  volume expansion - பரும விரிவுக் குணகம்
 
மின் கடத்தாப் பொருட்கள் (dielectrics ) ஒரு குறிப்பிட்ட உயர்
மின் புலத்தில் தன் மின் கடத்தாத் தன்மையை 
இழந்துவிடுகிறது..இதை dielectric breakdowan என்பர்.
.தமிழில் இதை மின் கடத்தாப் பண்பு முறிவு என்றோ 
அல்லது மின்கடத்தாப் பண்பிழப்பு என்றோ குறிப்பிடலாம்.
பிற துணைச் சொற்கள் 
breakdown point - முறிவு நிலை 
elastic limit - மீள்மை எல்லை / மீள் நிலை முறிவு 
முறிவுகளில் பல வகை உண்டு. அவற்றை 
intrinsic (or ) avalanche  breakdown - அக நிலை அல்லது மின் கிளர் நிலை முறிவு 
thermal breakdown - வெப்பக் கிளர் நிலை முறிவு 
chemical breakdown -வேதி முறிவு 
discharge breakdown - மின்னிறக்க முறிவு 
defect breakdown - படிக வழு முறிவு 

percipitation - வீழ் படிவு
electrolytic  deposit - மின்னாற்பகு படிவு  
cavity - உட்குழிவு
ozone depletion - ஓசோன் நலிவு

 brain drain - அறிவுச் சலனம் 
வளரும்  நாடுகள் இந்த அறிவுச் சலனத்தால் பாதிக்கப்பட்டு 
வருகின்றன. உள் நாட்டில் அறிவையும் திறமையையும் 
வளர்த்துக் கொண்ட இளைஞர்கள் உயர்ந்த ஊதியம் ,
திறமைக் கேற்ற வேலை மற்றும் பிற அனுகூலங்களுக்காக 
மேலை நாடுகளுக்குப் போய் பணியாற்றுகின்றனர். .
இதனால் தாய் நாட்டின் வளர்ச்சியில் ஒரு மந்தத்தனம் 
ஏற்படுகின்றது .பொதுவாக வளரும் நாடுகள் வேலைவாய்ப்பு 
கேற்ப கல்வி அல்லது கல்விக்கேற்ற வேலைவாய்ப்பு இவற்றை முன்திட்டமிட்டு வளர்த்துக்கொள்வதில் பலதரப்பட்ட 
கருத்துகளின் சங்கமத்தில் ஒரு முடிவுக்கு வரவியலாது ,
அதன் போக்கிற்கே விட்டு விடுகின்றன .அறிவுச் சலனத்தால் 
உள் நாட்டின் வேலை வாய்ப்புப் பிரச்சனையின் தீவிரம் 
தற்காலியமாகக் குறைந்தது போலத் தோன்றினாலும் அறிவியல்,தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார 
வளர்ச்சியில் தொய்வு ஏற்படுகின்றது .மேலும் நீண்ட காலப் 
போக்கில் இந்த அறிவுச் சலனம் ,நாகரிகத்தில் ஒரு 
விதமான கலப்பை ஏற்படுத்தி விடலாம். எடுத்துக் காட்டாக 
வெளி நாட்டிலேயே தங்கி விட்ட குழந்தைகள் ,
அவர்களுடைய நாகரிகத்தைப் பின்பற்றுவதையும் ,தாய் 
நாட்டின் நாகரிகத்தை மறுப்பதையும் சுட்டிக்காட்டலாம் .                            


 

valarum ariviyal thamil

வு -பின்னொட்டு விகுதி 
பொதுவாக 'வு' என்ற எழுத்து பின்னொட்டு விகுதியாகத் தன வினையடிகளுடன் மட்டும் சேர்க்கிறது. இச் சேர்க்கையில் 
ஒரு சொல்லொ ழுங்கு இயல்பாக அமைந்திருப்பதைக் காணமுடிகிறது .'வு' என்ற எழுத்தை ஈறாகக் கொண்டுள்ள 
ஈரெழுத்துச் சொற்களை நுணுகி ஆராயும் போது அச் சொற்களின் முதலெழுத்து உயிர் நெடில் அல்லது உயிர் நெடிலுடன் 
கூடிய மெய் எழுத்தாக இருக்கின்றன .
ஈரெழுத்துச் சொற்களில் வு - பின்னொட்டு விகுதி 
நெடில் -
 ஈவு ,ஏவு
நெடில்-மெய் - 
ஆ - காவு,சாவு ,தாவு ,பாவு,மாவு 
ஈ -சீவு,தீவு ,நீவு 
ஊ -கூவு,தூவு 
ஏ- மேவு 
ஓ-நோவு
ஓள- வௌவு

'வு' விகுதிச் சேர்க்கைக்கு இணங்கும் வினையடி ஈரெழுத்து டையதெனில்,வினையடியின் ஈற்றெழுத்து இடையின 
மெய்யாகவோ அல்லது உயிர் குறிலுடன் இணைந்த
 உயிர்மெய்யாகவோ  மட்டும் இருக்கிறது .
எ.கா. இடையின மெய் ஈற்றுடன் 
ய்- ஆய்வு,உய்வு ,ஓய்வு,சாய்வு,தேய்வு ,பாய்வு 
ர்- ஆர்வு,சார்வு,சோர்வு,தீர்வு,தேர்வு,வேர்வு,
ழ்- ஆழ்வு,தாழ்வு ,வாழ்வு 

இடையின மெய்களுள் குறிப்பாக ய், ர் ,ழ் மட்டுமே அதிகமாக உள்ளன.ல், ள் வழக்கில் இல்லை. வினையடிகளின் 
முதலெழுத்து நெடில் அல்லது நெடில் சார்ந்த மெய்யாக இருக்கிறது. வுகரச் சாரியை ஈறாக வகர ஒற்று இடைவரத் தமிழ் மொழியில் பல சொற்கள் உள்ளன. எ.கா. எவ்வு ,கவ்வு ,சவ்வு,தவ்வு,வவ்வு. இங்கு வினையடிகளின் 'வு'விகுதிச் சேர்க்கை மேற்கொள்ளப் படவில்லை. இவை தனிச் சொற்கள் மட்டுமில்லை.வு ஈற்றாய் உள்ள வினைச் சொற்களுமாகும்.முன்னதில் 'வு' விகுதிச் சேர்க்கை வினையடிகளைப் பெயர்ச் சொல்லாக்கு கின்றது .'வு'ஈற்றாய் 
உள்ள ஈரெழுத்து வினைச் சொற்களில் முதலெழுத்து குறில் அல்லது குறில் சார்ந்த மெய்யாக இருக்கிறது .
வு ஈற்று குறில் மெய் இடைவரும் மூவெழுத்துச் சொற்கள் 
வல்லினம் 
அ- மகவு,நெசவு,தடவு,கதவு,துறவு 
இ -நசிவு,முடிவு,முறிவு 
ஐ- அசைவு,அடைவு,சிதைவு,மறைவு.
மெல்லினம் 
அ -உணவு,கனவு
இ - துணிவு,கனிவு
ஐ- இணைவு,அமைவு 
இடையினம்
அ -உயவு,இரவு,செலவு,உவவு ,முழவு,அளவு 
இ -சரிவு,மலிவு,அழிவு,தெளிவு 
உ -மருவு ,கெழுவு , கொளுவு 
ஐ - விரைவு ,அலைவு,குழைவு,விளைவு .
'வு'உடன் முற்றுப் பெரும் மூவெழுத்துச் சொற்களில் இடையெழுத்துகள் தமிழ் மொழியில் உள்ள தனிச் 
சொற்களைப் போல அகர,இகர ,உகர ஐகார மெய்யீற்றுக் கொண்டுள்ளன .முதலெழுத்து குறிலாகவோ 
அல்லது குறில் சார்ந்த மெய்யாகவோ இருக்கிறது. 
'வு' உடன் முற்றுப் பெறும் மூவெழுத்து வினையடிகள் பெரும்பாலும் இடையின மெய்யுடன் குறிப்பாக ய்,ர்,ழ் 
இவற்றுடன் முடிவடைந்திருக்கின்றன.
எ.கா.
ய் உடன் : உராய்வு 
ர் உடன் : அமர்வு,ஒளிர்வு ,முதிர்வு 
ழ் உடன் : உறழ்வு ,மகிழ்வு ,நிகழ்வு ,நெகிழ்வு .மூவெழுத்துத் தன் வினையடிகளின் இடை யெழுத்து குறில் மெய்யாக இருக்கின்றது.இதில் இடையினம் 
காணப்படவில்லை. குறில் இடையினச் சேர்க்கையால் 'வு' விகுதிச் சேர்க்கைத் தவிர்க்கப்படுகிறது .
எ.கா. வளர்வு,துயர்வு,புரள்வு போன்ற சொற்கள் பெரு வழக்காற்றில் இல்லை .

பொதுவாக 'வு' ஈற்றுப் பெயர்ச் சொற்கள் மாற்றம் ஏதுமின்றி வினையடையாக இருக்கின்றன. எனினும் பின்வரும் 
வினைச் சொற்களின் முதலெழுத்திற்கு ஏற்ப புணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்கிறது .
எ.கா.     வு + அ = வ 
                வு + இ = வி
                வு + உ = அ 
                வு + ஐ = வை 

பெயர்ச் சொல் வினையடையாக இருப்பதைப் போல வினைச் சொல்லையே பெயரடையாகக் கையாள்வதும் 
உண்டு. வினைச் சொல்லையும் ,பெயர்ச் சொல்லையும் சேர்த்து உண்டாக்கும் இவற்றை வினைத் தொகை 
என்பர்..'வு' ஈற்று பெயர்ச் சொற்களின் வினையடி இதற்கு இணக்கமாகின்றது 
அறிதிறன் - intelligence
உராய் தளம் - Frictional surface
உணர் கருவி - Detector
கலைச் சொல்லாக வழிமுறைகளில் இந்நெறி முறை மிகவும் பயன் தரத்தக்கதாய் உள்ளது. கலைச் சொற்களைத் 
தொகை நிலையாக (unit term ) குறைந்த எண்ணிக்கையில் எழுத்துக்களை உடையதாக உருவாக்க முடிகிறது. 

வு ஈற்று சொற்கள் உகர ஈற்றுச் சொற்களாக இருப்பதால் ஒரு பொது நெறிமுறைக்கு உட்பட்டிருக்கின்றன .'கு' ஈற்று 
வினைச் சொற்களைப் போல 'வு' இற்றுப் பெயர்ச் சொற்களெல்லாம் பெயரடையாக மாறும்போது உகரம் கெட்டு
இகரம் புகுந்து யகரம் ஒட்டுகிறது. 
ஏவு - ஏவிய , தாவு - தாவிய ,பாவு - பாவிய 
தூவு - தூவிய , கூவு - கூவிய 

இது உகர ஈற்றுச் சொற்களுக்கு மட்டுமின்றி இகர ஈற்றுச் சொற்களுக்கும் ஒரு பொதுப் பண்பாகும். ஆனால் உகர ஈற்று 
வினையடிகளின் ஈற்றெழுத்து உயிர்மெய் களுள் எவ்வினத்தைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். இகர ஈற்று வினையடிகளின் ஈற்றெழுத்து மெல்லினம், இடையின வகை உயிர் மெய்யாக இருக்கும் போது மட்டுமே 
இப்பண்பு காணப்படுகிறது .
எ.கா. 
உகர ஈற்று : பேசு - பேசிய ,முந்து - முந்திய ,வறு- வறிய,எண்ணு- எண்ணிய ,
பின்னு -பின்னிய ,பெரு - பெரிய ,மேவு- மேவிய ,வலு -வலிய
இகர ஈற்று : இனி - இனிய ,உரி - உரிய ,இழி -இழிய,எளி- எளிய 

வல்லின உயிர் மெய்யானால் .த் விகுதிச் சேர்க்கை காணப்படுகிறது .

பறி- பறித்த .புசி- புசித்த ,பிடி-பிடித்த ,விதி -விதித்த 

'வு' ஈற்றுச் சொற்களின் வினையடி ஈறு மெய்யானால் 'வு' நீங்கி 'த' விகுதிச் சேர்க்கை செய்யப்பட்டு பெயரடைச் 
சொற்கள் உருவாக்கப் படுகின்றன .அப்போது 'ந்' இடைத்தோன்றும்

சோர்வு -சோர்ந்த ,ஆய்வு -ஆய்ந்த ,தேர்வு - தேர்ந்த ,தாழ்வு-தாழ்ந்த 
பாய்வு -பாய்ந்த ,வாழ்வு - வாழ்ந்த 
'வு ஈற்றுச் சொற்களின் வினையடி ஈறு இகர ,உகர ,ஐகாரங்களை ஈற்றாகக் கொண்டிருந்தால் த மற்றும் ய விகுதிச் சேர்க்கை இரண்டையும் ஏற்கிறது .ஆனால் அகர ஈறு 'த ' விகுதிச் சேர்க்கையை மட்டுமே ஏற்கிறது. இதில் 
'த' விகுதிச் சேர்க்கை பெயர் உரிச் சொற்களையும் ய விகுதிச் சேர்க்கை வினை உரிச் சொற்களையும் தருகின்றன .
உகர ஈற்று 
முடிவு - முடிந்த/முடிய 
மெலிவு - மெலிந்த/மெலிய 
மடிவு- மடிந்த/மடிய 
மலிவு- மலிந்த/மலிய 
இகர ஈற்று 
சரிவு -சரிந்த/சரிய
உரிவு -உரிந்த/உரிய 
ஒழிவு- ஒழிந்த /ஒழிய 
அழிவு - அழிந்த/அழிய 
ஐகார ஈற்று 
அலைவு -அழிந்த/அலைய 
அசைவு - அசைந்த/அசைய 
இசைவு - இசைந்த/இசைய 
இணைவு -இணைந்த/இணைய 
அகர ஈற்று 
அளவு - அளந்த 
உவவு - உவந்த 
துறவு - துறந்த 
இழவு - இழந்த.